பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஏதோ பூனை போலிருக்கின்றது

இவர் இலங்கைக்கு செல்லலாம் ராஜபக்சேவினை பார்த்து பல்லிளித்து பரிசு வாங்கலாம், ராஜபக்சே “அட நீ இன்னும் உயிரோடா இருக்கின்றாய்..” என்றெல்லாம் கலாய்கலாம் அங்கு வாலை சுருட்டிகொண்டு ஈஈஈஈஈ என இளித்துகொண்டு வந்துவிடும் சிறுத்தை ஆனால் கோத்தபாயா இங்கே வந்தால் சிறுத்தை கர்ஜிக்குமாம் இது விடுதலை சிறுத்தை அல்ல, ஏதோ பூனை போலிருக்கின்றது

ஆனால் ஒரு விஷயம் சொல்லமுடியும்

திமுகவினர் முழு பூசனிக்காயினை சோற்றில் மறைக்கின்றார்களா இல்லையா என்பது வேறுவிஷயம் ஆனால் ஒரு விஷயம் சொல்லமுடியும் அக்கால திமுக பூசனியினை திருடிவிட்டு அட்டகாசமாக வந்துவிடும், ஆம் பூசனிக்காயினை கொடியில் இருந்து பறித்து நைசாக மறையும். இக்கால திமுக திருட தெரியாமல் பூசனிக்காயோடு அதன் கொடியினையும் இழுத்துகொண்டே போகின்றது, அந்த கொடியினை கயிறு போல் பிடித்து பின்செல்லும் எதிர்கோஷ்டி சரியாக பூசனி திருடனை தூக்கிவிடுகின்றது

உருப்படுமா இந்த தேசம்?

ஆக ஒரு பயலும் தன்னை நம்பி படிக்கவில்லை, தன் குழந்தைகளை படிக்க வைக்கவுமில்லை பூரா பயலும் இட ஒதுக்கீட்டை நம்பியே படிக்க வைத்து கொண்டிருந்திருக்கின்றான் மாறாக ஒழுங்காக படிக்க வைக்கவே இல்லை.. பின் இவர்கள் கற்ற கல்வி எப்படி இருக்கும்? இவர்கள் மருத்துவரானால் எப்படி இருக்கும்? உருப்படுமா இந்த தேசம்?

அம்மணிக்கு பயமாம்

ஒவ்வொரு நாடும் தங்கள் நாடு அமைதியாய் இருக்க படாதபாடு படுகின்றது. அருமை இந்தியா ராமர் கோவில் , காஷ்மீர் என இருபெரும் கடல்களை கடந்து அமைதியாய் இருக்கின்றது அது அம்மணிக்கு பயமாம் கருணாநிதி பாணியிலே பதில் சொல்லலாம் நாட்டின் அமைதிகண்டு யாருக்கு பயம்? உங்களுக்கு உங்கள் சர்வாதிகாரிக்கும் அவர் பெற்றிருக்கும் சீமந்த புத்திரனின் அல்லக்கைகளும் பயம்… அமைதியான இந்தியா தங்களுக்கு எதிர்காலம் இல்லாமல் செய்துவிடுமோ என்ற பயம்… இதுகாலம் ஏமாற்றி அரசியல் செய்த திராவிடம், பகுத்தறிவு, பிராமணியம் […]

ஒரு மாணவ பாதிரி தற்கொலை

குருத்துவ கல்லூரி என்பது கத்தோலிக்க பாதிரிகளை உருவாக்கும் ஆசிரமம், 7 முதல் 10 ஆண்டுகள் அவர்கள் பயிற்சிபெறும் இடம் அப்படிபட்ட கல்லூரி திருச்சியிலும் உண்டு, அங்கு ஒரு மாணவ பாதிரி தற்கொலை செய்திருக்கின்றான் போக்கத்தவனுக்கு போலிஸ் வேலை, வக்கற்றவனுக்கு வாத்தியார் வேலை என்பது போல அக்கால சொல் வழக்கு வழியில்லாதவனுக்கு பாதிரி வேலை என்பது அது ஒன்றும் ரகசியமல்ல, பெரும் குடும்பத்து பணக்கார வாரிசுகள் பாதிரி பணிக்கு செல்லாது, செல்வதெல்லாம் வறிய குடும்பத்து எளிய வீட்டு வாரிசுகள் […]

வட இந்தியாவில் பெரியார் வந்துவிட்டார்

வட இந்தியாவில் பெரியார் வந்துவிட்டார், வட இந்தியாவின் முதல் இந்து எதிர்ப்பு குரல் பெரியார் குரல் என ஏக இம்சைகள் வட இந்திய வரலாறு சொல்வதென்ன? அங்கு இந்துமதத்துக்கு எதிரான குரல்கள் வருவதும் பின் இந்துமதம் மீண்டெழுவதும் காலம் காலமாக நடக்கும் விஷயம் புத்தன் அதை செய்தான் இந்து மதம் மீண்டது மகாவீரன் அதை செய்தான் இந்துமதம் மீண்டது ஆப்கானியர் செய்தனர் இந்துமதம் மீண்டது குருநாணக் தனிவழி கண்டார் அவராலும் பஞ்சாபிய எல்லையினை தாண்ட முடியவில்லை அதுவும் […]

நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பியதாக சொல்லபடுகின்றது

குஜராத் ஆசிரமத்தில் குழந்தைகள் கடத்தபட்ட சர்ச்சையில் சிக்கிய நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பியதாக சொல்லபடுகின்றது இப்பொழுதெல்லாம் நித்திசாமியின் சீடர்கள் முகநூலில் அதிகம் உண்டு, ஏன் சாமியே முகநூலிலும் உண்டு குஜராத்தில் நடந்த சம்பவம் பற்றி சாமி தரப்பில் விளக்கம் இன்னும் அளிக்கபடவில்லை மாறாக குஜராத் காவல்துறை ஆணையரே சாமி வெளிநாட்டுக்கு தப்பியதாக சொல்கின்றார் துறவு என்பதும் ஆன்மீகம் என்பதும் வேறுமாதிரியானவை ரமண மகரிஷி இருந்தார், இந்த யோகிராம் சுரத்குமார் போல எவ்வளவோ மகான்கள் திருவண்ணாமலை பக்கம் இருந்தார்கள் ஓசைபடாத […]

பைத்தியங்களின் மறுபெயர் பெரியார் மண் போல..

அந்த கணிதமேதை வசிஷ்ட நாராயண சிங் தன்னிலை தெரியாமல் வீதிகளில் அலைந்தே காலத்தை முடித்துவிட்டார் இங்கிருக்கும் அரசியல்வாதிகளுக்கு வரவேண்டிய வியாதி விஞ்ஞானிக்கு வந்தது சோகம் அரசியல்வாதிகள் இங்கு அதுவும் தமிழகத்தில் இயல்பாகவே மனநோயாளிகள் அதைவிட பரிதாபம் அவர்கள் கோமாளிகள், தமிழ்நாட்டு சாபமாய் க‌டும் மனநிலை பாதிப்பு கோஷ்டிகள் அரசியலுக்கும் வந்துவிடுகின்றன, அதற்கு கைதட்டவும் 4 பேர் இருக்கின்றான் இந்த பைத்தியகார மாநிலம் பெரியார் மண் என அவைகளும் சொல்லிகொள்கின்றன. பைத்தியங்களின் மறுபெயர் பெரியார் மண் போல..

வசிஷ்ட நாராயண சிங்

அவர் பெயர் வசிஷ்ட நாராயண சிங். பிரிட்டிஷ் இந்தியாவில் பிகாரில் 1942ல் பிறந்தவர். அந்நாளைய நாலந்தா பல்கலைகழகம் இருந்த இடமான பீகாரின் ஞானம் அவருக்கு இயல்பாய் இருந்தது கணிதத்தில் அவர் தன்னிகரற்று இருந்தார் அந்த ஞானம் அவரை அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்கு இழுத்தது, 1950களின் அமெரிக்கா உலகில் யார் நன்றாக படித்தாலும் இழுத்து வைத்து படிக்க வைத்து பயன்படுத்தும் தேசமாய் இருந்தது அப்படி சென்றவர் நாராயண சிங் முப்பரிமாணம் தொடர்பான ஆராய்ச்சி கணக்கீடுகளில் அமெரிக்க பல்கலைகழகம் அவருக்கு டாக்டர் […]

வேறு எதாவது படித்து நாட்டுக்கும் சமூகத்தும் நல்லதை செய்

இட ஒதுக்கீடு இல்லாமல் நீயோ உன் குடும்பமோ பெரும் படிப்பினை இழக்கும்பொழுது உனக்கு தெரியும் வலி என்பவர்களுக்கான பதில் இதுதான் லால்பகதூர் சாஸ்திரி தன் மகனிடமும், காமாராஜர் மருத்துவ சீட் கேட்டு வந்த தன் தங்கை வாரிசிடமும் சொன்ன அந்த வார்த்தைதான் “அரசாங்கம் ஒவ்வொரு படிப்புக்கும் சில வரையறை வைத்திருக்கும், அரசாங்க சட்டத்தை எல்லோரும் மதிக்க வேண்டும் அதற்கு தகுந்தால் போல் உனக்கு மதிப்பெண் இருந்தால் நிச்சயம் சீட் கிடைக்கும், இல்லாவிட்டால் வேறு எதாவது படித்து நாட்டுக்கும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications