பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒரே ஒரு குறளை மட்டும் கஷ்டபட்டு படித்து உச்சம் தொட்டவர் அவர்

வள்ளுவன் 1330 குறள் எழுதியிருக்கலாம் ஆனால் அவரின் ஒரே ஒரு குறளை மட்டும் கஷ்டபட்டு படித்து உச்சம் தொட்டவர் அவர் “எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து ” எனும் குறளை வள்ளுவன் அவருக்காகவே எழுதினான் சில விஷயங்களை தவறாக படித்தால் கூட உருப்படலாம் என்பதற்கு அவரே உதாரணம் ராமாயணத்தை படித்து எல்லோரும் ராமனை சிந்தித்தால் இவர் மட்டும் விபீஷ்ணனை வணங்கி அப்படியே உருவானவர் அதோடு கூனியின் வஞ்சகத்தை படிக்க சொன்னால் இவர் அவளிடமிருந்து […]

இதுவும் அரசியல்..

அப்பாவு என்பவர் மாபெரும் சமூக சிந்தனையுடன் இல்லை பாஜக அட்டகாசத்தை வெளிகொண்டு வர இப்படி சொல்லிகொண்டிருப்பதாக யாரும் நினைத்தால் நினைத்துகொள்ளுங்கள் ஆனால் விவகாரத்தின் இன்னொரு கோணம் வித்தியாசமானது அதாவது இப்பொழுது கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் என்பது விஷயமல்ல விஷயம் இன்னும் ஆழமானது அப்பாவு சொல்லும் எம்.சாண்ட் என்பது தற்போதைய திருநெல்வேலி எம்பி ஞானதிரவியத்தின் பிரதான தொழில்களில் ஒன்று இன்னும் பலருக்கு உண்டு என்றாலும் ஞானதிரவியம் தரப்பும் இதில் கொஞ்சம் பிரதானம். ஞானதிரவியத்துக்கும் அப்பாவு என்பவருக்கும் திமுக என்றாலும் […]

இதுதான் திராவிட கோமாளித்தனம்

அவர்கள் சொன்னது தனி திராவிட நாடு என்பது, அதற்காக அவர்கள் போட்ட நாடகம் சீமான் கோஷ்டியினையும் மிஞ்சும் அண்ணாதுரை திராவிட நாடு அடைந்தே தீருவோம் என பேசிய பேச்சுக்கள் கொஞ்சமல்ல‌ ஒரு கட்டத்தில் அது முடியாது என தெரிந்தது, மெல்ல கோரிக்கையினை கைவிட்டு தமிழக மாநிலத்துக்கு தமிழ்நாடு என பெயர் வைத்து சாதனை என்றார்கள் அதில் என்ன சாதனை என்பதுதான் தெரியவில்லை அவர்கள் தமிழ்நாடு என பெயர் மாற்றாவிட்டாலும் இங்கு என்ன ஆப்ரிக்க மொழியும் லத்தீனுமா பேசிகொண்டிருப்பார்கள்? […]

அதீத பொய் சொன்னால் நாக்கு அழுகிவிடும்

அடேய் பொய் சொல்லலாம் ஆனால் அதீத பொய் சொன்னால் நாக்கு அழுகிவிடும் திமுக பரப்பும் பொய்யில் முதலாவது சென்னை மாகாணம் தமிழகம் என பெயர்மாற்ற சங்கரலிங்கனார் செத்தார் காமராஜர் கண்டுகொள்ளவில்லை இந்த மொழிவாரி பிரச்சினைக்கு முதலில் செத்தது பொட்டி ஸ்ரிராமலு எனும் தெலுங்கர், மொழிவாரி மாநிலம் வேண்டும் என முதலில் பட்டினி கிடந்து அவர்தான் செத்தார் காமராஜர் அதில் கனத்த அமைதி, அப்பொழுது அமைதியாக இருந்துவிட்டு சங்கரலிங்கனாருக்கு இறங்கி வந்தால் என்னாகும்? தமிழனுக்கு காமராஜர் இறங்கினார் என […]

உனக்குள் பேசிவிடலாம், தைரியமாக எழுதிவிட முடியுமா?

“நீ உன் கருத்தை உனக்குள் பேசிவிடலாம், தைரியமாக எழுதிவிட முடியுமா? ஆம் எழுதுவேன் என்ன செய்வாய் தமிழகத்தில் இருந்து எழுதிவிடுவாயோ கண்டிப்பாக எழுதுவேன் எப்பொழுது எழுதுவாய் இதோ பதில் சொல்லிகொண்டிருக்கின்றேனே, இந்த நொடியில் இருந்து பத்திரிகையாளனாகிவிட்டேன்” இப்படித்தான் 50 ஆண்டுகளுக்கு முன்பு துக்ளக் பத்திரிகையினை தனி துணிச்சலுடன் தொடங்கினார் சோ, அதன் முதல் பத்தி கூட இப்படித்தான் இருந்ததாக நினைவு “நாட்டில் தேசபற்றும் உண்மையும் கொண்ட பத்திரிகைகள் எதுவுமில்லை, எல்லாம் சம்பாத்தியம் ஒன்றை கொண்டு பொய்யும் புரட்டும் […]

பிரேமலதா பேசியது ஒன்றும் தவறல்ல‌

பிரேமலதா பேசியது ஒன்றும் தவறல்ல‌ இந்தியா இந்துநாடே, அது இந்துக்களின் அடையாள நாடாகத்தான் அறியபட வேண்டும். உலக மத சம்பிரதாய‌படியும் உலக நாடுகளின் பார்வையும் அதேதான் இதுதான் நியாயமும் தர்மமுமாகும் ஜெருசமேம் எங்கள் பூமி அதனால் இது யூதநாடு என்கின்றது இஸ்ரேல் ஜெருசலேம் எங்களுக்கும் புண்ணிய பூமி என சொந்தம் கொண்டாடுகின்றது இஸ்லாமிய சமூகம், கிறிஸ்தவமும் சந்தடி சாக்கில் அதில் கைவைக்கும் அதை சொல்லி முன்பு சிலுவை போர் நடத்திய சமூகம் அது ஆக ஜெருசேலேமுக்கு இச்சமூகங்கள் […]

ஒபாமாவின் புகழுக்கு களங்கம் அவர் மகளின் வடிவில் வருகின்றது

ஒபாமா அமெரிக்காவில் ஒரு திருப்புமுனை ஜனாதிபதி, முதல் கருப்பின அதிபர் என்பது முதல் பல போர்களை தவிர்த்து நோபல் பரிசு பெற்றவர் என்பது வரை சிறப்புகள் அதிகம் பின்லேடனை போட்டு தள்ளியதும் அவர் காலத்திலே, அதன் பின் அவர் பல இடங்களில் சமாதானத்தை விரும்பினார் அப்படிபட்ட ஒபாமாவின் புகழுக்கு களங்கம் அவர் மகளின் வடிவில் வருகின்றது, அம்மணி லண்டனில் படிக்கின்றது, போதை பொருள் பாவனையில் அம்மணி விழுந்து அது பெரும் சர்ச்சையாகி ஒபாமாவுக்கு தீரா தலைவலியாகின்றது ஒபாமா […]

ஜல்லிகட்டு போராட்டம் இனி வேறுவடிவில் வரலாம்

ஜல்லிகட்டு போராட்டம் இனி வேறுவடிவில் வரலாம் அதற்கான காட்சிகள் தொடங்கிவிட்டன‌ தமிழக அரசு ஒரு வித்தியாசமான சட்டம் இயற்றியிருக்கின்றது, அது நாட்டுமாடுகள் இனபெருக்கம் செய்ய சில கட்டுபாடுகளை விதிக்கின்றது இது மேலோட்டமாக பார்த்தால் சரியென தோன்றினாலும் அதன் உள் அர்த்தம் வில்லங்கமானது சட்டம் என்ன சொல்கின்றதென்றால் இனி மாடுகளின் இனபெருக்கம் அரசின் விதிக்கு உட்பட்டு நடக்க வேண்டும் மாடுகள் ஊசி மூலம் சினைபடுத்தவேண்டும், நாட்டுமாடு மூலம் சினைபடுத்தினால் கடும் விதிகளை பின்பற்ற வேண்டும் மீறினால் அரசு விடாது […]

வைகோவினை ஏன் ஜெகத் கஸ்பர் தாக்குகின்றார்?

வைகோவினை ஏன் ஜெகத் கஸ்பர் தாக்குகின்றார்? விஷயம் ஒன்றுமில்லை, ஆண்டன் பாலசிங்கத்தின் மரணம் உறுதி என்ற நிலையில் அவர் இடத்தினை பிடிக்க பாதிரிக்கு கடும் ஆசை இருந்தது லண்டனில் அதை நோட்டமிடத்தான் திருவாசகம் என சென்றார், திருவாசத்துக்கு இசை அமைக்க்கின்றேன் என இளையராஜாவினை கூட்டிகொண்டு லண்டனில் பாதிரி சுற்றிய மர்மம் இதுதான் இளையராஜா அதில் சிக்கினார், ஆனால் தொழிலை தொழிலாக செய்தாலும் திருவாசக இசையில் சர்ச்சின் இசைகருவிகள் கலந்தது அவரின் கவனசிதறல். சிதற வைத்தது பாதிரி லண்டன் […]

அங்கிள் சைமனார் தன் மகனின் பிறந்த நாளில் “ஹேப்பி பேர்த் டே” என பாட்டுபாடியது வைரலாகின்றது

அங்கிள் சைமனார் தன் மகனின் பிறந்த நாளில் “ஹேப்பி பேர்த் டே” என பாட்டுபாடியது வைரலாகின்றது அங்கிள் அதை செய்யாவிட்டால்தான் ஆச்சரியம், அப்படித்தான் செய்வார் முன்பு ஒரு வீடியோவில் அங்கிள் சொன்னது இதுதான் “தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுபவன சும்மா விடமாட்டேன், கட்டி வச்சி திருக்கை வால் , பனைமட்டை வச்சி அடிச்சி தோலை உரிச்சி, உப்பு வச்சி தேச்சி , தொலைச்சிபுடுவேன் பூரா பயலையும்…..” ஆங்கிலத்தில் பேசினாலே அப்படி என்றால், பாட்டாகவே பாடினால் எப்படி விடமுடியும்? […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications