பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இது எமது இயக்கத்தின் தந்திரோபாய நடவடிக்கை, ஒரு ரகசிய தாக்குதல்

ஏய் கோடாரி காம்பே, எம் இனத்து மாவீரர்கள் தெரியுமா? அவர்கள் படைத்த வீரகாவியம் தெரியுமா? அதை தெரிந்தால் இப்படி எல்லாம் பேசுவாயா? கிட்டு முதல் தீபன் வரை எமது காவிய நாயகர்களை படி, பின்பு எழுது என கொதித்துவிட்டு சென்றார் ஒருவர். மற்றவர் விரகாவியங்களை ஒவ்வொன்றாக எழுதலாம், முதலில் கிட்டுவினை பார்க்கலாம். கிருஷ்ணகுமார் எனும் சுருக்கம் கிட்டு, இந்தியாவில் தான் பயிற்சிபெற்றார், இடங்களில் ஓடி ஓடி தப்பியவர், பிரபாகரனின் திருமணத்திற்கு காரணம் இவர்தான், இதற்கு மேல் அச்சம்பவத்தை […]

பிரபாகரன் எனும் நபரை போல நம்ப வைத்து கொன்றவர் யாருமே இல்லை

கொஞ்சம் யோசித்தால் பிரபாகரன் எனும் நபரை போல நம்ப வைத்து கொன்றவர் யாருமே இல்லை. அவர் வாழ்வு முழுக்க அதுதான் காணகிடக்கின்றது தனக்கு தேவையென்றால் ஒருவரை அணைப்பதும் , அவருக்கும் தனக்கும் பகை வந்தால் அதனை உறவாடிகொண்டே அவரை கொல்வதும் பிரபாகரனுக்கு கை வந்த கலை. யாரை தன்னை நம்ப வைப்பாரோ அவர்களை கொல்வதில் பிரபாகரனுக்கு நிகர் அவரே முதலில் ஈழதமிழக அரசியவாதிகளின் எடுபிடியானார், அவர்கள் துரோகி தூண்டிவிட்டதில் ஆல்பர்ட் துரையப்பா எனும் தமிழரை கொன்று கணக்கை […]

மாத்தையாவினை தன் கையாலே சுட்டுகொன்றான் பிரபாகரன்

மாத்தையா, அவரின் இயற்பெயர் மகேந்திர ராஜா. 1980களில் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருந்தார் அந்த இயக்கத்து தளபதிகளுக்கு ஒரு பலவீனம் இருந்தது அது 2009 வரை இருந்தது அதாவது பிரபாகரனுக்கு அடுத்து யார் எனும் போட்டி அது அன்று பிரபாகரனுக்கு அடுத்து கிட்டு இருந்தான், கிட்டுவுக்கும் மாத்தையாவுக்கும் மோதல் நடந்த நிலையில்தான் கிட்டுவின் கால் போனது. அது அந்த இயக்கத்தின் உள்மோதல் என்பதால் பொத்திகொண்டிருந்தார்கள் கிட்டு ஒரு சிங்கள வீரனின் காலை நல்லூர் கந்தசாமி கொவில் முன் […]

பெண் விடுதலை கொள்கை

1984ம் ஆண்டு மத்திய காலங்களில் ஈழமாணவிகள் சிலர் உண்ணாவிரதம் இருந்தனர், தங்களை வேறு பல்கலைகழகத்துக்கு மாற்ற கூடாது என யாழ்பாணத்தில் அவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர் பின்னாளில் திலீபனை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வைத்த புலிகள் இப்பெண்களை அனுமதிக்கவில்லை, உண்ணாவிரதம் எல்லாம் வெற்றுபிம்பம் என அப்பெண்களை மிரட்டி அழைத்து சென்றனர் அதாவது யார் உண்ணாவிரதம் இருக்கவேண்டும் எங்கே எப்படி இருக்கவேண்டும் என்பதை புலிகளே தீர்மானித்தனர், இப்பெண்கள் இருந்தால் தவறு, திலீபன் இருந்து செத்தால் அது தியாகம் சரி இப்பெண்களை […]

இந்தியாவுக்கு வாடிக்கையாகிவிட்டது

செயற்கை கோள் ஏவுவது சாதனை என்ற நிலை மாறி இந்தியாவுக்கு வாடிக்கையாகிவிட்டது, இன்றுஅட்டகாசமாக 10க்கும் மேற்பட்ட செயற்கை கோள்களை விண்ணில் நிறுத்தியிருகின்றது இஸ்ரோ ஆக இனி விண்வெளிக்கு அதிக செயற்கைகோள்களை அனுப்பிய நாடு எனும் இலக்கினை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது தேசம் வாழ்த்துக்கள்

யாருய்யா சீமானை கையாளும் அதிகாரி

“யாருய்யா சீமானை கையாளும் அதிகாரி, அவனால் இந்திய உளவுதுறை மானமே போகிறதய்யா? நாங்கள் இன்னும் மேலதிக பிரபாகரன் கதைகளை தருகின்றோம் அதையும் சீமானிடம் சொல்லுங்கள் எல்லோரும் சேர்ந்து சிரிக்கலாம் என கலாய்க்கின்றதய்யா இலங்கை உளவுதுறை, அந்த அதிகாரியினை அப்படியே வேலையினை விட்டு போக சொல்லுங்கய்யா…” என்ற சலசலப்பு இந்திய உளவுதுறையில் ஓடிகொண்டிருக்கின்றது என்கின்றார்கள்

போராட்ட இயக்கமா? இல்லை அஞ்சப்பர் ரெஸ்ட்டாரண்டா

அங்கிள், அது போராட்ட இயக்கமா? இல்லை அஞ்சப்பர் ரெஸ்ட்டாரண்டா ஆக விடுதலை புலிகள் என்ற பெயரில் முனியாண்டிவிலாஸ் வன்னிகாட்டில் நடந்திருகின்றது.. (ஆக சண்டையே போடாமல் தின்றுகொண்டே இருந்த ஒரு இயக்கம் மாவீரர் இயக்கம் என இங்கு அறியபட்டிருகின்றது, சிங்களன் எளிதாக நொறுக்கியிருக்கின்றான்..) https://m.facebook.com/story.php?story_fbid=2602318003154536&id=100001290865462

உங்கள பார்த்துத்தானே கருணாநிதி அவ்வளவு கெட்டுப்போனாரு

“அய்யா நாம் பூலோகத்தில் இருந்தால் திராவிட இயக்கத்தை காக்க வந்த திருமகனே, கருணாநிதி வீட்டு பெருமகனே என நம்மையும் வாழ்த்த சொல்லியிருப்பார்கள், நாமும் வாழ்த்தவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியிருப்போம் இயற்கை நம்மை காத்துவிட்டது நீங்க அங்க இருந்தா கண்டிப்பாய் அவரை வாழ்த்தியிருப்பீங்க அண்ணாதுரை, உங்களபத்தி எனக்கு தெரியாதா?, ராம்சந்திரனையே இதயகனின்னு சொன்னவருதான நீங்க‌ உங்கள பார்த்துத்தானே கருணாநிதி அவ்வளவு கெட்டுப்போனாரு..”

அண்ணன் பயப்படவே இல்ல

ஒரு நாள் ஒரு புலி அவசரமா அமெரிக்கா போகணும், சிங்களன் ஏர்போர்ட் வழியா போக முடியாது இந்தியா விடாது, எல்லா தளபதிகளுக்கும் கடும் பயம், கடல்வழி போனாலும் உடனே போகமுடியாது அண்ணன் வச்சிருக்க அதிவேக படகிலும் 1 நாள் ஆகும், ஆனால் அரைமணி நேரத்துல அமெரிக்கா போகணும் எப்படி? அண்ணன் பயப்படவே இல்ல சிரிச்சாரு, இதுக்காடா யோசிக்கங்க்ணு சொன்னாரு, சட்டுன்னு வான்படை தளபதிய கூப்பிட்டாரு காதுல ஏதோ சொல்லிட்டு மறுபடி சிரிச்சிட்டு பேப்பர் பார்த்துட்டு இருந்தாரு நாங்க […]

தமிழ்நாட்டில் மீத்தேன் எடுப்பதில்லை

இனி தமிழ்நாட்டில் மீத்தேன் எடுப்பதில்லை என சொல்லிவிட்டு கிளம்புகின்றது ஓ.என்.ஜி.சி போராளிகள் எல்லாம் தலையில் கை வைத்து அமர்ந்தாயிற்று, அட கிளம்பி செல்லும் ஓ.என்.ஜி.சிக்கு ஒரு நன்றி கூட இல்லை ஏன்? அது செல்வதாக இருந்தால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி குறைந்தபட்சம் திமுக ஆட்சியில்தான் செல்லவேண்டும், மாறாக இப்பொழுது எப்படி செல்லலாம் இதனால் தயவுசெய்து செல்லாதீர்கள் என சொல்லமுடியா சூழலில் வாய்பொத்தி நிற்கின்றது போராளி கூட்டம், மீத்தேன் என கத்திய ஊடகங்களும் மகா அமைதி…

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications