பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்தியாவே தமிழகத்தை பார்த்து சிரிக்காதா?

“முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னை பார்த்து சிரிக்கக்கூடாது” ‍ : மு க ஸ்டாலின் இதுதான் கலைஞர் ஸ்டைல், இதில் கொஞ்சம் தேறுகின்றார் ஸ்டாலின் வரிபுலிக்கு பிறந்த குட்டிக்கு சில வரிகள் குறைவாக இருக்கலாம், ஆனாலும் புலிதான் உச்ச நீதிமன்றம் மண்டையில் தட்டி உள்ளே தள்ளியிருக்கும் ஒரு பொருளாதார குற்றவாளியினை, ஒரு மாநில முதல்வராக பழனிச்சாமி சந்திக்க முடியுமா? ஆனால் இவர் நிச்சயம் செல்வார். அப்படி சந்தித்தால் மொத்த இந்தியாவும் என்ன நினைக்கும்? ஒரு குற்றவாளியினை ஒரு […]

ஜெயா சமாதியில் சசிகலா அடித்து ….

ஜெயா சமாதியில் சசிகலா அடித்து ஏதோ முணுமுணுக்கின்றா, அடிமைகள் எல்லாம் ஏதோ கோயில் நடை திறந்தது போல பரவசநிலையில் கை கூப்பி நிற்கின்றார்கள் அடுத்து கூவத்தூரில் சவால் விடுகின்றார் சசிகலா, அங்கும் அடிமைகள் ஆர்பரிக்கின்றார்கள் இந்த காட்சியினை காட்டிவிட்டு சின்னம்மாவின் கர்ஜனைக்கு ஆளுநர் மாளிகை கதவு திறந்தது, சின்ன அம்மா ஆசிபெற்ற பழனிச்சாமி முதல்வரானால் என மகிழ்வோடு சொல்லிவிட்டு செய்திகளை முடிக்கின்றது ஜெயா டிவி அவர்களுக்கொரு தனி உலகம்… எடப்பாடி பழனிச்சாமிக்கு மோடி வாழ்த்து என்னது மோடி […]

மக்களாட்சியிலும் ஒரு மன்னர் ஆட்சி, மன்னார் குடும்ப ஆட்சி

முன்பெல்லாம் மன்னர்கள் காலத்தில் அம்மன்னர்கள் பக்கத்து நாடுகளில் சென்று கொள்ளையடிக்க வேண்டும், அதாவது வம்பிழுத்து போரில் வென்று, இரக்கமே இன்றி கொள்ளையடித்து தன் மக்களுக்கு கொடுக்க வேண்டும் இதுதான் வரலாற்றின் எல்லா அரசர்களும் செய்தார்கள், அலெக்ஸாண்டர் இதில் ஒருபடி மேலே சென்று கொள்ளையடிப்பதை தன் சிப்பாய்கள் வைத்துகொள்ளலாம் என ஊக்கபடுத்தினான், அவனின் பெரும் வெற்றிக்கு இந்த தந்திரமும் காரணம் பலமன்னர்கள் தங்கள் ராஜ்யங்களை பிரித்துகொடுத்தும் தன் பணியாளர்களை ஊக்கபடுத்தினார்கள். அதாவது கொள்ளை அடிக்க வழிகோலுபவன் தலைவன், அவன் […]

இதனையாவது செய்து நிரூபியுங்கள் மிஸ்டர் சைமன்…

அங்கிள் சைமன், அடிக்கடி மேடையில் அண்ணன் தந்த பயிற்சி, அண்ணன் சொன்ன போராட்ட தத்துவம், அண்ணன் சொன்ன துப்பாக்கி தத்துவம் , போராளிகள் சொன்ன தாக்குதல் நுட்பம், அங்க ஒரு அடி, இங்க ஒரு அடி அவ்வளவுதான் என அடிக்கடி சொல்லிகொண்டே இருப்பீர்கள் தமிழகத்தை மீட்பேன் என அடிக்கடி சொல்லிகொண்டே இருப்பீர்கள் எங்கே அந்த அண்ணன் பிரபாகரன் கொடுத்த பயிற்சியில் “களமாடி” தமிழகத்தை இந்த இக்கட்டிலிருந்து மீட்டெடுங்கள் பார்க்கலாம். குறைந்தபட்சம் தற்கொலை அங்கி அணிந்து, சயனைடு குப்பி […]

குதிரை பேரம் நடக்கும் : ஸ்டாலின்

15 நாட்கள் அவகாசம் ஏன் ? குதிரை பேரம் நடக்கும் : ஸ்டாலின் முடிந்தால் 4 கழுதைகள் , 2 எலிகளை பிடித்தாவது ஆட்சி அமைக்கவேண்டியதுதானே, அதனை விட்டுவிட்டு அங்கு குதிரைபேரம், யானை வியாபாரம் என பேசிகொண்டிருக்கின்றார் இப்படியே இருக்கவேண்டும், ஒன்றுமே செய்ய கூடாது, கடமைக்கு பேசவேண்டும், ஆட்சி தானாக வேளச்சேரி வீடுதேடி வரும் என நினைத்துகொண்டிருக்கின்றார் போலும்..

வளர்மதி , கோகுல இந்திரா…

 ஏம்பா டிவி கேமரா பாய்ஸ், வளர்மதி பேசிகிட்டே இருக்கு, பக்கத்தில இருந்து கோகுல இந்திரா அடிக்கடி உற்று பார்த்துகொண்டே இருக்கின்றது, கண்ணீரை அடிக்கடி துடைத்துகொள்கின்றது அதன் பார்வை நான் ஊமை இல்லை, நானும் பேசுவேன் என சொல்வது புரியவில்லையா? கொஞ்சம் அதனையும் 4 வார்த்தை பேசவிடுங்கப்பா, அது அம்மா, சின்னமாவிற்காக அழவில்லை, வளர்மதி எல்லாம் பேசும்பொழுது எனக்கு ஏன் ஒரு மைக் கிடைக்கவில்லை என அழுகின்றது கொஞ்சம் பேசத்தான் விடுங்களேன்.. ஆனாலும் ஜெயா சசிகலாவிற்கு அடுத்து தமிழகம் […]

அப்பாடா.. தமிழக பரபரப்பு ஒருவழியாக ஓய்ந்தது…

அப்பாடா..ஒரு வாரமாக நம்மை கட்டிபோட்டிருந்த தமிழக பரபரப்பு ஒருவழியாக ஓய்ந்தது, நள்ளிரவிலும் தூங்காமல் ஆந்தை போலிருந்து பிரேக் நியூஸ், பிளாஸ் நியூஸ் எல்லாம் தேடாமல் நிம்மதியாக தூங்கலாம்.. இனி இந்த ஆட்சி கவிழ்ந்தபின் இப்பக்கம் வந்தால் போதும், எப்படியும் சின்ன அம்மா கொஞ்சநாளைக்கு வரப்போவதில்லை, அவர்கள் காமெடியும் இடம்பெறாது இனி பன்னீர் தீபா குற்றசாட்டும், இந்த கோஷ்டி அந்த கோஷ்டியினை திட்டுவதும், அவர்கள் இவர்களை சீண்டுவதுமாக பாரம்பரிய விளையாட்டுக்கள் நடைபெறும் அதனால் இதனை கொஞ்சநாளைக்கு விட்டுவிடலாம்.. அதனால் […]

எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு

எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு ஆளுநர் தன் கடமையினை செய்திருக்கின்றார், விரைவில் எடப்பாடி ஆட்சி அமையலாம் ஆனால் அதிமுகவினர் கொண்டாட ஒன்றுமே இல்லை, மிகபெரும் சிக்கலும் சவாலும் இனிதான் ஆரம்பம் இந்த சூழலில் ஆட்சியினை அமைதியாக நடத்துவது என்பது பெரும் சவால், அதுவும் கட்சி உடைந்துள்ள நிலையில் நிச்சயம் பெரும் சவால் மிகசிறு சறுக்கலிலும் ஆட்சி கவிழ்த்துபோடும் வாய்ப்பு உண்டு, ஏன் நாளையே எம் எல் ஏக்கள் முகாம் மாறும் வாய்ப்பு பிரகாசமாக உண்டு எடப்பாடி அம்மா சமாதியில் […]

சிறையிலும் சுருட்டல்தான், விதி அப்படி.

சிறையில் மெழுகுவர்த்தி செய்கின்றார் சசிகலா பின்ன? நேரு , காந்தி , கலைஞர் போல சிறையில் இருந்து காலத்தை வென்ற கட்டுரைகளா இவரால் எழுத முடியும்? இல்லை எழுததான் தெரியுமா? என்ன தெரியும்? எதனையாவது சுருட்ட தெரியும் அப்படி கைகளால் மெழுவர்த்தி சுருட்டிகொண்டிருக்கின்றார், சிறையிலும் சுருட்டல்தான், விதி அப்படி. சசிகலா படித்த பள்ளி எது தெரியுமா? இப்படி ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கின்றது விகடன் ஏதோ சசிகலா நாசாவில் பயிற்சிபெற்று விண்வெளிக்கு சென்றது போலவும், பொருளாதரத்தில் பின்னி எடுத்து […]

இத்தோடு அந்த சனியன் ஒழியட்டும்…

எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா அக்கட்சியினரால் மிகுந்த அர்த்தத்துடன் கொண்டாடபடுகின்றது, இப்படித்தான் வேட்டி உருவி, அடித்து பிடித்து, மிரட்டி, கடத்தி, வசனம் எல்லாம் பேசி சிறைக்கெல்லாம் சென்று கொண்டாடபட வேண்டும். மிகுந்த கலவரத்திற்கிடையிலும், ஒரு அச்சமான சூழலிலும் கொண்டாடினால்தான் அவருக்கு பெருமை, அதுவும் கட்சி நிர்வாகிகளுக்கு எல்லாம் ஊழல்பணம் கோடிகளில் கொட்டும் நேரம், அதுவும் முன்னாள் இன்னாள் பொதுசெயலாளர் எல்லாம் பெரும் மோசடி பேர்வழிகள் என நீதிமன்றமே உள்ளே தள்ளியிருக்கும் நேரம் இதனை விட மிக சிறப்பாக‌ எப்படி […]