பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

லோகமான்ய பால கங்காதர திலகர்

அதுவரை காங்கிரஸ் இயக்கம் பிரிட்டிஷாரை விரட்ட முடியாது என்றே நம்பிகொண்டிருந்தது, உலக யதார்த்தபடி அதற்கு வழி இல்லாமலும் இருந்தது பிரிட்டிஷாரை எஜமானர்கள் என நம்பி உரிமை கேட்ட காங்கிரசில் முதன் முதலில் அவர்கள் அந்நியர்கள் என சொல்லி ஒரு குரல் ஒலித்தது அது பெரும் கலகத்தையும் ஏற்படுத்தியது மிக தைரியமாக அக்குரலை எழுப்பி பெரும் எழுச்சிக்கு வித்திட்டவர் பால கங்காதிர திலகர், அவரின் எழுச்சியே தேசத்தில் ஒரு அணலை எழுப்பியது, அது காந்தி காலத்தில் விடுதலையாக விடிந்தது […]

சபரி மலை பெண் அடிமைதன அடையாளமல்ல

சபரிமலை இந்து மத நண்பர்களின் மத அடிப்படை நம்பிக்கை. அதில் அவர்களின் ஆதார நம்பிக்கைகளை நொறுக்கும் வண்ணமோ, மனம் புண்படும்படியோ கருத்து சொல்ல யாருக்கும் உரிமையில்லை. அவர்கள் சமய ஆன்றோர்கள் முடிவுபடி செயல்படலாம், காலமாற்றம் எனின் அது நடைபெறலாம். அய்யப்பன் மலைமீது இருக்கும் சுவாமி, தன் பக்தர்கள் தன்னை காண எவ்வளவு இடர்களை தாண்டி வருவார்கள் என சோதித்து அறிய காத்திருப்பவர், எதனை எல்லாம் தியாகம் செய்கிறார்கள் என பார்த்து அருள் வழங்குவதில் அவருக்கொரு ஆனந்தம் அதனால் […]

குழந்தையினை ஏந்தும் குழந்தை

“மக்கள் செல்வி” , “ஏழைகளின் தாய்” “ “வாழும் நேரு” “குழந்தையினை ஏந்தும் குழந்தை” கூகுளில் முட்டாள் (Idiot) என்று தேடினால் டொனால்ட் டிரம்பின் படம் வரும் : பரபரப்பு கூகுளில் ஊர் சுற்றி, ஊதாரி என தேடினால் யார் பெயர் வருகின்றது என்ற சர்ச்சை இனி விரைவில் வரலாம். ஆயினும் உலக அழகி, தேவதை, பிரபஞ்ச பேரழகி என தேடினால் குஷ்பு படம் இன்னும் கூகுளில் வரவில்லை என்பதில் சங்கம் கவலை அடைகின்றது

சுப்பிரமணிய சிவா நினைவு நாள்

  அவர் பெயர் சுப்பராமன், ஆனால் பேசிவிட்டால் சிவ நடனம் போல பேச்சில் தாண்டவம் இருக்கும் அதனால் சிவம் என்றழைக்கபட்டார்,சுப்புராமன் சிவம் என்பது பின்னாளில் சுப்பிரமணிய சிவா ஆயிற்று தமிழகம் தந்த மாபெரும் தியாகி அவர். மிக சிறந்த மேடை பேச்சாளர், இந்துமதத்தின் மீது அபார பற்றுகொண்டவர். காந்திக்கு முந்தைய காலத்தின் தியாகி சுதந்திர போராட்டத்தில் காந்தியின் வருகை முக்கியமெனினும் இவர் போன்ற தியாகிகள் ஏற்றிவைத்த நெருப்பைத்தான் காந்தி பெரிதாக்கினார் என்பதில் அய்யமில்லை. சுப்பிரமணிய சிவா கிட்டதட்ட […]

கமல் , ரஜினி முதல்வராவதை விட எடப்பாடி அரசே நீடிக்கலாம் : சாருஹாசன்

டிரைவர் இல்லாத பஸ் சீனாவில் அறிமுகம் டயரே இல்லாத பஸ், இன்னும் பல பாகங்கள் இல்லாத பஸ்ஸை எல்லாம் தமிழக அரசு எப்பொழுதோ அறிமுகபடுத்தி ஆயிற்று. ஜி.எஸ்.டி., வரி குறைப்பு தேர்தலுக்காக அல்ல: தமிழிசை வரி குறைப்பு என்பது ஜி.எஸ்.டியினால் மிக கடுமையாக பாதிக்கபட்ட‌ தமிழிசை போன்ற பாஜகவினரின் வாழ்க்கை செலவினை குறைப்பதற்காக‌ என்பதை இனியாவது இந்தியா உணர்ந்துகொள்ளட்டும் கமல் , ரஜினி முதல்வராவதை விட எடப்பாடி அரசே நீடிக்கலாம் : சாருஹாசன் மூத்த அனுபவம் என்றால் […]

மோடியின் வெளிநாடு சுற்றுப்பயண செலவு 1484 கோடி

மோடியின் வெளிநாடு சுற்றுப்பயண செலவு இதுநாள்வரை 1484 கோடி : செய்தி இது விமான செலவு மட்டுமா என்றால் இல்லை, பிரத்யோக சமையலர்கள், பாதுகாவல் மகா முக்கியமாக உடைகள் என எல்லா விஷயங்களும் கலந்த செலவு காமராஜர் என்றொருவர் முன்பு இருந்தார், அவர் மிக சில நாடுகளுக்கே சென்றிருக்கின்றார், அப்படி சோவியத் ரஷ்யாவிற்கு பயணமானார் ஏன் காமராஜர் செல்கின்றார் என கேட்டார்கள், “நான் ஊர் சுற்ற போகலைண்ணேன், உல்லாச பயணம் போகலைண்ணென். பொதுவுடமை அரசு எப்படி மக்களுக்கு […]

பொங்கிவருது காவேரி

எத்தனை வாரியங்கள், எத்தனை போராட்டங்கள், அரசியல் செய்தாலும் காவேரி சிக்கலை தீர்க்கும் சக்தி வருண பகவான் என்பவரிடம் மட்டுமே இருக்கின்றது ஆடிமாத காவேரி என்பது எப்படி இருக்கும் என்பதை சில வருடங்களுக்கு பின் இப்பொழுதுதான் காண முடிகின்றது, கல்லணை திறக்கபட இருக்கின்றது நீண்ட காலத்திற்கு பின் ஆடிமாத புதுவெள்ளத்தில் ஆடிபெருக்கு கொண்டாட பட‌ இருக்கின்றது. காவேரி பெருகி வருவது மனதிற்கு நிறைவான செய்தி, காவேரி கரைவாழ் மக்களுக்கெல்லாம் வாழ்த்துக்கள் ஊரில் இருக்கும்பொழுதே அதை உணரமுடிந்தது, ஆம் நீண்ட […]

ராகுல்காந்தி பார்லிமென்டில் செய்தது

இந்த உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தை கவனித்தவர்களுக்கு புரியும், பிரான்ஸ் அட்டகாசமான யுத்தியினை வைத்திருந்தது அதாவது ஆட்டத்தின் பெரும்பான்மையான நேரங்களில் குரோஷியா வீரர்களிடமே பந்து இருந்தது, பல வியூகங்கள், பாஸ்கள் என அவர்களே பந்தினை கட்டுபடுத்தினார்கள், ஓடி ஓடி அலுத்தும் போனார்கள் பிரான்ஸ் அணி அவர்கள் அசந்த நேரத்தில் மிக நேர்த்தியாக புகுந்து தூள்பறத்தியது, பெரும்பாலும் அவர்கள் சக்தியினை வீணடிக்கவில்லை, குரோஷியா வீரர்கள் ஓடி ஓடி களைத்த வேளையில் அட்டகாசமாக கிர்ஸ்மேனும், மாப்பியும் நொறுக்கி […]

உங்கள் அனைவருக்கும் நன்றி

இந்த கொடும் கடினமான நாட்களில் நான் நினைக்க வேண்டியவர்கள் ஏராளம் உண்டு அதில் முக்கியமானவர் Midhun Chakkaravarthy திருச்சியில் இருந்து வாகனமும், இன்னும் பல உதவிகளையும் செய்த மறக்கமுடியாதவர் Periya Samy. அந்த உதவியால்தான் சரியாக சென்று காரியம் நிறைவேற்ற முடிந்தது Senthil Kumar Chennai, Kennady இருவரும் சென்னையில் இருந்து வந்திருந்தார்கள் போனில் விசாரித்த நண்பர்கள் ஏராளம், கிட்டதட்ட 1 வாரம் முழுக்க போன் ஒலித்துகொண்டே இருந்தது அதில் முகநூல் பிரபலம் முதல் கட்சி பிரபலம் வரை எராளமானோர் […]

அந்த கருப்பு வியாழன் மகா துயரமாக விடிந்தது

அந்த கருப்பு வியாழன் மகா துயரமாக விடிந்தது, எதை நினைத்து அச்சபடுகொண்டிருந்தேனோ அது நடந்தே விட்டது. தந்தை மறைந்தார் எனும் அந்த கொடும் செய்தி வாழ்வின் மிக பயங்கரமான தருணமாக நெஞ்சை கிழித்து போட்டது யாருக்கும் வாய்க்க கூடாத வினோத விதி அவருடையது. அவரின் 4 சகோதரகளில் ஒருவர் நிச்சயம் தர்மன் ஆனால் அவர் ஓரளவிற்கு மேல் உதவமுடியாதபடி விதி பிரித்தது. மீதி மூவரில் ஒருவன் துரியோதனன் ஒருவன் சகுனி இன்னொருவன் எந்த வகையிலும் வராத வகையறா. […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications