பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பைத்தியம் கடிச்சா எவன் கேஸ் போட முடியும்?

இந்த சீமான் பய எல்லாம் என்னவெல்லாமோ பேசுறான், அவன விட்டுட்டு நம்மள பைத்தியம்னு சொல்ற அளவுக்கு வந்துட்டானுக‌ சில திமுககாரனவிட, அதிமுக காரன விட, சைமனின் தும்பிகள விட நாம ஒண்ணும் மோசமில்ல. ஆனா நம்மளத்தான் சொல்றானுக‌ பைத்தியம் என்ன செய்யும்னு காட்டிற வேண்டியதான், இனி அந்த வீரமணி மாதிரி ஆட்கள் காதை பிடிச்சி கடிச்சி வச்சிருவோம் பைத்தியம் கடிச்சா எவன் கேஸ் போட முடியும்?  

திமுகவின் வாரிசாக 3ம் கலைஞர் உதயநிதி வந்துவிட்டார்

ஈழத்தில் பிரபாகரன் என்றொருவர் போராளியாக இருந்தார், தொடக்கத்தில் நன்றாகத்தான் இருந்தார் ஆனால் பல போராளிகுழுக்கள் வர வர அவருக்கு என்னமோ ஆனது, எல்லோரையும் விரட்டினார் கொன்றார் தான் ஒருவன் மட்டும் சிங்களனை வெல்லலாம் என நம்பினார், பெரும் தவறுகளை செய்தார் கடைசி நேரத்தில் தன் தவறுக்கெல்லாம் காரணம் தான் எல்லோரையும் ஒதுக்கிவிட்டு தான் மட்டும் வந்தது என்பதை உணர்ந்தார், அத்தோடு செத்தார். நல்ல வாரிசை உருவாக்காமல் இருந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதையும் அதனால் ஈழ போராட்டமே […]

பெரியார் சாதியினை எதிர்த்து போராடினார் என்பதே சரி

பெரியார் இந்துமதத்தை எதிர்த்து போராடினார் என்பதை விட சாதியினை எதிர்த்து போராடினார் என்பதே சரி பெரியார் காலத்தில் உலகமெல்லாம் நாத்திகவாதம் இருந்தது, அது ஐரோப்பாவில் பாதியினை ஆண்டது, சீனாவில் எழும்பியது, வியட்நாமில், கொரியாவில், கியூபாவில் எல்லாம் பரவியது அப்படி உலகளாவிய பாதுகாப்பு இருந்தது, இந்தியாவின் பிரிட்டன் அரசும் இங்கு சில அரசிலுக்காக அதை அனுமதித்தது பின்னாளில் நேரு நாத்திகராக இருந்தாலும் இந்தியா அவரை கொண்டாடியது. நேரு நாத்திகராக இருந்தாலும் பக்தி மார்க்கத்திற்கு எதிரானவர் அல்ல‌ பெரியார் காலத்தில் […]

நடராசன் என்பவர் தமிழகத்தை பிடித்த ஒரு வியாதி

எம்.நடராஜன் என்பவர் மாபெரும் இன உணர்வாளர், தமிழ் தேசிய போராளி என்றெல்லாம் சிலர் கிளம்புகின்றார்கள். இவர்களை எல்லாம் சும்மா விட கூடாது இந்தி எதிர்ப்பு போராட்டம், கலைஞரின் அபிமானம் என இருந்த நடராசன் 1985களில் ராமசந்திரனை சந்தித்தபின்பு மாறிவிட்டார் ராமசந்திரனின் ஆளாக ஜெயலலிதாவினை கண்காணிக்கும் பொறுப்பு நடராஜனுக்கு கொடுக்கபட அங்கிருந்து ஆரம்பித்தது நடராஜனின் அரசியல் விளையாட்டு. இதில் தமிழுணர்வு, தமிழ் தேசியம் என்பதெல்லாம் சுத்தமாக இல்லை பிரபாகரன் சென்னையில் ராமசந்திரனால் சிறைவைக்கபட்ட பொழுதோ, இல்லை ராஜிவ் பிரபாகரன் […]

பரோலில் சசிகலா….

பரோலில் வந்த சசிகலாவினை மூன்றே நாளில் உள்ளே தள்ளும் விஷயத்தில் இறங்கி இருகின்றது தினகரன் தரப்பு அதாவது கணவர் நடராஜனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சசிகலாவிற்கு பரோல் கொடுத்தது சிறை, அதுவும் அரசியல் பேச கூடாது, யாரையும் சந்திக்க கூடாது, பேட்டி கொடுக்க கூடாது என ஏகபட்ட நிபந்தனை. இதில் ஒன்றை மீறினாலும் பரோல் ரத்தாகும் இப்பொழுது 25ம் தேதி காவேரி விவகாரம் தொடர்பாக தஞ்சையில் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது தினகரன் கோஷ்டி ஆனால் நடராஜன் […]

பெரியார் பெரியவரா ….

ஒரு சிலர் கிளம்பிவிட்டான் , அதாவது தமிழிசை பெரியார் பெரியவரா என கேட்டதற்கு உன் சமூகம் மேலாடை அணிய பெரியார்தான் காரணம் என கிளம்பிவிட்டான் பெரியார் ஜாக்கெட் வியாபாரி எனும் கோணத்தில் பேசினானோ என்னமோ? மேலாடை சர்ச்சை நடந்தது 18ம் நூற்றாண்டில், அதாவது மாவீரன் நெப்போலியன் காலம், அவன் ஐரோப்பாவில் வெற்றிகொடி நாட்டிய காலத்தில்தான் இங்கு கன்னியாகுமரி பக்கம் அக்கொடுமை நடந்தது. நாடார்கள் மட்டும் அல்ல, இன்னும் சில தாழ்த்தபட்ட சாதிகளுக்கு மேலாடை அணிய உரிமை இல்லை […]

அடிவாங்கி, தெருவில் பராரியாய் அலைந்து வளர்ந்த கட்சி திமுக‌

கண்ணீர் துளிகள், …சி மகன்கள் என்றெல்லாம் திமுகவினரை சொன்னார் பெரியார், நாங்கள் அவரின் பிள்ளைகள் என சொல்லி கடந்து சென்றது திமுக‌ நான்சென்ஸ் என திட்டினார் நேரு, உமக்கு நோ சென்ஸ் என சொல்லிவிட்டு அதன் போக்கில் இருந்தது திமுக‌ தேசவிரோத கட்சி என்றது காங்கிரஸ், காசுவிரோத கட்சி நாங்கள் என பதிலுக்கு கலாய்த்தது திமுக‌ கூத்தாடிகளை கொண்டு நாடகம் போடும் கூத்துகட்சி என்றார்கள், ஆம் இங்கு இருப்பவன் எல்லாம் பாட்டாளி, கூலி அவனில் ஒருவனான கூத்தாடியும் […]

பதற்றத்தின் உச்சியில் இருக்கின்றார் ஸ்டாலின்

தனது ட்விட்டர் பதிவு போலவே போலியாக உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையரிடம் ஸ்டாலின் மனு பதற்றத்தின் உச்சியில் இருக்கின்றார் ஸ்டாலின் இம்மாதிரி ஆயிரம் விஷயங்கள் வரும், செய்யத்தான் செய்வார்கள். இதனை அறிக்கையில் கண்டிக்கலாம் மேடைகளில் சொல்லலாம் ஒரு பெரும் கட்சியின் தலைவர் இப்படி கமிஷனரிடம் சென்று நிற்பது யாரும் ரசிக்க கூடிய காட்சி அல்ல. கலைஞர் மீது சொல்லாத அவதூறா அவரை தூற்றாத தூற்றலா? ஒரு இடத்திலாவது அவர் இப்படி நிற்க கண்டோமா? பொதுவாழ்க்கை என்பது […]

கிறிஸ்தவ பாதிரியாருக்கு பத்ம விபூஷன் விருது கொடுத்திருகின்றது பாஜக அரசு

கேரளாவில் நீண்டகாலம் பணியாற்றிய கிறிஸ்தவ பாதிரியாருக்கு பத்ம விபூஷன் விருது   கொடுத்திருகின்றது பாஜக அரசு வாழ்த்துகுரிய விஷயம், மதங்களை கடந்து சேவைக்காக கொடுத்திருக்கின்றார்கள் பாருங்கள் அவர் பிஷப்பாகவே இருந்திருக்கின்றார், திருச்சபையின் கார்டினல் அந்தஸ்து கூட கிடைக்கவில்லை ஆனால் இந்திய அரசு பத்ம விபூஷன் என சொல்லியிருக்கின்றது இதெல்லாம் மீடியாவிலும் வராது. தமிழிசையோ ராசாவோ பேசமாட்டார்கள் தமிழக பிஜேபி சாபம் இப்படி  

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications