பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அவர் வாழ்வினை படமாக்குகின்றேன் என வருகின்றானா?

ஜெயலலிதா இறந்து இரு வருடமாகின்றது, அதற்குள் அவர் கதையினை படமாகவும் வெப் சீரியலாகவும் ஆளாளுக்கு எடுத்துகொண்டிருக்கின்றார்கள், மூன்றுக்கும் மேற்பட்ட படங்கள் வரலாம் போலிருக்கின்றது அதாவது ஜெயாவின் கதைக்கு அவ்வளவு வரவேற்பு இருக்கும் என நம்புகின்றார்கள் கருணாநிதி என்றொருவரும் இருந்தார், கடைசிவரை சினிமாவினை பிரியாமலும் இருந்தார். சினிமாகாரர்களுக்கு அவர் செய்த சலுகை ஏராளம் எவனாவது ஒரு பயல் அவர் வாழ்வினை படமாக்குகின்றேன் என வருகின்றானா? அட அவர் குடும்ப நிறுவணங்கள் எவ்வளவோ படம் எடுக்கின்றன அவர் கதையினை பேரன்களாவது […]

அவனுகளும் அவனுக ஆராய்ச்சியும்

காவேரி பூம்பட்டினம் கடலில் மூழ்கி செட்டியார்கள் செட்டிநாடு வந்த கதைக்கும், இந்துமா கடலில் பழைய மதுரை மூழ்கிய கதைக்கும் வித்தியாசம் தெரியாத பயல் எல்லாம் தமிழருக்கு மீம்ஸ் போட்டு போதிக்க வந்துவிட்டான் சந்தேகமே இல்லை இதெல்லாம் தும்பிகள் அட்டகாசமாக மட்டுமே இருகும் மதுரை கடலில் மூழ்கியதால் வெகு தொலைவுக்கு சென்றுவிட்டார்களாம், எவ்வளவு தொலைவு தெரியுமா வெறும் 80 கிமீட்டர் அவனுகளும் அவனுக ஆராய்ச்சியும்

அந்த வீடு அப்படியேதான் இருக்கும்

“நான் எனக்காக ஒன்றையும் சேர்க்காதவன், தமிழர் நல்வாழ்வு ஒன்றிற்காக எல்லாம் இழந்தவன், என் ஒரே சொத்தான இந்த வீட்டையும் என் காலத்துக்கு பின் மருத்துவமனைக்கு எழுது வைத்துவிட்டேன்..” என அடிக்கடி சொன்னார் கருணாநிதி இன்று அவர் இல்லை ஆனால் அந்த வீடு அப்படியே இருக்கின்றது கருணாநிதி திமுகவினரின் நெஞ்சத்தில் வாழ்வதால் அவர் சாகவில்லை, சாகவும் மாட்டார். அதனால் அந்த வீடு அப்படியேதான் இருக்கும்

உலக தமிழர் வரலாற்றில் மிக மிக முக்கியமான படம் இது

உலக தமிழர் வரலாற்றில் மிக மிக முக்கியமான படம் இது மனைவி இலையில் எதை எடுக்கலாம் என கணவனும், தன் இலையில் இருந்து எதையோ எடுத்து அவன் இலையில் வைத்தானே என மனைவியும் தேடும் அற்புதமான காட்சி, சங்க தமிழனின் அகநானூற்று காட்சி “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் ” என சிலப்பதிகாரம் சொல்வது இதுதான் இதோ ஊட்டுகின்றது

உடல்பேறு குறைந்தோர் என வரவேண்டிய வார்த்தை

உடல்பேறு குறைந்தோர் என வரவேண்டிய வார்த்தை தமிழ்நாட்டில் மாற்று திறனாளி ஆயிற்று, எந்த திறமைக்கு மாற்று என கேட்டால் பெயர் வைத்தவனுக்கே தெரியாது பிறப்பினால் உடல்பேறு குறைவது கொடுமை, பிறப்பிலே இருந்து இருக்கும் அக்குறை பெரிதும் அவர்களுக்கு தெரியாது பழகியிருக்கும் அதிலும் சாதித்தோர் ஏராளம் உண்டு, சுழற்பந்து வீச்சாளர் சந்திரசேகர் முதல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் வரை அப்படியே ஒரு கண் இழந்தும் ஒரே ஒரு கண்ணால் சாதித்தவர் ஏராளம், தளபதி நெல்சன், மோசே தயான் முதல் […]

எப்படி தீண்டாமை சுவராகும்?

அது எப்படி தீண்டாமை சுவராகும்? அவன் நிலத்து எல்லையில் அவன் சுவர் கட்டியிருக்கின்றான், இது எல்லோரும் கட்டும் ஒரு விஷயம். கட்டிய சுவர் வலுவானதா? உறுதியாக கட்டபட்டதா என்பதுதான் விஷயம் மாறாக தீண்டாமைக்காக கட்டபட்டது என்பது மகா மகா அபத்தம் அறிவாலயத்து காம்பவுண்டு சுவரும் , விசிக அலுவலக சுவரும் தீண்டாமை சுவரா?

மில்லியன் டாலர் கேள்வி

விக்ரம் லேண்டர் சிதறிகிடக்கும் பாகங்களை கண்டறிந்துவிட்டதாக நாசா சொல்லிற்று, இந்தியாவின் தயாரிப்பு ஒன்று உடைந்து கிடப்பதில் அவ்வளவு சந்தோஷம் இதுபற்றிய ஆய்வில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் தீவிரமாக இருந்தார் எனவும் அவர்மூலமே இதைஉறுதி செய்ய முடிந்தது எனவும் நாசா சொல்கின்றது அவர் இங்கிருந்து கண்டறிய நாசா எதற்கு? சரி கண்டறிந்தவரை ஏன் தமிழகத்திலே விட்டு வைத்திருகின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை எப்படியாயினும் இந்தியா நிலவில் தொலைத்ததை ஒரு இந்தியன் கண்டறிந்துவிட்டான் ஆனால் இது விக்ரம் லேண்டரா என்றால் அங்குதான் […]

குதிராம் போஸ்

மிக சிறிய வயதிலே போராட வந்ததாக சொல்லி தனக்கும் தன் 70 தலைமுறைக்கும் சேர்த்துவிட்ட தமிழக திராவிட அரசியல்வாதிகளைத்தான் பலருக்கு தெரியும் மிக சிறிய வயதில் இந்தியாவுக்கு போராட வந்து நாட்டுக்காய் செத்த பலரை நமக்கு தெரியாது கவனியுங்கள், ஏழையாக செத்த ஒரு திராவிட தலைவனையும் நீங்கள் பார்க்கவே முடியாது, ஆனால் வரும்போது வெற்றுகையோடுதான் வருவார்கள் பிச்சைக்காரனாவது ஒரு திருவோடு ஏந்தி தெருவில் வருவான் அதுவுமில்லாமல் வந்து தெருவினையே வாங்குபவர்கள் திராவிட கோஷ்டிகள் அப்படிபட்டவர்கள் இருக்கும் இந்தியாவில் […]

கட்டியவன் யார்?

இவ்வளவு நடந்திருக்கின்றது, அந்த சுவருக்கு சொந்தக்காரன் யார்? கட்டியவன் யார்? அவன் மேல் நடவடிக்கை என்ன? என ஒரு செய்தியும் காணவில்லை. அரசு தரப்பிடம் பதிலே இல்லை தமிழக ஊடக தர்மம் அப்படி இருக்கின்றது, தமிழக அரசுக்கும் கொங்கு பாசம் அதிகம் முக ஸ்டாலின் ஓடி சென்று பார்த்திருக்கின்றார், அவரும் சுவருக்கு சொந்தக்காரன் யார் என கேட்கவே இல்லை, தானாக முளைத்த சுவர் என அவர் நம்பிகொள்வார் போல‌ இது பற்றி கேட்டால் “சுவர்தான் இடிந்துவிட்டதே இனி […]

நாம் 2012ம் ஆண்டே சொன்னோம்

நீங்களெல்லாம் அங்கிள் சைமனின் ஈழகாமெடியினை இப்பொழுது பார்க்கின்றீர்கள், நாம் 2012ம் ஆண்டே சொன்னோம் இவரை ஏன் கூலிகுரல் என்கின்றோம் என்றால் இதனால்தான், அன்று ஜெயலலிதா முதல்வராக இருந்தார் இவர் கருணாநிதியினை திட்டிகொண்டிருந்தார் அப்பொழுது ஒரு எம்ஜிஆர் விழா நடந்தது, இவரை கூலிக்கு பேச அழைத்தார்கள் அதுதான் இந்த வீடியோ அதில் நீங்கள் 6ம் நிமிடத்தில் இருந்து பாருங்கள், அதே பன்றிவேட்டை காமெடி அதாவது இவருக்கு ஆமைகறியினை பிரபாகரன் ஊட்டியபொழுது ராம்சந்திரன் எவ்வளவு நல்லவன் தெரியுமா என பிரபாகரன் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications