முட்டாளுக்கு முட்டாளே தலைவன்
எதிரியிடம் ஒரு சொட்டு நீரும் கேட்கமாட்டேன் என சிறையில் தாகத்தால் மானத்தோடு செத்தான் சேரன் இரும்பொறை மகன் ஒருவார்த்தை சொல்லிவிட்டான் என்பதற்காக வடக்கிருந்து உயிர்நீத்தான் மானமிக்க கோப்பெருஞ்சோழன் நீதிதவறியபின் என்ன ஆட்சி என கண்ணகி முன்னாலே செத்தான் நெடுஞ்செழியன் தனக்கு நிகழ்ந்த அவமானத்தின்பின் சோழநாட்டிலே கால்வைக்கவில்லை கம்பன் மயிர்நீப்பின் உயிர்வாழா கவரிமான் என குறளே எழுதினான் வள்ளுவன் ஒன்றா இரண்டா தென்னாட்டு இனமான வரலாறு சேரன் காலமுதல் கட்டபொம்மன் காலம் வரை, மருதுபாண்டியர் காலமுதல் வாஞ்சிநாதன் காலம் […]