பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வேட்டிமேல் கோட் அணிவது அந்நாளைய வழக்கம்

காஷ்மீருக்கு லால்பகதூர் சாஸ்திரியினை அனுப்பினார் நேரு, ஆனால் சாஸ்திரியிடம் குளிருக்கான ஸ்வெட்டர் இல்லை, இதனால் தன் ஸ்வெட்டரை கொடுத்தாராம் நேரு அது சாஸ்திரிக்கு முழங்காலுக்கும் கீழ் வரை இருந்ததாம் அப்படி ஆர்னால்டு ஸ்வாஸ்நேகரின் கோட்டை யாரோ பன்னீர் செல்வத்துக்கு கொடுத்திருக்கின்றார்கள், அன்னார் அதை வேட்டி சட்டை மேல் அணிந்திருக்கின்றார் வேட்டிமேல் கோட் அணிவது அந்நாளைய வழக்கம், மகா கவி பாரதியே அப்படித்தான் அணிந்திருந்தாராம் என்கின்றது பன்னீர் கோஷ்டி..

திமுகவில் இனி தலைவருக்கு கூடுதல் அதிகாரம்

திமுகவில் இனி தலைவருக்கு கூடுதல் அதிகாரம், திமுக கூட்டத்தில் முடிவு எப்படிபட்ட முரண் இது? பெரியார் சர்வாதிகாரிய் இருக்கின்றார் இது ஜனநாயகம் அல்ல என்றுதான் திமுக தொடங்கினார்கள் தலைவர் என யாரும் இல்லை இருக்கவும் கூடாது என சொல்லி வராத பெரியாருக்காக அந்த நாற்காலி காலி என நீலிகண்ணீர் வடித்தார்கள் ஏ”னப்பா, தலைவருக்கான நாற்காலி பெரியாருக்கு என்றால் ஏன் தனிகட்சி? அங்கேயே இருந்து பெரியாரை அமரவைத்தால் என்ன? பின் எதற்கு தனி கட்சி வெற்று நாற்காலியும் நாடக […]

மிலாது நபி

அந்த அரேபியாவின் மக்கள் சிதறிகிடந்தனர், இன குழுக்களாக பிரிந்து மோதிகொண்டிருந்தனர். அவர்களை வழிநடத்தவோ அவர்களுக்கு நல்வழிபோதிக்கவோ யாருமில்லை, உலகம் அவர்களை பொருட்டாக மதிக்கவில்லை அங்கு வாழ்ந்த யூதர்கள் ஒருவித உயர் மனப்பான்மையில் அவர்களை தாழ்த்தித்தான் வைத்திருந்தனர். அம்மக்களை ஒருங்கிணைக்கவோ அந்த மூர்க்கமான சமூகத்தில் அமைதி கொண்டுவரவும் யாருமில்லை இந்ந நிலையில்தான் இறைவனின் தூதனாக நபிபெருமான் அவதரித்தார், நிச்சயமாக அவர் அறிவிக்கபட்டு இந்த உலகிற்கு கொடுக்கபட்டவர் அவர் இளமையிலே தனக்கான பாதையினை தேர்ந்தெடுத்தார், இறைவனின் கரம் அவரோடே இருந்தது. […]

யாசர் அராபத்

ஒரு மானிட நேயமிக்க, அதே நேரம் தீவிரமான ஒரு போராளியினை நமது தலைமுறையில் கண்டோம் என்றால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம், அது யாசர் அராபத். இன்று நினைவுபடுத்தவில்லை. அந்த பெருமகனாரின் நினைவு நாள் இன்று. யாசர் அராபத் அந்த மனிதன் ஒரு உண்மையான போராளி, அந்த மாவீரனை இஸ்லாமிய தீவிரவாதி என அழைப்பது தவறு, அவனின் மதம் இஸ்லாம், அவன் போராடிய பூமியும் அந்த மக்களும் இஸ்லாமியர் என்பதே சரி மற்றபடி அவன் தொடுத்ததும் போராடியதும் மகா […]

இந்த அமைதியும் ஒற்றுமையும் நிலைக்கட்டும்

உலகம் ஆச்சரியத்திலும் ஒருவிதமான அதிசயமாகவும் இந்தியாவினை நோக்கி கொண்டிருக்கின்றது கடந்த சனிகிழமை கொடுக்கபட்ட தீர்ப்பு இந்தியாவில் பெரும் கலவரத்தை உருவாக்கும் என்றும், இத்தோடு இந்தியா நொறுங்கி சரியும் என்றெல்லாம் பல வெளிநாட்டு ஊடகங்கள் எழுதிகொண்டிருந்தன, மிகபெரும் உலகளாவிய சிக்கலை இந்தியா எதிர்கொள்ளும் என்றெல்லாம் கலக்கமான செய்திகள் வந்துகொண்டிருந்தன. அனைத்தையும் பொய்யாக்கியிருக்கின்றது இந்தியா, அதன் மேலிடமும் அதைவிட முக்கியமாக இந்திய மக்களும் அந்த மாபெரும் அதிசயத்தை செய்திருக்கின்றார்கள் ரஞ்சன் கோகாயின் நீதிபதிகள் குழு ஒருவார்த்தையினை நோக்கியும் விரலை நீட்டமுடியாதபடி […]

நான் ஏன் வந்தேன், நான் ஏன் இப்படி ஆனேன்?

ராமாயணத்தில் ஒரு காட்சி உண்டு, ராமன் கலங்கி சொல்வான் “நான் ஏன் வந்தேன், நான் ஏன் இப்படி ஆனேன்? அந்த சீதை பலமிக்கவள், அந்த வில்லை அவளே ஒரு கையில் தூக்கினாள் அதை கண்டபின்பே அவளுக்கு சமமான கணவன் வேண்டுமென வில்லுக்கு நாணேற்றும் பந்தயம் வைத்தான் ஜனகன் ஆம் அவள் நினைத்தால் ராவனனை கொன்றிருக்கலாம் ஆனால் கொல்லவில்லை அந்த வாலி நினைத்தால் ராவனனை கொன்றிருக்கலாம் அவனும் கொல்லவில்லை இதோ இந்த அனுமன் நினைத்தால் கொன்றிருக்கலாம் , அவனும் […]

இன்றோடு அதற்கு முற்றுபுள்ளி வைத்தாயிற்று

இந்த விவகாரத்த்தில் ஆர்.எஸ்.எஸ் , பாஜக காரணம் என சொல்வதெல்லாம் முழு நியாயமில்லை பாபர் மசூதி கட்டும் பொழுது ஆர்.எஸ்.எஸ் இல்லை, பாஜக இல்லை பாபரையும் முழுக்க குறை சொல்லமுடியாது, அந்த பூமி மரியாதைகுரிய பூஜித்தலுக்குரிய இடமாய் அன்றே இருந்தது. பாபர் கடைசியாக வந்த ஆப்கானியர் அவருக்கு முன்பு வந்தவர் எல்லாம் கொள்ளை அடித்து ஓடும் கூட்டமாய் இருந்தனர் பாபர் இந்தியரில் ஒருவராக ஆள எண்ணினார், இந்தியர் வணங்கும் இடத்தில் தானும் வணங்கி அவர்களின் அன்பை பெற […]

பெரும் சிக்கலுக்கு இன்று தீர்ப்பு வழங்கபட்டிருக்கின்றது

சுதந்திரத்திற்கு முன்பு 400 ஆண்டுகளாகவும் சுதந்திரத்துக்கு பின் 70 ஆண்டுகளாக ஆக கிட்டதட்ட 500 ஆண்டுகளாக இழுத்துகொண்டிருந்த பெரும் சிக்கலுக்கு இன்று தீர்ப்பு வழங்கபட்டிருக்கின்றது உலகமே உற்றுபார்த்த வழக்கில் மிக மிக நியாயமாக , தேர்ந்தெடுக்கபட்ட வார்த்தைகளை கொண்டு , எல்லா கோணத்திலும் அலசி ஆராய்ந்து எதிர்காலத்தில் சிக்கலே வராத அளவு தீர்ப்பு வழங்கியிருகின்றது உச்ச நீதிமன்றம் மசூதி வெறும் நிலத்தில் கட்டபடவில்லை, கட்டம் இந்து கோவிலென ஆதாரமில்லை என எல்லா நியாங்களையும் சொல்லிவிட்டு, சூழலின் அடிப்படையிலும் […]

மாவீரன் மகிந்த ராஜபக்சே வாழ்க..

அடுத்த இனம் தமிழ் பேசும் அழகே அழகு.. அங்கிள் சைமன், வைகோ போன்றோர் தூக்குகயிறை தேடும் நேரம் இது… எப்படியோ மோடிக்கு ஐடியா கொடுத்துவிட்டார் ராஜபக்சே, இனி மோடி சும்மா இருப்பாரா என்ன? மாவீரன் மகிந்த ராஜபக்சே வாழ்க.. https://m.facebook.com/story.php?story_fbid=1565185243530329&id=629999347048928