பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜெயலலிதாவின் வாழ்க்கையினை பற்றி வரும் படங்களில் ரம்யா கிருஷ்ணின் குயின் படமும் ஒன்று

ஜெயலலிதாவின் வாழ்க்கையினை பற்றி வரும் படங்களில் ரம்யா கிருஷ்ணின் குயின் படமும் ஒன்று நிச்சயம் ரம்யா கிருஷ்ணன் மிக சிறந்த நடிகை, அதுவும் பொறுப்பு மிக்க கனமான வேடங்களை தன் கண் ஒன்றினாலே கடந்து செல்லும் அசாத்திய நடிகை நிச்சயம் ரம்யா கிருஷ்ணனின் திறமை இன்னொரு நடிகைக்கு சாத்தியமில்லை 1985ல் இருந்து 35 வருடமாக களத்தில் இருப்பதெல்லாம் பெரும் விஷயம் அந்த கண்களில் எல்லா உணர்ச்சியினையும் அவரால் கொண்டுவரமுடிகின்றது, தமிழக நடிகைகளில் யாருக்கும் இல்லா சிறப்பு அதுதான், […]

உண்மை இருக்கும் இடத்தில் ஒரு தீர்க்கம் இருக்கும், ஒரு உறுதி இருக்கும்

உண்மை இருக்கும் இடத்தில் ஒரு தீர்க்கம் இருக்கும், ஒரு உறுதி இருக்கும் அது காமராஜரிடம் இருந்தது, இந்திராவிடம் இருந்தது இப்பொழுது நிர்மலா சீத்தாரமனிடமும் இருக்கின்றது, அதுதான் ஆணவம் என்றால் அது ஆணவமாகவே இருக்கட்டும் பொய் இருக்குமிடமெல்லாம் ஒரு கள்ளதனம் இருக்கும், யார் காலிலும் கூச்சபடாமல் விழும் நடிப்பு இருக்கும், மானம் வெட்கம் இன்றி யாரிடமும் கூட்டணி சேரும் ஒருவித திருட்டுதனம் இருக்கும், பசப்பு வார்த்தைகள் இருக்கும் அவர்களுக்கு தன் நலமும் தன் வருங்கால இருப்புமே முக்கியம், வேறு […]

எதிர்கட்சிகள் வெங்காயத்தை உரித்து அழுதுகொண்டிருக்கின்றன

தமிழ்நாட்டில் கருணாநிதி என்றொருவர் இருந்தார், கடவுள் மறுப்பு கொள்கையாளர். வாய்ப்பு கிடைக்கும் இடமெல்லாம் இந்துமதத்தை சீண்டிகொண்டே இருந்தார், சில இடங்கள் மகா மட்டமானவை ஆனால் கருணாநிதி மேல் யாரும் பொங்கியதில்லை, கோடிகணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டார், இவரெல்லாம் முதல்வராக தகுதியானவரா என்றெல்லாம் கேள்விகள் இல்லை இதெல்லாம் ஒருவரின் தனிபட்ட நம்பிக்கை என சொல்லி தந்திரமாக குனிந்துகொண்டார்கள் பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தது, வெங்காயம் பற்றி கேள்வி எழுப்பினார்கள். எகிப்தில் இருந்தும் இன்னும் பல தேசத்தில் இருந்தும் வெங்காயம் இறக்குமதி […]

சாமி மறுபடி இந்தியா வருவார் என்பது மட்டும் பொய்..

நித்திசாமி கோஷ்டி அதாவது நித்திசாமி அல்ல ஆனால் அவரின் சீட கோடிகள், சாமி தனிநாடு எல்லாம் அமைக்கவில்லை அவர் சொல்வது எல்லைகளற்ற ஆன்மீக உலகம், இந்த இணையம் போன்ற ஒரு உலகம் அதைத்தான் அமைக்க விரும்பி கைலாசா என பெயரிட்டிருக்கின்றார், மற்றபடி பரப்பபடுவது பொய்தகவல் என சொல்லிகொண்டிருக்கின்றது ஒருவேளை சாமி நாடு அடைந்தது பொய்யாக இருக்கலாம் சாமியின் எதிர்தரப்பு கட்டிவிடும் கதையாக இருக்கலாம் என்றாலும் சாமி ஐநாவுக்கு கடிதம் எழுதினார் என அடுத்த செய்தி வருவது இன்னொரு […]

சாதி என்பது சமூக அமைப்பே அல்ல, அது ஒரு மனகோளாறு

சாதி என்பது சமூக அமைப்பே அல்ல, அது ஒரு மனகோளாறு அதை சட்டம் போட்டோ, சலுகைகள் கொடுத்தோ ஒழிக்க முடியாது. காரணம் அந்த கோளாறு அதனை உரமாக எடுத்துகொண்டு ஓங்கி வளரும் தான் மேல்சாதி என நினைப்பது எவ்வளவு பைத்தியகாரதனமோ அதைவிட மகா மகா அறிவுகெட்ட விஷயம் தான் கீழ்சாதி என நம்புவது இவை மனதால் உருவாகும் வன்மங்கள் சட்டம் அதற்கு தீர்வு ஆகா.. அவர் அதை சிந்திக்க சொல்லிவிட்டு செல்லாமல் சாதியினை ஒழிக்கின்றேன் என விஷம் […]

வெங்காயம் ..

நிர்மலா வேளான் துறை அமைச்சர் அல்ல, எனினும் வெங்காய பிரச்சினைக்கு எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதியாகின்றது என சொன்னார் உடனே எதிர்கோஷ்டிகள் நீங்கள் எகிப்து வெங்காயமா உண்பீர் சுதேசி இல்லையா? என வம்பிழுத்தன‌ நிர்மலா நான் வெங்காயம் உண்பதில்லை என தன் பழக்கத்தை சொன்னார் அவ்வளவுதான் வெங்காயத்தை பற்றி கவலைபடா பார்ப்பண திமிர் அமைச்சர் என திராவிட கோஷ்டி கிளம்பிற்று “வெங்காயம் ..” அவர்களுக்கு அவ்வளவு பிடிகும் போலிருக்கின்றது

உள்ளாட்சி தேர்தல் குழப்பம் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிப்பதை இரு தரப்புமே விரும்பவில்லை

உள்ளாட்சி தேர்தல் நிறுத்துவது தொடர்பாக திமுக கொடுத்த மனுமீதான தீர்ப்பினை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது இந்நிலையில் புதிய 9 மாவட்டம் இருப்பதால் கொஞ்சம் யோசிக்க அவகாசம் வேண்டுமென அதிமுக அரசு புதிய மனு தாக்கல் செய்திருக்கின்றது ஆக திமுக அல்லது அதிமுக என இருவரில் ஒருவர் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தபோவது உறுதி இனி தமிழகத்தில் நேரடியாக சட்டமன்ற தேர்தலே, இருவரும் அதற்குத்தான் ஆசைபடுகின்றார்கள், உள்ளாட்சி தேர்தல் குழப்பம் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிப்பதை இரு தரப்புமே விரும்பவில்லை

போலோ கோஷ்டிகளால் வந்தது

அதுவரை வெடிபொருளை வைத்து வானவேடிக்கை, பட்டாசு என மகிழ்ச்சியாக இருந்தது சீன சமூகம் ஆம் வெடிபொருளை அவர்கள்தான் கண்டறிந்தார்கள், அதை வைத்து பண்டிகை அரசவிழா என கொண்டாடுவார்கள், மற்றபடி யுத்தம் என்றால் கோடாரி, வாள் , ஈட்டி சகிதம் கிளம்புவார்கள் மங்கோலிய பேரரசு போலந்துவரை பரவியதாலும் ஏற்கனவே பட்டுசாலை இருந்ததாலும் சீன ஐரோப்பிய போக்குவரத்து எளிதானது, கடல் வழி பாதையும் உண்டு, கடல்வழி பாதை என்றால் கப்பல் அரேபியா வரை வரும், அரேபியா சந்தையானது இப்படிபட்ட காலத்தில்தான் […]

மாறாக நிதி அமைச்சரிடம் எழுப்பினால்..?

போர் உச்சகட்டத்தில் இருந்தது, பிரபாகரனை நோக்கி கடும் தாக்குதல் நடத்தபட்டுகொண்டிருந்தது இங்கோ போரை நிறுத்தும்படி கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தார், ஆனால் போர் நிற்கவில்லை அவரிடம் கேட்டால் என்ன சொன்னார்? “மழை நின்றுவிட்டாலும் தூவானம் தொடர்கின்றது..” அங்கே என்ன குற்றால சாரலா அடித்துகொண்டிருந்தது? இதெல்லாம் தவறில்லையாம், ஆனால் நிர்மலா வெங்காயம் பற்றி சொன்னால் தவறாம் வெங்காய சிக்கலுக்கு விவசாய அமைச்சரிடம் அல்லது நுகர்பொருள் வாணிபதுறை அமைச்சரிடம் கேள்வி எழுப்ப வேண்டும், மாறாக நிதி அமைச்சரிடம் எழுப்பினால்..? அவர் அது […]

என்னடா பிளான்?

எதை வேண்டுமானாலும் பொறுத்துகொள்ளலாம் முக ஸ்டாலின் எடப்பாடியினை வாழப்பாடி என்பதை கூட சகித்துகொள்ளலாம், பன்னீர்செல்வம் நன்றி விசுவாசம் பற்றி பேசுவதை கூட பல்லை கடித்து சகிக்கலாம் ஆனால் நித்தி சீட கோடிகள் செய்யும் அட்டகாசம் தாளவில்லை, இதில் வெறிபிடித்த சங்கிகள் சிலவும் கலந்திருக்கின்றது, அப்படி ஒன்று வந்து பேசியது “அண்ணே, நீங்க விவரம் அறிஞ்சவருன்னு நினைச்சா இப்படி அப்பாவியா இருக்கீங்க, நித்திசாமி விவகாரத்துல நடக்குறதே வேற, அது நாடகம் அடேய் அது நாடகம்னு ஊருக்கே தெரியும் ஆனால் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications