திராவிட புரட்சியன்றி வேறல்ல
அந்த திருச்சி மாவட்டம் அரியலூர் பகுதி கல்லகுடி ஏரியா சுண்ணாம்பு பாறைகள் நிறைந்தபகுதி என்பதால் அங்கு சிமென்ட் ஆலை வந்தது, டால்மியா எனும் கம்பெனி ஆலை தொடங்கியது, வடக்கே ஜாம்ஷெட்பூர் நகர் ஜாம்ஷெட்ஜி டாட்டா பெயரால் உருவானது போல டால்மியா நகரும் உருவாயிற்று அது 1930களிலே உருவான திட்டம், மெல்ல ஆரம்பித்து 1950களில் பெருந்திட்டமாக செயல்பட ஆரம்பித்தது, ஜாம்ஷெட்பூர் போல டால்மியாபுரம் உருவானது அவ்வளவுதான் போர்முரசு கொட்டியது திமுக, தமிழன் மண்ணில் அன்னிய பெயரா என பொங்கிற்று, […]