பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சோதனை மேல் சோதனை …. போதுமடா சாமி..

ஆர்.கே நகரில் பணத்தினை அள்ளி வீசுகின்றார்களாம், அவர்கள் ஆயிரம் என்றால் இவர்கள் இரண்டாயிரம், இவர்கள் இரண்டாயிரம் என்றால் அவர்கள் மூவாயிரம்… ஆக வாக்கு ஆரம்பம் ரூபாய் ஆயிரம்… இரண்டாயிரம்.. 4 ஆயிரம்…. 6 ஆயிரம் என பாண்டியராஜன் காமெடி போலவே வாக்கு ஏலம் நடக்கின்றது நடக்கட்டும், முடிவில் இவர்களுக்கு கிடைக்கபோவதென்னமோ “பிம்பிலிக்கி பிலாக்கி… குறிப்பாக “மாமாவுக்கு பிஸ்கோத்து….”   அக்காவிற்கு எவ்வளவு அறிவு பார்த்தீர்களா? இவர்களிடம் பணம், பிணம் எல்லாம் கிடையாது மசூதி இடித்தல், மாட்டு தொழுவம் […]

ஜெயா பொம்மை, அதற்கொரு மாலை.. ஹா ஹா ஹி ஹி ….

இங்கு அடிக்கொரு பூங்காக்கள் உண்டு, பசுமையான பூங்காக்கள் , சும்மா சொல்ல கூடாது, அரசின் வருமானத்தில் பாதி அதனை பராமரிக்கவே செலவாகலாம், அவ்வளவு சுத்தமாக வைத்திருப்பார்கள் காலையும் மாலையும் அதில் உடற்பயிற்சி செய்வோர் ஏராளம், அந்த பூங்காக்கள் அதிகாலையும் மாலையும் வேலைக்கு செல்பவர்களுக்கு,தினமும் காலை 8 மணிவாக்கில் ஒய்வுபெற்றவர்களுக்கு அவர்கள் அப்படித்தான் தினமும் கொஞ்ச தூரமாவது நடக்கவேண்டும் என்பது அவர்கள் வகுத்த விதி, நடக்க முடியாவிட்டாலும் ஊன்றுகோலோடு நடப்பார்கள். கோலும் அவர்களும் ஒன்றுபோல்தான் இருப்பார்கள் சிலர் நடப்பார்கள், […]

ஜெயலலிதாவை இதை விட யாரும் கேவலப்படுத்த முடியாது….

பெரும் விசுவாசிகள் என்றால், ஜெயா மருத்துவமனையில் இருந்தபொழுதே போர்கொடி தூக்கியிருக்கலாம்… இப்பொழுதும் ஜெயா மர்மத்தில் மர்மம் இருந்தால், தகுந்த ஆதாரமிருந்தால் வழக்கு தொடுக்கலாம், போராடலாம் அதனையெல்லாம் விட்டுவிட்டு ஆட்சி போனபின்பு கத்துவதும், ஜெயா பிணத்தோடு ஊர்வலம் செல்வதும் வேடிக்கையானது ஜெயா சடலம் போன்ற உருவத்தோடு, அவர் ஊர்வலம் போகட்டும், ஒப்பாரி வைக்கட்டும், நீதி வேண்டும் என தனக்குதானே கேட்டுகொள்ளட்டும் ஆனால் தேசியகொடியினை அந்த பிணபொம்மையின் மீது போர்த்தியிருப்பது எப்படி? கட்சி பிரச்சாரத்தில் தேசியகொடிக்கு என்ன அவசியம்? காட்டவேண்டியவர்கள் […]

தாதுமணல் பற்றி யாரும் பேசினால், சங்கமாய் பொங்கினார்கள் …. இன்று???

முன்பெல்லாம் தெற்கே தாதுமணல் பற்றி யாரும் பேசினால், சங்கமாய் பொங்குவார்கள் 50 ஆயிரம் குடும்பங்களுக்கு வாழ்வளிக்கும் தொழில் தெரியுமா? என பெரும் ஆர்ப்பாட்டம் செய்வார்கள், அந்த பிரச்சினையினை பேசிவிட்டு விஜயகாந்த் பட்ட பாடு கொஞ்சமல்ல‌ சீமான் முதல் நாடார் சங்கங்கள், நாகர்கோவில் பக்கம் எல்லாம் அப்படி சுனாமியாய் சீறினார்கள் அப்பொழுது ஜெயா முதல்வராக இருந்தார் இப்பொழுது தாதுமணல் தொழில் முடங்குகின்றது, நிச்சயம் அந்த 50 ஆயிரம் (அவர்கள் கணக்கு) குடும்பங்கள் பாதிக்கபட்டிருக்கும், ஆனால் எல்லோரும் அமைதி, நாடார் […]

நாளை முதல் தினகரனுக்கு பிரச்சாரம் செய்வேன் : சரத்குமார்

நாளை முதல் தினகரனுக்கு பிரச்சாரம் செய்வேன் : சரத்குமார் இன்று செய்யமாட்டார், காரணம் இந்த நொடியில் அவர் பன்னீர் செல்வம் அணியில் இருக்கின்றார், அதனால் நாளைக்கு … நொடிக்கு 100 பல்டி அடிக்கும் கின்னஸ் சாதனையினை சரத்குமார் செய்துகொண்டிருக்கின்றார், இப்படி ஒரு அதிவேக பல்டி யாரால் அடிக்க முடியும்? பாஜகவிற்கு ஓடி திரும்ப அதிமுகவிற்கு வந்ததை விட மகா வேகமானது இப்பொழுது நடந்தது பன்னீர் செல்வத்தை ஆதரிக்கின்றேன் என சென்று முழங்கிவர் இவர்தான், இப்பொழுது தினகரனே தெய்வம் […]

ஆர்.கே நகரில் பண மழை பொழிகின்றதாம்…

ஆர்.கே நகரில் பண மழை பொழிகின்றதாம், அம்மழையில் இந்த பங்குனி வெயில் கூட பனியாய் மக்களுக்கு மாறுகின்றதாம் வரலாற்றில் இல்லாத பணமழை என்கின்றார்கள், ஜெயா கூட இப்படி கொடுத்ததில்லையே என்ற அங்கலாய்ப்பு இருந்தாலும், அவர் ஒருமுறை மட்டும் இறந்ததில் அம்மக்களுக்கு மகா சோகம், அவர் இறந்ததால்தானே இந்த இடைதேர்தல் சாத்தியம், அடிக்கடி இறந்தால் எத்தனை இடைத்தேர்தல் சாத்தியம்… அமெரிக்காவில் குடியேற நடக்கும் போட்டி போல ஆர்கே நகரில் குடியேறவும் கடும் போட்டியாம், மொத்த மக்கள் தொகை திடீரென […]

“தோள் கண்டார் தோளே கண்டார்” என்ற கம்பனின் வரி பிரசித்தியானது

ராம நவமியில் ராமயாணம் பற்றி சொன்னால் கேள்வியாக கேட்டுகொண்டிருக்கின்றார்கள் நல்லது நாம் முழுக்க படித்தது கம்பராமாயணம், ஓரளவு படித்தது வால்மீகி மற்றவை எல்லாம் கண்ணில் படவே இல்லை கம்பராமாயணம் படித்தால் ராமன் கதையினை விட நெஞ்சில் தங்குவது கம்பனின் தமிழ், அவனது உருவகமும் கற்பனையும் கம்பன் ஏன் மிக பெரும் கவிஞன் என சொல்லபடுகின்றான் என்றால் அதற்காகத்தான், எப்படி அவனால் கற்பனையில் அவ்வளவு நுட்பமாக அன்றே ஒரு பேரழகு பெண்ணை சொல்ல முடிந்தது?? ஒரே ஒரு சாத்தியம்தான் […]

ஐ பி எல் …. ஆர்கே நகர் … கொண்டாட்டம் …

ஐபில் போட்டி கோலகலமாக தொடங்கிவிட்டது ஆனால் உண்மையான கிரிக்கெட்டை வளர்க்க கபில் தேவ் தொடங்கிய சி.சி.எல் என்ன ஆனது என்றோ, அதனை அழித்து அப்படியே பணமாக மாற்ற எண்ணிய லலித்மோடி என்ன ஆனார் என்பது பற்றியோ யாரும் கேட்க கூடாது கிரிக்கெட் என்றாலே வரும் சூதாட்டம் பற்றியோ, அதில் டோனி பெயர் வரை அடிபட்டது பற்றியோ யாரும் பேச கூடாது, சீனிவாசன் கூட களத்திற்கு வந்துவிட்டார் ஆதலால் மிகுந்த கட்டுப்பாட்டுடன் , ஆர்.கே நகர் தேர்தல் போல […]

தலாய்லாமா வந்ததில் பெரும் ஆச்சரியமல்ல….

ஒரு வழியாக தலாய்லாமாவினை அருணாசலபிரதேசத்திற்குள் இந்தியா அனுப்பிவிட்டது அது 1960ல் இருந்தே சிக்கலான பகுதி, அங்கு என்ன பெட்ரோ, தங்கம் , வைரம் உண்டா என்றால் ஒன்றுமே இலை பின் ஏன் சீனாவிற்கு அவ்வளவு ஆசை திபெத்தில் லார்சாவிற்கு பின் பெரும் புத்தமடம் அருணாசல பிரதேசத்தில்தான் உண்டு, அதுதான் சீனாவின் பயம், எங்கே புத்தமதம் கம்யூனிச சீனாவினை வீழ்த்திவிடுமோ எனும் பயம். தலாய்லாமா சீன எதிரியானது இப்படித்தான், அருணாசல பிரதேசம் எங்கள் பகுதி என அது சொல்வதும் […]

ஆப்பிரிக்க மாணவர்கள் மீதான தாக்குதல் இனவெறியா? சுஷ்மா வேதனை

ஆப்பிரிக்க மாணவர்கள் மீதான தாக்குதல் இனவெறியா? சுஷ்மா வேதனை டெல்லியிலும், நொய்டாவிலும் ஆப்ரிக்க மாணவர்கள் மீது நடத்தபடும் தாக்குதல் குறித்து ஆப்ரிக்க நாடுகள் இந்தியா மீது இனவெறி அதிருப்தி தெரிவித்தன‌ உடனே நமது அமைச்சர் சுஷ்மா சுவராஜ் “வேதனை” தெரிவித்துவிட்டார் இனி ஆப்ரிக்காவில் இந்தியர்கள் தாக்கபட்டால், ஆப்ரிக்க அரசும் “வேதனை” தெரிவிக்கும் ஆனானபட்ட சுஷ்மாவே “வேதனை” தெரிவிக்கும்பொழுது நாமும் “வேதனை” தெரிவிக்கலாம்..