பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

எல்லை தாண்டி தாக்கியது இந்திய ராணுவம்

எல்லை தாண்டி தாக்கியது இந்திய ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி : கடும் பதட்டத்தில் எல்லைபகுதி இந்தியா தனது தாக்குதலை தொடங்கிவிட்டது என ராணுவ தளபதி அறிவித்திருக்கின்றார், பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியில் ராணுவ சீருடையிலும், இந்திய காஷ்மீரில் தீவிரவாதிகளாகவும் அலையும் ஏராளமான பாகிஸ்தானியர் கொல்லபட்டிருக்கின்றனர் அதிர்ச்சியில் இருக்கும் பாகிஸ்தான் 2 வீரர்கள் செத்ததாக ஒப்புகொண்டிருக்கின்றது. அதற்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை ஒரு பலசாலி தன்னால் முடிந்தமட்டும் பார்த்துவிட்டே தன் பலமிக்க ஆயுதத்தை இறுதியாக எடுப்பான், இந்தியா அப்படித்தான் […]

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியும் நடைபெறவில்லை நடந்தவரைக்கும் ஒரு அறிக்கையுமில்லை. கேட்டால் பதில் இருக்காது, கம்மென்று இருப்பார்கள். நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூரில் கிடைக்கபெற்றது என சில பொருள்களை பார்த்த நினைவு உண்டு அவ்வளவுதான். சென்னை எழும்பூர் மியூசித்தில் சில பொருட்கள் உண்டு. அவ்வளவுதான் ஆதிச்சநல்லூர் ஆராய்சி. பொருளாவது மிஞ்சி இருக்கின்றது. பண்டைய மதுரை பற்றி ஏற்கனவே குறிப்புகள் உண்டு, இப்பொழுது இருப்பது பண்டைய மதுரை அல்ல, அது சற்று தள்ளி வேரொரு இடத்தில் இருந்தது, பின்னாளில் அது அழிந்து […]

போன பிறவியில் நான் எழுத்தாளனா?

ஹஹஹஹஹா… அப்பொழுது நான் எழுத்தாளனா? அதனால் கொன்றே விட்டார்களா? என்ன இது?. சரி எவ்வளவு சம்பாதித்தேன் என்பதையாவது சொல்ல கூடாதா? இப்பொழுதும் எதனையோ கிறுக்கிகொண்டே தான் இருக்கின்றேன், இது விட்ட குறை தொட்ட குறையாக இருக்கலாம் … ஆனால் இப்பிறவியிலும் கொல்ல தேடலாம், யாராக இருக்கும்? சொல்லித்தான் தெரியவேண்டுமா? நிச்சயம் அங்கிள் பாய்ஸாகத்தான் இருக்கமுடியும் அல்லது பங்காளிகளாக கூட இருக்கலாம் .. எனினும் ஹானஸ்ட், இன்னோசென்ட் எல்லாம் நமக்கு இப்பிறவியில் சரிவராதவை. பெரும் அயோக்கியனில் ஒருவன் நான் […]

நாகேஷ் : நகைச்சுவை சிகரம்

ஒரு நகைச்சுவை நடிகனாக நாகேஷ் சாதித்ததை நாகேஷ் முன்னர் வந்தவர்களும் சரி , பின்னர் வந்தவர்களும் சரி மிஞ்ச முடியாது மின்னல்வேக முக பாவனை, உடல்மொழிமாற்றத்தில் அவர் என்றுமே தனித்து நின்றார் சீரியசான குணசித்திரம், பரிதாப பாத்திரம், நகைச்சுவை கலந்த வில்லத்தனம் என எல்லா வேடங்களிலும் பின்னி எடுத்தவர் நாகேஷ் காமெடி அவரது ஒவ்வொரு அசைவிலும், வார்த்தையிலும் பிறப்பிலே கலந்திருந்தது அழகும் தோற்றபொலிவும் முக்கியமே அல்ல மாறாக உள்ளத்தில் இருந்து வரும் உணர்ச்சியான நடிப்பே பிரதானம் என […]

டாக்டர் மன்மோகன் சிங்

உலகம் கொண்டாடும் ஒரு பொருளாதார மேதை, உலகம் தடுமாறிய மந்தநிலை காலங்களில் இந்திய பொருளாதாரத்தை காத்து நின்ற பெரும் அறிவாளி இன்று இந்தியா காட்டும் பொருளாதார பாய்ச்சலுக்கு அன்றே அஸ்திவாரமிட்ட பெரும் சிந்தனையாளன் மாற்றுகட்சி ஆயினும் அவர்களும் வந்து ஆலோசனை கேட்கும்பொழுதும் நாட்டுமுன்னேற்றத்திற்காய் நல்ல ஆலோசனைகளை வழங்கும் பெருமகன் அவர் பதவிவகித்த காலங்களில் அவரை தேடிவந்து பாராட்டியவர்களே அதிகம் தவிர, அவர் தேடிசென்ற நாடுகள் குறைவு. காரணம் நல்ல அறிவும் சிந்தனையும் எங்கிருந்தாலும் தேடி வரும் உலகமிது, […]

திலீபன் சாவுக்கு யார் காரணம்? என் உறவே…

அது இந்திய அமைதிபடை இலங்கையில் கால்பதித்த நேரம், சிங்கள தாக்குதலிலிருந்து தம்மை காக்க இந்தியா வந்ததை ஈழதமிழர்கள் கொண்டாடிகொண்டிருந்த நேரம் ஜெயவர்த்தனே இறங்கிவந்து தமிழருக்கு தனி மாகாணம் கொடுக்கலாம் என முதன்முதலாக சொல்லி இருந்த நேரம். அதற்கு மேலும் இழுத்தால் நிலமை இன்றைய சிரியா அளவிற்கு செல்லலாம் என்பதால் எல்லா குழுக்களும் இணக்கபாட்டுக்கு வந்திருந்த நேரம் புலிகளும் ராஜிவ் ஒப்புகொண்ட மாதாந்திர 50 லட்சத்தை வாங்கிகொண்டு எப்படியும் ஜெயவர்த்தனேவுக்கும் ராஜிவிற்கும் பிணக்கினை ஏற்படுத்தி மறுபடியும் சண்டை தொடங்கலாம் […]

திருவோணம் வாழ்த்துக்கள்

அன்றொரு காலத்தில் முந்தைய தமிழர் நாடான‌ சேரநன்னாட்டினை ஆண்டுகொண்டிருந்தான் பெரிய முப்பாட்டன் மகாபலி. ஆட்சி என்றால் அப்படி ஒரு அற்புதமான ஆட்சியினை கொடுத்தான் என்கிறது புராண வரலாறு. நாட்டில் எங்கும் அமைதி, வளம், செழிப்பு அதற்கும் மேல் நோய் நொடி என்பது ஒரு நொடி கூட இல்லை எல்லோருக்கும் எல்லாம் இருந்துவிட்டால் நாட்டில் குழப்பம் ஏது? மன்னன் மாவீரனும் கூட இந்த லோகம், கீழோலகம், மேலோகம் என எல்லா உலகினையும் வென்று ஆண்டுகொண்டிருந்தான். ஆட்சி என்றால் பொற்கால […]

சுப்பிரமணிய பாரதியார்

நலம்கெட புழுதியில் எறியபட்டவர் செப்டம்பர் மாதத்தில் இஸ்ரேலியருக்கு பெரும் துக்கம் உண்டு, முனிச் நகரத்தில் நடைபெற்ற துயரமது. அமெரிக்கர்களுக்கு பெரும் அடியாக அமைந்த இரட்டை கோபுரத்தினை எண்ணி அவர்களும் அழுவார்கள். பிரபாகரனின் அட்டகாசத்தால் சாவதறேகென்ற உண்ணாவிரதம் இருந்து செத்த அல்லது சாகடிக்கபட்ட‌ தீலிபனை நினைத்து ஈழத்தவரும் அழுவார்கள். நெல்லை சீமையின் அறிவுசுடர் பாரதியை நினைத்து தமிழறிந்த,அறிவறிந்த தமிழரும் அழுவார்கள். மகாகவி சுப்பிரமணிய பாரதி ஒரு பிறவி ஞானி, பாட்டுகொரு தலைமகன் என பட்டம் பெறமட்டுமே பிறந்தவர். தென் […]

மானிட தெய்வம் : அன்னை புனிதர் தெரஸா…

கிறிஸ்து இயேசு எப்படி போதித்தார்?, “ஒடுக்கபட்டோருக்கும், அனாதைகளுக்கும், ஆதரவில்லா அபலைகளுக்கும், நோயுற்றோருக்கும்வாழ வழியற்றவருக்கும் வாழ்வளிக்கும் பொருட்டு நானே வந்தேன்” அப்படித்தான் போதித்தார். அப்படி அவர் ஏழையாக வந்தார், சமூகத்தால் விரட்டபட்டோருடன் வாழ்ந்தார், நோயாளிகள், பாவிகள் என ஒதுக்கபட்டோர், புறக்கணிக்கபட்டோர் என யாருடனும் பழக அவருக்கு தயக்கமில்லை, அவர்களுக்கு எது தேவையோ அதனில் உதவினார். பசி,நோய் என அவர்கள் பிணியினை விரட்டினார். ஒரு யூதன் பாவிகள் எனப்படும் ஏழைகளுடன் இப்படி உறவாடுவதா எனும் வன்மத்தில் அவர் அடித்துகொல்லப்ட்டார், ஒரு […]

நாம் எழுதுவதையும் மதித்து சிலர் கவனிக்கின்றார்கள் என்பதே மகிழ்ச்சி…

அந்த தாடிக்குள் ஓளிந்திருக்கிறது, தமிழ்பாடலின் உயிர் நாடி -ஸ்டான்லி ராஜன் – New Tamil Cinema எவ்வளவோ கவிஞர்கள் முட்டிமோதும் திரையுலகம் அது, ஒரு சிலர் முத்திரை பதித்துகொண்டனர், இன்னும் பலர் காத்திருக்கின்றனர், ஆனால் ஏராளமான பாடல்களை… NEWTAMILCINEMA.COM நாம் எழுதுவதையும் மதித்து சிலர் கவனிக்கின்றார்கள் என்பதே மகிழ்ச்சி, அதிலும் சிலர் தங்கள் பத்திரிகைகளில் பிரசரிகின்றனர் எனும்பொழுது அது கூடுகின்றது, நம்மையும் அங்கீகரிக்க தொடங்கி இருக்கின்றார்கள். டி.ராஜேந்தர் பற்றி எழுதியதை நண்பர் அந்தணன் அவர்கள் அவரின் பத்திரிகையிலே […]