உண்மைகள் உறங்குவதுமில்லை, பொன்.சிவகுமாரன் மறைவதுமில்லை.
அது 1974ம் ஆண்டு, ஈழ தமிழர்களை சிங்கள அரசுகள் ஒடுக்க ஆரம்பித்த நேரம். வஞ்சகமாக இந்திய மலையக வம்சாவழிதமிழரில் பெரும்பான்மையினரை இந்தியாவிற்கு அனுப்பிவிட்டு (அப்பொழுது ஒரு ஈழதமிழரும் அதனை கண்டிக்கவில்லை,எதிர்க்கவில்லை என்பதுவேறுகதை ) ஈழதமிழரை குறிவைத்து காய்களை நகர்த்தியது. இறுதியாக ஒரு திட்டத்தினை கொண்டுவந்தது. கொண்டுவந்தவர் சிறிமாவோ பண்டாரநாயக, தந்திரகாரி அவர். யானைகுட்டியை கொடுத்து கச்சதீவை வாங்கியர் (அதாவது கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கபட்டபொழுது இந்திராவுக்கு இவர் ஒரு யானைகுட்டி பரிசளித்தார்) என சிங்களர்களால் கொண்டாடபட்ட சிறீமாவோ. அதாவது […]