பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அவற்றின் முகத்தில் ஓங்கி அடித்திருகின்றது மத்திய அரசு

காஷ்மீரில் எத்தனையோ நாடுகளின் கரங்களும், அல்கய்தா முதல் ஐ.எஸ் வரை கொடும் இயக்கங்களின் கால்களும் உண்டு அவற்றின் முகத்தில் ஓங்கி அடித்திருகின்றது மத்திய அரசு அவை வெறிகொண்ட யானையாக இனி அலையலாம், இந்தியாவின் ஒவ்வொரு அங்குலமும் விழிப்பாக இருக்க வேண்டிய நேரமிது இந்தியாவுக்குள் மட்டுமல்ல உலகெங்கும் இந்திய அடையாளங்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருந்த்தல் நலம்

காஷ்மீருக்கு வழங்கபட்ட 370ம் சட்டபிரிவு ரத்து

காஷ்மீருக்கு வழங்கபட்ட 370ம் சட்டபிரிவு ரத்து செய்யபட்டிருப்பதாக அமித்ஷா அறிவித்திருக்கின்றார். நிச்சயம் இது இந்தியாவின் வரலாற்றில் மிக துணிச்சலான நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை, நம்ப‌ முடியா அதிரடி முடிவு அது இந்திரா காந்தி கூட தயங்கி நின்ற விஷயம் அது, அவர் காலத்தில் பனிப்போரின் விளைவுக்கு அவர் அஞ்சியிருக்கலாம் அமித்ஷா அறிவித்திருப்பது வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு, இந்நாள் நிச்சயம் இந்திய வரலாற்றில் அதிர்வு கொடுத்தநாள் இதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதை காலமே காட்டும் எனினும் மகா துணிச்சலான […]

காஷ்மீர் சிக்கலுக்கு முதல் காரணம்

இந்த காஷ்மீர் சிக்கலுக்கு முதல் காரணம் யாரென்றால் ஆங்கிலேய அரசு அதுவரை காஷ்மீர் என்பது நேபாளம் போன்ற பூட்டான் போன்ற அமைதியான நாடு சீக்கிய அரசை வீழ்த்தி பஞ்சாபினை பிடித்த வேகத்தில் ஆப்கனையும் பிடித்து அப்படியே மேற்கு நோக்கி சாலைபோடும் அசுர வேகத்தில் இருந்தார்கள், ஆனால் அமெரிக்க எழுச்சி இன்னபிற விஷயங்கள் அவர்களை கட்டுக்குள் வைத்தன‌ ஆயினும் ஆப்கன் போரில் தங்களுக்கு உதவிய ரன்பீர் சிங் என்பவனை காஷ்மீர் மன்னர் என மகுடம் சூட்டினார்கள், அவன் வழிவந்தவர்தான் […]

மர்லின் மன்றோ

அவள் வாழ்வு ஏராளமான திருப்பங்களும் மர்மங்களும் ஆச்சரியங்களும் நிரம்பியது, 36 வயதுவரை மட்டுமே வாழ்ந்தாலும் உலகில் அவளுக்கென ஒரு அடையாளம் அமைந்தது 16 வயதுவரை அவளை போல் வறுமையில் வாடியவரில்லை, அவ்வளவு துன்பம். பொறுப்பற்ற தந்தை சுயநல குடும்பம் என்றிருந்த வீட்டில் சிறுவயதிலே வெளியேறினாள் சினிமா முதலில் அவளை விரட்டியது, நிர்வாண மாடலாக போஸ் கொடுத்தாலும் பத்தோடு பதினொன்று என விரட்டபட்டாள் வாடகை கொடுக்க வழியின்றி தெருவிலும், உண்ண வழியின்றி ரோட்டோரோடத்திலும் அவள் தவித்த நாட்கள் உண்டு […]

அங்கிள் சைமன் மட்டும் என்ன நினைப்பார்?

அன்றொரு நாள் இதே தமிழ்நாட்டில் காஷ்மீர பிரிவினைவாத தலைவன் யாசின் மாலிக்கை அழைத்து வந்து கூட்டம் போட்டு என்னவெல்லாமோ பேசிற்று தமிழக பிரிவினை கூட்டம் இனி ஒரு காஷ்மீரியினை கைவைத்தால் தமிழகம் சும்மா இருக்காது என கர்ஜித்தார் சைமன் பதிலுக்கு “டமில் சகோதர்க்கு துன்னை நிற்ப்பாது காஷ்மீறி கட்டமை, இலம் கண்டிப்பா கிடைக்ம்” என்றான் யாசின் மாலிக் இருவரும் கட்டிதழுவினார்கள், இன்னும் என்னவெல்லாமோ உறுதி எடுத்தார்கள் இன்று யாசின் மாலிக் என்பவன் இருக்குமிடம் தெரியவில்லை அங்கிள் சைமனிடம் […]

எப்படி இருந்தன தும்பிகள்?

எப்படி இருந்தன தும்பிகள்? படகு கட்டி ஈழத்துக்கு செல்லும் வெறி என்ன? தமிழின விரோதி யாராக இருந்தாலும் குரல்வளையினை கடித்து துப்பும் ஆக்ரோஷம் என்ன? இங்கே தனிநாடு வாங்கி அதில் இனதுரோகி என கலைஞரை அறிவிக்கும் வெறியும் கூச்சலும் என்ன? எவ்வளவு வீரம்? முழக்கம்? ஈழத்தை மீட்டு எடுத்துவிட்டு அப்படியே கன்னட அணைகளை உடைக்க துடித்த திணவெடுத்த தோள்கள் எங்கே? ஏந்திய வாள் எங்கே? காணவே இல்லை வீர புலிபடை , அருண்மொழிதேவனின் வீரபடை என்ன செய்கின்றது […]

ரஜினியினை ஒரு படத்தில் கேலியாக சித்தரித்துவிட்டார்களாம்

யார் யாரையோ கிழித்து தொங்கவிடும் உலகில் ரஜினியினை ஒரு படத்தில் கேலியாக சித்தரித்துவிட்டார்களாம் இதில் என்ன சர்ச்சை என்றுதான் தெரியவில்லை, அவர் செய்யும் அரசியல் வருகை குளறுபடிகளுக்கு இப்படி செய்யாவிட்டால்தான் ஆச்சரியம் ரஜினி முதலிலே சூப்பர் ஸ்டார் அல்ல, ஆதிகாலத்தில் துக்கடா வேடம் , வில்லன் வேடம், காமெடி வேடம் என பல வேடங்களில் வந்திருகின்றார் தொடக்ககால ரஜினியின் படங்களில் அவரே அவரை பலமுறை கலாய்த்திருக்கின்றார் அதை ஒப்பிடும்பொழுது இதெல்லாம் அவருக்கு தூசு எனினும் இந்த சினிமாக்காரர்கள் […]

தமிழ் சினிமா கொலைகாரர்களுக்கு வழிகாட்டியிருக்கின்றது

தமிழ் சினிமா யாருக்கு வழிகாட்டுமோ இல்லையோ சில கொலைகாரர்களுக்கு வழிகாட்டியிருக்கின்றது அதாவது திண்டுக்கல் பக்கம் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கின்றது, வழக்கம் போல அதன் தொடக்கம் காதல் தான். அப்பெண்ணுக்கு 18 வயது இருக்கலாம், அதுதானே அறியா காதல் பூக்கும் பருவம், அவளுக்கும் பூத்தது பூத்தது சிக்கல் அல்ல, ஆனால் நம்பகூடாதவன் மேல் பூத்ததுதான் கொடுமை ஒருகட்டத்தில் தீரா காதலில் அவன் வீட்டுக்கே சென்றுவிட்டாள் அந்த அபலை, தன்னை நம்பி வந்தவள் என்று கூட பாராமல் அவளை […]

ஈரான் முன்னிலை வகிக்கின்றது

மீன் பிடிப்பதை போல கப்பல் பிடி விளையாட்டில் இறங்கியிருக்கின்றது ஈரான், இப்பொழுதும் ஒரு கப்பலை இழுத்து சென்றிருக்கின்றார்கள் காரணத்தை கேட்டால் அது கடத்தல் எண்ணெய் என்கின்றார்கள், யார் கடத்தினார்கள்? யாருக்காக கடத்தினார்கள் என்றால் ஈரானிடம் சரியான பதில் இல்லை மாறாக சொல்ல வேண்டியவர்கள் சொல்வார்கள் என சொல்லிவிட்டு கப்பலை துறைமுகத்தில் கட்டிகொண்டிருக்கின்றது ஆக ஹோம்ஸ் கடற்சந்தியில் கப்பல்பிடி விளையாட்டு தீவிரமாக நடக்கின்றது 1:2 என்ற எண்ணிக்கையில் இப்பொழுது ஈரான் முன்னிலை வகிக்கின்றது

இன்று நண்பர்கள் தினமாம்

இன்று நண்பர்கள் தினமாம், வெள்ளையன் சொல்லித்தான் நட்பின் அருமை தெரிய வேண்டுமா என்ன? நட்புக்கே இல்லகணம் கொடுத்தது இந்தியா, வெள்ளையன் வரலாற்றில் அலெக்ஸான்டர் மட்டுமே நட்புக்கு அடையாளமாய் நிற்கின்றான், அதுவும் அருமை நண்பன் பார்மேனியொவினை கொன்றபின் தன் ராஜ்ஜியத்தை நண்பர்களுக்கு பிரித்து கொடுத்துவிட்டு செத்துவிட்டான், நண்பனுக்கான அஞ்சலி அது பாரதமும் ராமாயணமும் நட்புக்கான இடத்தை மிக அழகாக பதிவு செய்கின்றன‌ வள்ளுவன் அதற்கு குறளே அமைத்தான் எதிரியினை மிக சுலபத்தில் அடையாளம் கண்டுகொள்ளும் மனிதன் நண்பனை மிக […]