பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தேர்தல் துளிகள் 19/03/2019 (2)

மய்யத்து காமெடி தொடர்கின்றது கோவை சரளா என்னை எப்படி நேர்காணல் நடத்துவது என பொங்கிய ஒரு மய்யத்து நபர் ஒருவர் மய்யல் தீர்ந்து ஓடிவிட்டார், ஓடும் பொழுது “கோவை சரளா எல்லாம்..” என சொல்லி விட்டு ஓடிவிட்டார் அவ்வளவுதான் அம்மணிக்கு கோபம் பொத்துகொண்டு வந்தாயிற்று “என்றா இது, எனக்கு அறிவு இல்லியாடா, நெசமா இருக்குடா? நா அரசியல் பண்ணகூடாதுன்னு எவண்டா சொன்னது? என்றா தகுதி இல்ல என்ட்ட‌, போடா கெரகம் புடிச்சபயல‌” என வானுக்கும் பூமிக்கும் குதிக்கின்றது […]

இதுதான் புரட்சி என கிளம்புவது சரியல்ல..

களம்புகும் எழுத்தாளர் இலக்கியவாதிகள் என ஒரே பரபரப்பு என பத்திரிகைகள் அழிச்சாட்டியம் எழுத்தாளரும் இலக்கியவாதிகளும் இதற்கு முன்பு அரசியலில் இருந்ததே இல்லையா? ராஜாஜி, அண்ணா, கலைஞர், வலம்புரி ஜாண் என எவ்வளவு பெரும் பிம்பங்கள் எல்லாம் உண்டு கண்ணதாசனைவிடவா இன்னொரு இலக்கியவாதி உண்டு? திமுக எழும்பியதே அதன் எழுத்துக்களாலும் பல இலக்கியங்களாலும் ஆசைதம்பி முதல் எத்தனை எழுத்தாளர்கள் அதில் இருந்தனர்? அண்ணா அப்படி ஒரு எழுத்தும் இலக்கியமுமிக்க படையினை உருவாக்கி அரசியல் களத்திற்கு கொண்டுவந்தார், அதை மறுக்க […]

அம்மணிக்கு இருக்கும் ஒரே சிக்கல்

அம்மணிக்கு இருக்கும் ஒரே சிக்கல் என்னவென்றால் மேக் அப் இல்லாமல் வாக்கு கேட்க வந்தால் அவரை யாருக்கும் தெரியாது இதனால் இனி பிரச்சார காலமுதல் அவர் மேக் அப்பிலே இருக்க வேண்டிய கடும் கட்டாயம் ஏற்பட்டாயிற்று, இதற்கே ஒரு குழு அமைக்க வேண்டும் அம்மணிக்கு இருக்கும் லாபம் என்ன தெரியுமா? தேர்தல் செலவு கணக்கில் கம்மல் , வளையல் , உதட்டு சாயம், மல்லிகைப்பூ கணக்கினையெல்லாம் எக்கசக்கமாக எழுதி வைக்கலாம், தேர்தல் கமிஷணும் தயக்கமின்றி ஏற்றுகொள்ளும்

அப்படியும் இருக்கலாம்

முதல் தடவையாக தன் மிகபெரும் எதிரி என்றும் சொல்லபோனால் உண்மையான எதிரி என்றும் சொல்லபடும் இந்து மதத்தை மிக தீவிரமாக தமிழக மண்ணில் திமுக எதிர்கொள்கின்றது என்கின்றது ஒரு தரப்பு இருக்கலாம், திமுக பகுத்தறிவு பேசிய காலங்களில் அவர்களுக்கு எதிரி மதரீதியாக இல்லை காங்கிரஸ் என்ற கட்சியினை எதிர்த்தே அவர்கள் அரசியல் இருந்தது, அதில் சினிமாவினை இன்னபிற விஷயங்களை கலந்து அடித்து ஜெயித்தார்கள் தனி திராவிட பகுத்தறிவில் அவர்கள் ஜெயிக்கவில்லை, சினிமாவும் கண்மூடிதனமான இந்தி, காமராஜர் எதிர்ப்பு […]

காரியத்தில் படு சமத்து

தமிழிசை அக்கா காமெடியாக பேசிகொண்டிருந்தாலும் காரியத்தில் படு சமத்தாக இருந்திருகின்றார் சோபியாவிடம் வம்பிழுத்தது, துப்பாக்கி சூட்டு நேரத்தில் தத்துவம் பேசியது என தூத்துகுடி கடலே பொங்கும் அளவுக்கு அந்த பகுதியினை கோபமூட்டி வைத்திருந்தார் அக்கா ஆனால் தேர்தல் நெருங்க நெருங்க மிக அமைதியாக கொடியேற்றம், கட்சி கூட்டம் என சுற்றி வந்திருக்கின்றார், எதிர்ப்பு ஏதுமில்லை என்பதை கண்டுகொண்டே பின்பே களத்திற்கு வந்திருக்கின்றார் தென் பக்கம் இருக்கும் நாடார் வாக்கு மற்றும் அதிதீவிர இந்துக்களின் வாக்கு வங்கி அவருக்கு […]

டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணிக்கு 34 இடங்கள் – டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு ஓரளவு சரியாக இருக்கலாம், 25 முதல் 30 இடங்கள் அக்கூட்டணிக்கு கிடைக்கும் என்றே கருதபடுகின்றது காங்கிரசுடன் திமுக இணைந்து நிற்கும் பொழுதெல்லாம் அக்கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் பெருவெற்றி பெற்றிருகின்றது அதுவும் ராமசந்திரன், ஜெயா போன்ற சக்திகள் இருந்த காலத்திலே பெருவெற்றி பெற்றிருக்கின்றது என்பது வரலாறு அந்த தரவுகளின் படியும், இப்பொழுது இருக்கும் சூழலிலும் அது நிச்சயம் சாத்தியமே.. இதுவரை அப்படித்தான் இருந்திருக்கின்றது..

கடன்பட்டான் நெஞ்சம் போல

இந்த தேர்தலை நிதானமாக எதிர்கொள்கின்றது திமுக, ஆம் அவர்களுக்கு இப்பொழுது எம்பிக்கள் என யாருமில்லை, இனி கிடைப்பது அவர்களுக்கு லாபம் 10 தொகுதி கிடைத்தாலும் அவர்களுக்கு மகிழ்ச்சி, ஆம் ஒன்றுமே இல்லாமல் இப்பொழுது இருப்பதை விட சில கிடைத்தாலும் மகிழ்ச்சி காங்கிரஸின் நிலையும் அப்படியே சிக்கல் அதிமுகவுக்கும் தினகரனுக்கும் இருக்கின்றது. 37 என்ற மாபெரும் எண்ணிக்கையுடன் வலம் வந்த கட்சி அதிமுக, அதை பறிகொடுக்க போகின்றார்கள் பரிதாபம் தினகரன் என்பவர் வெல்லவில்லை என்றால் சந்தி சிரித்துவிடும் , […]

சுயநல கூட்டம்

தேர்தல் களைகட்ட தொடங்கியிருக்கின்றது, மக்களின் மனவோட்டம் பற்றியும் கணிப்புகள் வரதொடங்கியிருக்கின்றன‌ பெருவாரி மக்கள் இத்தேர்தலில் தனக்கு வேண்டிய கட்சியோ நபரோ வெற்றிபெற்றால் தனக்கு என்ன கிடைக்கும் அல்லது தங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை தவிர வேறு சிந்தனையில் இருப்பதாக தெரியவில்லை அப்படி பழக்கபட்டுவிட்டது இச்சமூகம் இது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் , இந்நாட்டை வழிநடத்த சரியான தலமை எது? என்பதைபற்றியோ யார் ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு நல்லது என்பது பற்றியோ சிந்திக்க யாரும் தயாராக இல்லை எல்லோர் நோக்கமும் […]

இந்த தேர்தலில் பல சுவாரஸ்யங்கள்

இந்த தேர்தலில் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன‌ ஆண்டிபட்டி இடைதேர்தலில் திமுக வேட்பாளர் மகாராசனும் அதிமுக வேட்பாளர் லோகிராசனும் சகோதரர்களாம் இவர்களின் அன்னை யாருக்கு வாக்களிப்பார்? தினகரனுக்காக இருக்கலாம் எந்த விருதுநகரில் மாணிக் தாகூர் என்பவரிடம் வைகோ தோற்றாரோ அந்த மாணிக் தாகூருக்காக அங்கு பிரச்சாரம் செய்ய செல்கின்றார் வைகோ இது போக அங்கிள் சைமன் காமெடி வேறு, ஒரு ஆடியோவில் தும்பி ஒரு வேட்பாளரை நிறுத்துகின்றது அங்கிள் கண்டிக்கின்றார் ஒரு கட்டத்தில் களமாடுவது யார் என்பதில் தும்பி […]

தேர்தல் துளிகள் 18/03/2019 (3)

அர்ரே பழ்னிசாமி நம்பிள் ராம்சந்தரோட காவல்காரன் படம் பார்த்தான் உடனே நம்பிள் காவல்காரன்னு பேர் வச்சிட்டான், தேங்க்ஸ் பையா அடடே, இது தெரிஞ்சா மாட்டுக்கார வேலன் சிடி கொடுத்திருப்பேனே அச்சா, அப்டியும் இருக்கா? உடனே நம்ப யோகிக்கு சிடி அனுப்பி வைங்க மேன், அவரும் பெயரை மாத்துவார்.. உன் தந்தை தெய்வம் தானய்யா…. எந்நாளும் உம்மோடும் எம்மோடும் அவர் மனம் வாழட்டும் “தாய் இல்லாத நேரம்தான் நீங்க தாய் கழகத்துக்கு வருவீங்கண்ணு அப்பா அடிக்கடி சொல்லுவாருங்க…”

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications