பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தலைவி சென்ற இடமெல்லாம் ….

கொஞ்ச நாளைக்கு முன்பு பிரான்ஸுக்கு சென்று வந்தார் தலைவி, அதன் பின் உலக கோப்பையினை வென்று அசத்தியது பிரான்ஸ் சில மாதங்களுக்கு முன்பு திருச்சி வந்து சென்றார் தலைவி, இப்பொழுது காவேரி வெள்ளத்தில் மகிழ்ந்திருக்கின்றது திருச்சி தலைவி கால்பட்ட இடமெல்லாம் மகிழ்ச்சி பெருகும் என்பதை இனியாவது உலகம் புரிந்து கொள்ளட்டும்  

நெடுநாளைக்கு பின் மேட்டூர் அணை நிரம்பிவிட்டது

நெடுநாளைக்கு பின் மேட்டூர் அணை நிரம்பிவிட்டது, நீர் வரத்து அதையும் தாண்டி வருவதால் காவேரியில் பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது இந்நிலையில் தண்ணீரை கடலுக்கு விடாமல் இருக்க தமிழகம் கூடுதல் அணை கட்ட வேண்டும் என பல திடீர் புவியியல் நிபுணர்கள் கருத்து சொல்ல தொடங்கியாகிவிட்டது உண்மையில் காவேரியில் இருக்கும் அணைகளில் மேட்டூரே மிக பெரிது, தமிழக பாசன பரப்புகளை கருத்தில் கொண்டு அன்றே அப்படி கட்டபட்டிருக்கின்றது, வெள்ளையன் அப்படித்தான் கட்டி இருக்கின்றான் அதனை ஒப்பிடும் […]

அய்யாகண்ணு கோஷ்டியினை காணவில்லை

கல்லணை திறந்தாச்சிங்கிறதுக்காக நான் போய் விவசாயம் எல்லாம் பாக்க முடியாது ஹாஹாஹாஹா இஸ்ஸு காரும், ஏசி வீடும், ஊர்பட்ட பணமுமாய் வாழ்க்கை போய்கிட்டு இருக்கு இப்ப போய் அப்பா அப்பத்தா, முப்பாட்டன் முப்பாட்டி மாதிரி விவசாயம் பாருண்ணா எப்படி தம்பி, சுத்த பைத்தியகார தனமா இல்ல‌ ஹிஹிஹிஹிஹி…. அர்ரே தமிநாட்டு பிஜேபிஸ் இந்த மீடியா கார்த்திகை செல்வன் ஏதோ சொல்லிட்டாருன்னு நம்ம கட்சிக்காரன் சிலபேர் ஆள் யார்னு தெரியாம அவசரத்துல‌ சிவ கார்த்திகேயன் வீட்டுக்கு போறாங்களாம், ஒடி […]

பாகிஸ்தான் தேர்தல்

இரண்டாக பிரிந்தாலும் ஜெர்மன் என்பது மேற்கு ஜெர்மன் கிழக்கு ஜெர்மன் என இருந்தது, கொரியா வடகொரியா தென் கொரியா என்றிருகின்றது. ஆனால் இந்தியா மட்டும் இந்தியா பாகிஸ்தான் என பிரிந்தது, அதாவது பிரிக்கும்பொழுதே இது இரண்டும் இணைய கூடாத நாடுகள் என முடிவு செய்திருக்கின்றார்கள் இந்தியாவிற்கு ஊழலும், பாகிஸ்தானுக்கு ராணுவ ஆட்சியும் சாபக்கேடுகள். இந்தியாவில் ஒரு நாளும் ராணுவ ஆட்சி வராது என்பதும் பாகிஸ்தானில் ஊழல்வாதிகள் விரட்டி அடிக்கபடுவார்கள் என்பதும் ஒருவகையில் வினோதம் அப்படிபட்ட பாகிஸ்தானில் நாளை […]

மரியாதைக்கும் கண்ணியத்திற்கும் பெயர் போன சமூகம் தமிழ் சமூகம்

மரியாதைக்கும் கண்ணியத்திற்கும் பெயர் போன சமூகம் தமிழ் சமூகம் சபையில் எந்த வார்த்தைகளை பயன்படுத்தவேண்டும், எதனை பயன் படுத்த கூடாது என்ற வரையறை அச்சமூகத்திடம் இருந்தது, இதனால்தான் பழம் செய்யுள்களில் எல்லாம் அமங்கலமான, அசிங்கமான வார்த்தைகள் இருந்ததில்லை மலம் கழித்து வருதல் என்பதை கூட கால் கழுவி வருதல் என மிக நாகரீகமான சொன்ன சமூகம் இது அப்படிபட்ட சமூகம் பகுத்தறிவில் மூழ்கி இப்பொழுது கோவில் சிலைக்கு மாத தீட்டு உண்டா? என விவாதிக்கும் அளவு தரம் […]

டிரம்ப் இப்பொழுது ஈரான் பக்கம் வந்திருக்கின்றார்

வடகொரியாவினை அடக்கிவிட்டதாக நம்பிகொள்ளும் டிரம்ப் இப்பொழுது ஈரான் பக்கம் வந்திருக்கின்றார் ஈரான் அவ்வளவு எளிதில் அடங்கும் நாடு அல்ல, வடகொரியாவின் அமைப்பு வேறு, அதன் சூழல் வேறு ஈரானின் பலமும் அதன் நட்பும் அதன் பலமும் வேறுமாதிரியானவை சிரியாவில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட தோல்விக்கும், இஸ்ரேலுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலுக்கும் ஈரான் மகா முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது ஈரானை அடக்கும் பொருட்டு கடுமையான பொருளாதார தடைகளை கொடுத்தாலும் ஈரான் அடங்குவதாக தெரியவில்லை, அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கைகளை கொடுக்கின்றது […]

கருப்பு ஜூலை : 02

கருப்பு ஜூலை : 02 அந்த கலவரம் பெரும் கொடியவன்முறை, நாட்டின் குடிமக்களை அரசே கொன்றுகுவித்த பயங்கரம். அதுதான் உண்மையில் “இனபடுகொலை”, நடந்த கொடூரங்கள் அப்படி. தமிழர்களின் வீடுகள், அரசின் வாக்காளர் அடையாள பட்டியலின் நகலாக எல்லா ரவுடிகளின் கையிலும் கொடுக்கபட்டது, பெட்ரோல்கள் ரகசிய இடங்களில் சேமிக்கபட்டது. பாதாள உலக குண்டர் தலைவர்கள் எல்லாம் சிங்கள அமைச்சர்களோடு பேசிகொண்டே இருந்தார்கள். அதாவது கொஞ்சகாலமாகவே முன் தயாரிப்புகள் மிக கடுமையாக நடத்தபட்டிருந்தது. முதல் ஆயுதபோராளியான குட்டிமணிகுழு சிறையில் இருந்தது, […]

கருப்பு ஜூலை 01

கருப்பு ஜூலை 01 சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே ஏன் அதற்கு முன்பே சிலோன் என அழைக்கபட்ட பிரிட்டிஷ் காலத்திலிருந்தே இலங்கைக்கும் இந்தியாவிற்கும் அவ்வளவு சுமூக உறவு என சொல்லமுடியாது. ஒரு கட்டத்தில் சிலோனின் தலமையகத்தை சென்னைக்கு பிரிட்டிசார் மாற்றிய பொழுதே, “ஐயகோ இது இந்திய இணைப்பின் முன்னோட்டம்” என வரிந்துகட்டி பிரித்து சென்றவர்கள் இலங்கையர், உபயம் அனாரிகா தர்மபாலா எனும் அவர்களின் புத்தனின் தூதுவன் + யாழ்பாணதமிழர்கள். நேருகாலத்தில் 5 லட்சம் இந்தியா வம்சாவழி தமிழரை திரும்ப […]

தாழ்த்தபட்ட பெண் சமைத்தால் உண்ணமாட்டோம்

தாழ்த்தபட்ட பெண் சமைத்தால் உண்ணமாட்டோம் என எங்கோ அரசு பள்ளியில் அடம் பிடிகின்றார்களாம் உடனே கருப்புசட்டைக்காரர் சென்று நாங்கள் உண்போம் என அமர்ந்துகொண்டார்களாம் அப்பள்ளி நடப்பது அரசின் வரிபணத்தில், இந்த தீண்டாமைக்கு எதிராக அரசு என்ன செய்திருக்க வேண்டும்? சாதி பார்க்கும் ஊரில் பள்ளியே தேவையில்லை என மிரட்டி இருக்க வேண்டாமா? அதனை செய்யவில்லை, இம்மாதிரி விஷயங்களில் அரசை மிரட்டும் சக்திகளும் தமிழகத்தில் இல்லை இப்போதைக்கு தமிழகத்தில் மகா ஜாலியான மனிதர் பழனிச்சாமிதான். காரணம் அவர் செய்ய […]

போதகர் திருமணம் செய்தால் என்ன?

போதகர் திருமணம் செய்தால் என்ன? திருமணம் செய்துவிட்டு கிறிஸ்தவ ஊழியம் செய்ய முடியாதா? என‌ கேட்டு பிரிந்தான் மார்ட்டின் லுத்தர் கிறிஸ்தவ ஊழியகாரனுக்கு குடும்பம் பிள்ளைகள் என வந்தால் என்னாகும் என்பதற்கு இதுதான் சான்று இதனை சொன்னால் நம்மை ஆர்.எஸ்.எஸ் என்பார்கள், கிறிஸ்தவ எதிரி என்பார்கள் கிறிஸ்தவ போதகர்கள் குடும்ப ஆதிக்கமும், அந்த புனிதமான சேவை பணம் கொட்டும் தொழிலாகவும் மாறிபோனதே இந்த அடிதடிக்கெல்லாம் காரணம் இவர்களை விட காசுக்கு ஆசைபட்டு இயேசுவினை காட்டி கொடுத்து பின் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications