பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்தியா பாகிஸ்தானுக்கு விளையாட வரவேண்டும் : பாகிஸ்தான் கேப்டன் அழைப்பு

இனியாவது இந்தியா பாகிஸ்தானுக்கு விளையாட வரவேண்டும் : பாகிஸ்தான் கேப்டன் அழைப்பு எப்படி எல்லாம் இந்திய அணியினை கலாய்க்க தொடங்கிவிட்டார்கள்? எல்லாம் அஸ்வினும், ஜடேஜாவும் இருக்கும் தைரியம் யோவ், மனசாட்சியே இல்லாமல் இப்படியா கலாய்ப்பது, பாவம் அவர்களே நோந்துபோய் இருக்கின்றார்கள். இந்திய அரசு பாகிஸ்தானோடு சுட்டு விளையாடுவதை தவிர வேறு விளையாட்டு இல்லை என சொல்லிவிட்டது, அப்படி சொல்லி இந்திய அணியினை காப்பாற்றியிருக்கின்றது ஆனால் இந்தியர்களின் ஆசை என்னவென்றால் அவர்களை கொண்டு போங்கள், கதற கதற கிரிக்கெட் […]

இந்த பழநெடுமாறன் தமிழகத்தின் சாபம்..

அதிமுக ஆட்சியினை நீக்க கோரும் ஸ்டாலின் கோரிக்கை பேரவை மரபுக்கு எதிரானது: பழ. நெடுமாறன் முன்பு அடுத்த நாட்டு பிரச்சினைக்காக கலைஞரை பதவி விலக இந்த பழ.நெடுமாறன் சொன்னது எந்த மரபு? அடுத்த நாட்டு பிரச்சினைக்கு கலைஞர் பதவி விலக வேண்டும் என சொன்னது மரபாம், ஆனால் சொந்த மாநிலத்தில் காட்டாட்சி வேண்டாம் என சொல்வது மரபுக்கு எதிராம் இந்த பழநெடுமாறன் தமிழகத்தின் சாபம்..

தியாகிகள் தினம் : ஈழத்து சேகுவேரா 03

சென்னையில் கலைஞர் அரசு பாதுகாப்பு கொடுக்காத நிலையிலும் இந்தியாவில் தலைமறைவாக‌ இருந்தாலும் தமிழகம் வந்த அகதிகளுடனும், தமிழக அரசியல்வாதிகளினுடம், நல்ல தொடர்பில் இருந்தார் பத்மநாபா. அகதிகள் பிரச்சினையில் முன்னின்று குறைகேட்டு களைய முயற்சிப்பார். கலைஞர் அப்பொழுதுதான் முதல்வராக கிட்டதட்ட 13 ஆண்டுகள் கழித்து அந்த நாற்காலியில் அமர்ந்திருந்த நேரம், ஆனால் பத்மநாபா அவருக்கு நண்பர் என்றாலும், புலிகளை தமிழகத்தில் சுதந்திரமாக உலவவிட்டுருந்தார் அதற்கு அந்த கட்சியில் அப்போது பலமாக இருந்தபலபேர் காரணம். புலிகளின் தகவல் தொடர்பு, ஆயுதம்,பெட்ரோல், […]

தியாகிகள் தினம் : ஈழத்து சேகுவேரா 02

அப்பொழுதெல்லாம் புலிகளின் பலம் குறைவு, எல்லா குழுக்களும் இலங்கை ராணுவத்தை எதிர்த்து போராடின‌ ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு முகாமை தாக்க சிங்கள ராணுவம் திணறியது, இந்நிலையில்தான் நாங்கள் பெரியவர்கள் என சொல்ல தொடங்கினார்கள் புலிகள், சபாரத்னம் அவர்கள் எதிரியானார் அவரை கொல்லதேடும் பொழுது காப்பாற்ற நினைத்தவர் பத்மநாபா, வைக்க்கோல் லாரியில் அவரை காப்பாற்றி இந்தியா அனுப்பும் திட்டம் அவருக்கு இருந்தது, அதற்குள் சபாரத்தினத்தை கொன்றனர் புலிகள் பத்மநாபாவினையும் புலிகள் கொல்லதேட அவர் மோதலை விரும்பாமல் தலைமறைவானார், இந்நிலையில்தான் […]

தியாகிகள் தினம் : ஈழத்து சேகுவேரா 01

பிரபாகரனுக்காகவும் புலிகளுக்காகவும் செத்தவர்களை மாவீரர்கள் என சொல்லி ஒப்பாரி வைக்கும் கூட்டம் உண்டு, ஆனால் புலிகளால் கொல்லபட்ட தமிழ் போராளிகளுக்கு தியாகிகள் தினம் என அனுசரிக்கபடும் இந்நாளும் உண்டு அப்படியும் ஒரு நாள் அனுசரிக்கபடும், தமிழகத்தில் இதெல்லாம் தெரிவதில்லை, நாம் அனுசரிப்போம் ஜூன் 19ம் நாள் ஒப்பற்ற ஈழபோராளி பத்மநாபாவின் நினைவுநாள், கோடம்பாக்கத்தில் அவர் 1990ல் மரித்தபொழுதே ஈழம் இனி மலராது என அடித்து சொன்ன அனுபவஸ்தவர்கள் உண்டு, தமிழர்களின் பெரும் சிந்தனை செல்வம் அழிக்கபட்டுவிட்டது, இனி […]

இந்தியன் காண கூடாத‌ பாகிஸ்தான் அதிரடி

இந்த ஞாயிற்று கிழமை மாலை எல்லா தெய்வத்திடமும் ஜெபித்துவிட்டு, பாரதமாதாவிடமும் இந்திய அணிக்காக வேண்டிகொண்டு டிவி பக்கம் செல்லும்பொழுதுதான் அந்த அபாய அழைப்பு வந்தது சில தமிழக‌ போதகர்கள் வந்திருப்பதாகவும், தமிழில் ஜெபிப்பதாகவும் என்னை அழைத்தார்கள். அதாகபட்டது இங்குள்ள லோக்கல் ஜெபவீரர்கள் சபையில் தமிழ் பேசுவார்களே அன்றி தமிழை வாசிக்க சரிவர தெரியாது, அதனால் நம்மை அழைத்து வாசிக்க வைப்பார்கள், இந்த தமிழக போதகர்கள் போதிக்கும் பொழுது நீர் இருநதே ஆகவேண்டும் என அழைத்ததால் மறுக்க முடியவில்லை. நாம் […]

திரு AVT ஜனார்தனன் அவர்கள் பதில்

 திரு.Stanley Rajan … முகநூல் நட்பில் அனைவரும் அறிய வேண்டிய நல்ல அறிவாளி, இந்தியாவிலிருந்து மலேஷியா செல்லும் நட்புகள் அவரை காண்பதற்காகவே நேரம் ஓதுக்கி சந்தித்து வருகிறார்கள், பொலிவியா பற்றி எழுதுவார், ட்ரம்ப்பை விமர்சிப்பார், மோடியின் டிமான்டேஷன் ராஜபக்சேவின் கையலாகாத்தனம் சைனாவின் அத்துமீறல் பாக் .கின் சித்துவிளையாட்டு மலேஷியாவின் அரசியலமைப்பு மதங்களின் அத்துமீறல்கள், நம் சாதீய சண்டைகள் அரபு நாடுகளின் வளம், சிரியா இஸ்ரேல் தென்கொரிய அரசியல் அத்தனையும் அத்துப்படி. சீமானையும், வைகோவையும் கலாய்ப்பார்,திமுக வின் அதிலும் […]

இதுதான் சீமானிசம்

பெரியாரை, தந்தை என்று அழைக்கின்றீர்களே உங்களுக்கு ரெண்டு அப்பனா : சீமானிஸ்டுகள் இதற்கு பலர் பக்கம் பக்கமாக விளக்கம் அளிக்கின்றனர், சிம்பிளாக சொல்லிவிடலாம் அண்ணன் பிரபாகரன் என அடிக்கடி சொல்கின்றார் சீமான், தம்பி பிரபாகரன் என அடிக்கடி சொல்கின்றார்கள் வை.கோ, பழ. நெடுமாறான் கோஷ்டி அப்படியானால் அவர்களுக்கெல்லாம் இரு தகப்பனா? பெரியாரை “தந்தை” என அழைத்தால் கோபம் வருமாம், அங்கொரு கட்சி அதுவும் ஆளும் கட்சி “அம்மா அம்மா” என அழைத்தால் சத்தம் வராதாம், இதுதான் சீமானிசம்

இனிய தந்தையர் நாள் வாழ்த்துக்கள் !

பிள்ளைகளுக்காய் உழைத்து ஒய்ந்துவிட்ட தந்தையர்க்கும், அந்த தந்தைகளுக்கு இன்று தந்தையாய் தாங்கி நிற்கும் இளம் தந்தையருக்கும் தந்தையர் நாள் வாழ்த்துக்கள் தாயிடம் பாசம் மட்டுமிருக்கும், தந்தையிடம் தான் பொறுப்பான பாசமிருக்கும், அந்த பொறுப்பான பாசமே நல்வழியில் பிள்ளைகளை நடத்தி செல்லும் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது அவ்வளவு அழகான‌ பொன்மொழி, அனுபவக்கிமால் அதன் முழு அர்த்தம் உணர முடியாது ஒரு தோளில் தாய்தந்தையரையும் மறு தோளில் தன் குடும்பத்தையும் சுமக்கும் எல்லா இளம் தந்தையரும் […]

“அழகு தலைவர்” அல்லது “அழகின் தலைவர்”

புரச்சி தலைவர் , தலைவர் தலைவி எல்லாம் நமக்கு தெரியாது இந்த இளம் தலைவரோ, கிழம் தலைவரோ அதெல்லாம் நமக்கு தெரியாது, நமக்கு தெரிந்ததெல்லாம் இந்த “அழகு தலைவர்” அல்லது “அழகின் தலைவர்” மட்டுமே..