பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அடேய் மோடி சொம்புகளா

என்ன மோடி, நாமளும் 4 வருஷமா ஆள்றோம், அப்பெல்லாம் இல்லாமல் இந்தவருஷம் மட்டும் இந்திராவின் எமர்ஜென்ஸியினை அதிகம் பேசுகின்றீர்களே ஏன்? அப்போழுதுதானே, இன்னும் சில மாதங்களில் நாம் எமர்ஜென்ஸி கொண்டுவந்தாலும் சரியாக இருக்கும். டாலர் ஏறி ரூபாய் தமிழக பாஜகவாக படுத்துவிட்டது, பெரும் குழப்பம் வரலாம், அதனால் முன்னமே சொல்லி வைக்க வேண்டுமா இல்லையா? இந்திரா போலவா நாட்டுக்காக என்று எமர்ஜென்ஸி கொண்டுவருவீர்கள்? நம்புவார்களா? அட அழுது ஆர்பரிச்சி, உருண்டு புரண்டு இது சத்தியமாக நாட்டுக்கான்னு நம்ப […]

சில பாதிரிகள் தப்பாக இருக்கலாம் ….

வேறு என்ன மண்ணாங்கட்டிக்கு எங்கோ நடக்கும் மாட்டுகறி சர்ச்சைக்கும், மதவெறிக்கும் மொத்த இந்துக்களும் அப்படித்தான் இது இந்துத்வ வெறி, ஆர்.எஸ்.எஸ் சதி என குதிக்கின்றீர்கள்? நித்தி, ஜக்கி போன்ற சில பிராடு சாமிகளுக்காக மொத்த சாமியும் இந்து மதமும் பிராடு என பழிக்கின்றீர்கள்? மோசமானவர்களும் மகா நல்லவர்களும் எல்லா சாதியிலும் மதத்திலும் உண்டு, ஒரு சிலர் செய்வதை வைத்து மொத்த மக்களையும் சாடுவதை இனியாவது பாதிரிகள் நிறுத்தட்டும் “உன் கண்ணிலுள்ள தூசை எடு அதன் பின் உன் […]

அதென்ன ஜனனி “அய்யர்”?

அதென்ன ஜனனி “அய்யர்”, பெரியார் பூமியில் இப்படி ஒரு பெயர் இருக்கலாமா? அந்த அய்யர் பிக்பாஸ் வீட்டு தலைவராக இருக்கலாமா? இது ஆரியவாதம், இனவாதம், இந்துத்வா மோசடி. கமலஹாசன் அவர்களின் ரகசிய ஏஜென்ட் என ஏன் ஒரு பயலும் கிளம்பவில்லை எல்லா மதம், சாதியினரையும் நுணுக்கமாக உள்ளே அனுப்பி அங்கே அய்யரை ஆளவிட்டிருப்பது மோடி அரசின் பாசிச வெறியினை காட்டுகின்றது, பாஜகவின் ரகசிய அஜென்டாவினை காட்டுகின்றது என ஒரு பயலும் சத்தமே இல்லை ஒரு பயலும் கிளம்பமாட்டான் […]

நடிகனாக ஆகி இருந்தால் ஜெயலலிதாவோடு நடித்து இருப்பேன் : துரைமுருகன்

நடிகனாக ஆகி இருந்தால் ஜெயலலிதாவோடு நடித்து இருப்பேன் : துரைமுருகன் சொல்ல நன்றாகத்தான் இருக்கின்றது, ராமசந்திரன் விட்டிருப்பாரா? எஸ்.எஸ்.எஸ் ராஜேந்திரன் முதல் ஜெய்சங்கர், ரஜினி வரை ஜெயலிதாவோடு நடிக்க ஆசைபட்டு அவரிடம் வாங்கிய அடி கொஞ்சம் அல்ல‌ அவரின் வெறும் மிரட்டலிலே ஐதாராபாத்திற்கு அங்கு ஓடினார் சோபன்பாபு, அதுவும் ஜெயாவிற்கு கட்டிய தாலியினை கழற்றாமலே ஓடிவிட்டார், மதுரை பழக்கடை பாண்டி என்ன ஆனார் என்பது வரலாறு இதுபோக ரகசிய கதைகள் ஏராளம் உண்டு, கதைதான் ரகசியமே தவிர […]

முதல் தென்னிந்திய பிரதமர் பி.வி நரசிம்ம ராவ்…

சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இந்தியாவில் வட மாநிலத்தவருக்கே பிரதமர் பதவி இருந்தது, காமராஜர் தனக்கு வந்த வாய்ப்பினை ஏற்க மறுத்தார் முதன் முதலாக தென்னிந்தியாவினை சேர்ந்த பிரதமர் என நரசிம்மராவ் என்பவர்தான் அறியபட்டார், பெரும்பான்மை இல்லா நிலையிலும் 5 ஆண்டுகள் ஆட்சி புரிந்த சாகசக்காரர் மனிதர் தீவிர காங்கிரஸ்காரர், நல்ல திறமையான‌ அரசியல்வாதியும் கூட. ராமராவின் எழுச்சிக்கு பின்னும் ஆந்திராவில் காங்கிரஸ் இருந்ததென்றால் அது இவர்களை போன்றவர்களால்தான் நரசிம்மராவினை நினைக்கும் பொழுது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய […]

அமெரிக்கா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்..

ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தியா மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா எச்சரிக்கை இவர்கள் மட்டும் பாகிஸ்தானில் இருந்து பாசுமதி இறக்கலாம், சீனாவில் இருந்து இரும்பு இறக்குமதி செய்யலாம் ஆனால் இவர்களுக்கு பிடிக்காது என்பதற்காக இந்தியா ஈரானிடம் எண்ணெய் வாங்க கூடாதாம். முதலில் அமெரிக்கா மீது உலகநாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்டும்..

இவருக்கு அவர்கள் “மருது சகோதரர்களாக” தெரியட்டும்

இவருக்கு அவர்கள் “மருது சகோதரர்களாக” தெரியட்டும் ஆனால் மோடி எனும் எஜமானுக்கு வண்டி இழுக்கும் “எருது சகோதரர்களாக”த்தான் தமிழகம் ஓபிஎஸ் இபிஎஸ் என்பவர்களை பார்த்துகொண்டிருக்கின்றது   சேலம் 8 வழிச்சாலை குறித்து News7 தொலைக்காட்சியில் பல விஷயங்களை ஒளிபரப்புகின்றார்களாம், விழிப்புணர்வினை ஏற்படுத்துகின்றார்களாம் ஆனால் தேரிகாட்டு கடற்கரையில் அனுமதியின்றி வைகுண்டராஜன் கும்பல் தனி சாலைகள் அமைத்து கனிம வளங்களை சுரண்டிய காட்சிகள் இன்றும் உண்டு அந்த சாலைகள் பற்றி எல்லாம் News7 பேசுமா என்றால் பேசவே பேசாது..  காவல் […]

கால்பந்து உலகபோட்டி : அதிர்ச்சி மேல் அதிர்ச்சிகள்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சிகள் வருகின்றன‌ வலிமையான இத்தாலி அணி தகுதி பெறாமல் இந்த ஆட்டத்திற்கே வரவில்லை அவர்கள் வரலாற்றில் 50 ஆண்டு காலத்தில் அதுதான் முதல்முறை சாம்பியனும் அசைக்க முடியாத அணியுமான ஜெர்மன் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற முடியாமல் வெளியேறியது எல்லோருக்கும் கடும் அதிர்ச்சி இரண்டாம் உலகப்போர் காலதொடக்கங்களுக்கு பின்னால் அதாவது 80 ஆண்டுகளுக்கு பின்னால் இந்த வீழ்ச்சியினை சந்தித்திருக்கின்றது ஜெர்மன் சிலமுறை கோப்பையினை வென்ற , கடந்த உலக கோப்பையில் கலக்கி […]

வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் : நீதிபதி கிருபாகரன்

நீதிபதி கிருபாகரன் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என பரபரப்பாக பேசி இருக்கின்றாராம் பொதுவாக நீதிபதிகள் சட்டத்தின் அடிப்படையில்தான் பேச வேண்டும் அதுதான் விதி, அவர்கள் தகுதிக்கான விஷயம் சட்டத்தில் இல்லாத எதுபற்றியும் அவர்கள் பேசினால் அவர்கள் தரம் கெடும், இதனை நீதிபதி கவனத்தில் கொள்வது நல்லது வாரிசு அரசியல் என்பது அமெரிக்காவில் இருந்து வடகொரியா வரை உலகெல்லாம் நடக்கும் விஷயம், அரசியல் என்பது அப்படித்தான் ஜனநாயக நாட்டில் , ஆள்பவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொடுக்கபட்டிருக்கும் […]

தாமரை என்ன தமிழக பாலைவனத்திலா மலரும்??

காவேரியில் இன்னும் நீர்வரவில்லை, வருவது போலவும் குமாரசாமி பேசவில்லை முன்பு சீறிய ஒருபயலையும் தமிழகத்தில் இப்பொழுது காணவுமில்லை, ஐபிஎல் இங்கு நடக்காமல் போனதுதான் நடந்தது கன்னட தேர்தலில் சில விஷயங்களுக்காக இங்கு பொங்கி இருக்கின்றார்கள் என்பது மட்டும் புரிகின்றது கன்னட தேர்தல் முடிவு வந்ததில் இருந்து, அதுவும் பாஜக அரசு அமையாமல் போனதில் இருந்து எல்லோரும் அமைதி இது கண்டிக்கதக்கது ராகுல் முதல் ஸ்டாலின் வரை அரசியல்வாதிகளும், பாரதி ராஜா முதல் அங்கிள் சைமன் வரை போராளிகளும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications