பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சூப்பர் பங்காளி..கை கொடுய்யா…..

“பங்கு, சக்ஸஸ் .. அந்த ஜீயர் மறுபடி உண்ணாவிரதம் இருக்காராம், இனி பூரா பயலும் அந்த சண்டைக்கே கருத்து சொல்லிட்டு இருப்பான் இந்த நேரம் பார்த்து ஏதாவது கட்டணம் உயர்த்துறோம் இல்லை எதனையாவது ஏலம் விட்டுட்டு கம்மென்று இருக்கின்றோம் சரியா? சூப்பர் பங்காளி..கை கொடுய்யா. அந்த ஜீயருக்கு அரசின் அண்ணா விருது கொடுத்துரணும்யா”  

பிரமாண்ட அணிவகுப்பு ஆரம்பிக்கட்டும் : டிரம்ப்

தேசிய விழா அன்று மிக பிரமாண்ட ராணுவ அணிவகுப்பினை காட்டி மிரட்டியது சீனா ஏதும் விழா என்றால் தன் ராணுவ அணிவகுப்பை காட்டி அரேபிய பகுதியில் தானும் தாதா என காட்டிகொள்வது ஈரானிய பாணி தென்கொரியாவிற்கு விளையாட்டு வீரர்களை ஒரு பக்கம் அனுப்பிவிட்டு மறுபக்கம் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பை நடத்தி சண்டைக்கும் தயார், சமாதானத்திற்கும் தயார் என்கின்றது வடகொரியா டிரம்ப் பிரான்ஸ் சென்ற பொழுது பிரான்ஸும் அப்படி நடத்திகாட்டி வெறுப்பேற்றியது. இதனை எல்லாம் பார்த்த டிரம்பிற்கு அழுகையும் […]

இதே கண்கள்…

“ஓரு கண் உயிரை கொல்லும், ஒரு கண் உயிரை கொடுக்கும்” என வள்ளுவன் சொன்னான். “மானினும் மருண்ட கண்கள் தேனினும் இனிய கண்கள்..” என்றான் கம்பன் “விருந்தும் மருந்தும் உன் கண்களே..” என கவியரசர் சொன்னார். அவை சாட்சாத் இந்த கண்கள்தான், இதே கண்கள்.

திருப்பூர் பக்கம் ஆய்வுக்கு சென்ற ஆளுநருக்கு கருப்புகொடி

திருப்பூர் பக்கம் ஆய்வுக்கு சென்ற ஆளுநருக்கு கருப்புகொடி காட்டி எதிர்ப்பு இந்த ஆளுநருக்கு என்ன சிக்கல்? வேலை இல்லாத சிக்கல் வேறு ஒன்றுமில்லை. ஜெயா இருந்தால் அனுதினமும் அமைச்சர்களை மாற்றி பட்டியலை அனுப்பிகொண்டே இருப்பார், ஆளுநருக்கு வேலை இருந்தது மாற்றபடும் அமைச்சர்கள் பட்டியலுக்கு கையெழுத்திட்டே அக்கால ஆளுநர்கள் களைத்துபோனார்கள். கலைஞர் முதல்வராக‌ இருந்தால் அவர் ஆட்சியினை ஏன் கலைக்கவில்லை என ஜெயா ஆயிரம் கேள்விகளை கேட்டுகொண்டே இருப்பார், மீறி பேசினால் சென்னா ரெட்டி நிலைதான். இதனால் ஜெயாவிற்கு […]

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் உண்ணாவிரதம் சாகும்வரை ஆரம்பித்தார். ..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் உண்ணாவிரதம் சாகும்வரை ஆரம்பித்தார். அந்த மார்கழி புரட்சிபடையினர் மானமுள்ளவர்கள் எனவும், இந்த ஜீயர் உண்ணவோ தண்ணீர் அருந்தவோ விடாமல் அவர் சாகும்வரை கிட்ட இருந்து பார்த்துகொள்வார்கள் எனவும் தமிழகம் வலுவாக நம்புகின்றது அப்படி இடையில் உண்ணாவிரதத்தை நிறுத்தினால் தமிழக மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்கும் நிலை வரும். ஜீயரே, சாகும்வரை உண்ணாவிரதம் என்றால் சங்கரலிங்கனார், திலீபன் , பூபதி அம்மாள் போல முடிக்க வேண்டும் இல்லாவிட்டால் விட மாட்டோம்.

அம்ம‌ணிக்கு கேக் என்றாலே அலர்ஜி போல..

அருவாள் வைத்து ரவுடிகள் கேக் வெட்டும் அளவிற்கு தமிழக நிலமை சென்றுவிட்டது அச்சமாக இருக்கின்றது : தமிழிசை அச்சமாக இருக்கிறது அல்லவா? சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என தமிழக ஆட்சியினை கலைக்க சொல்லுங்கள் பார்க்கலாம். கடப்பாரை எடுத்து மசூதியினை இடிப்பதை பார்த்தபொழுது வராத அச்சம், குஜராத்தில் கர்பிணி பெண்களெல்லாம் கொடூரமாக கொல்லபட்டபொழுது வராத அச்சம் அம்மணிக்கு ரவுடி கேக் வெட்டும்பொழுது வருகின்றதாம் அம்ம‌ணிக்கு கேக் என்றாலே அலர்ஜி போல..

ஹாவேர்டு தமிழ் இருக்கை

எதை செய்தாலும் அதில் ஆளாளுக்கு பலத்த சர்ச்சையும் கண்டனமும் இல்லாமல் ஒரு விஷயம் நடந்ததே இல்லை என்பது தமிழக விதி. எந்த விஷயம் என்றாலும் ஒரு கோஷ்டி ஆதரிக்கும் ஒரு கோஷ்டி எதிர்க்கும், ஒரு கோஷ்டி கழுத்தை பிடிக்கும் இன்னொன்று காதை பிடித்து திருகும், ஒரு கோஷ்டி ஊர்வலம் போகும், ஒரு கோஷ்டி கோர்ட்டு போகும், ஒரு கோஷ்டி போஸ்டர் அடித்து ஒப்பாரி வைக்கும் இப்படிபட்ட கலாச்சாரத்திலே மூழ்கிவிட்ட தமிழ் சமுதாயத்தில் இந்த ஹாவேர்டு தமிழ் இருக்கை […]

தோழர் Dhivya Anandக்கு திருமண நன்னாள் வாழ்த்துக்கள்

தலைவி குஷ்பு வீட்டு அருகிலே வசிக்கும் மாபெரும் பாக்கியம் பெற்ற, நம்மை உளவுபார்த்து அந்த வீட்டில் போட்டு கொடுகின்றாரோ என சந்தேக வளையத்திற்குள்ளும் உள்ள தோழர் Dhivya Anand இன்று திருமண நாளை கொண்டாடுகின்றாராம் சங்கம் அவருக்கு திருமண நன்னாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றது எல்லா தெய்வங்களும் இத்தம்பதியினை ஆசீர்வதிக்கட்டும் குஷ்புவும் அழகும் போல, குஷ்புவும் தைரியமும் போல இருவரும் இணைந்து பல்லாண்டு காலம் எல்லா வளமும் பெற்று வாழ சங்கம் வாழ்த்துகின்றது பிரபல தொழிலதிபரான தோழர் Dhivya Anand, குடும்பம் மற்றும் […]

காங்கிரஸ் அல்லாத இந்தியா, காந்தியின் கனவை நனவாக்குவோம் : : மோடி

காங்கிரஸ் அல்லாத இந்தியா, காந்தியின் கனவை நனவாக்குவோம் : : மோடி தனக்கு பொய்யினை தவிர வேறு எதுவும் பேசவராது என்பதை நிரூபிப்பதில் மோடிக்கு அப்படி ஒரு ஆர்வம் காந்தி என்ன சொன்னார்? சேவாதள் போன்ற அமைப்புகள் சுயநலத்தில் ஈடுபடுவதால் சுதந்திரத்திற்கு பின் காங்கிரசில் மாறுதல்கள் செய்ய வேண்டும் என்றார், காங்கிரசை மாற்றி வலுவாக்கிவிடுவாரோ என அதற்கு வாய்ப்பே கொடுக்காமல் சுட்டு கொன்றது இந்து வெறி கோஷ்டி. காந்தி இந்து தலைவராக இருந்தால் ஏன் சுடுகின்றார்கள்? அவர் […]

வைகோ திருந்திவிட்டாரா? இல்லை மோசமாக கெட்டுவிட்டாரா?

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கிறது மோடி அரசு : வைகோ ஆவேசம் இவரேதான் இந்தியா துண்டு துண்டாக உடையும் என அடிக்கடி சொல்லிகொண்டவர் இன்று இவரே மோடி ஒருமைபாட்டை உடைக்கின்றார் என கத்தவும் செய்கின்றார் மோடி இந்திய ஒருமைபாட்டை உடைத்தால் இவர் சந்தோஷடத்தானே வேண்டும்? ஏன் கோபபடுகின்றார்? வைகோ திருந்திவிட்டாரா? இல்லை மோசமாக கெட்டுவிட்டாரா?

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications