பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அதிமுகவின் நடவடிக்கைகள் சுவாரஸ்யமாகிவிட்டன‌

அதிமுகவின் நடவடிக்கைகள் சுவாரஸ்யமாகிவிட்டன‌ முத்தலாக் சட்டத்தை வழக்கம் போல மோடியின் செருப்பை தொட்டு ஏற்றுகொண்டார் பன்னீர் செல்வம் பெற்றெடுத்த சீமந்த புத்திரர் ஆக மக்கள் அவையில் அதிமுக அதற்கு ஆதரவு தெரிவித்துவிட்டது ஆனால் மாநிலங்கள் அவையில் சில திருத்தங்களை கண்டித்து அதிமுக கோஷ்டி வெளிநடப்பு செய்துவிட்டது என்னாயிற்று இவர்களுக்கு கோமா நிலையில் இருந்து விழித்துவிட்டார்களா என யோசித்த பாஜக தரப்பு உண்மையினை கண்டறிந்துவிட்டது அதாவது அதிமுகவில் பன்னீர் கோஷ்டியும் அதற்கு எதிர் கோஷ்டியும் உருவாகியிருப்பது பட்டவர்த்தனமாக தெரிந்தாகிவிட்டது […]

புதிய இந்தியாவில் இதெல்லாம் சகஜமோ என்னமோ?

புதிய இந்தியா என எந்த நேரத்தில் அறிவித்தார்களோ தெரியவில்லை புது புது சிக்கல்களாக வருகின்றன‌ இப்பொழுது புதிய மருத்துவ கொள்கை என ஒன்றை அறிவித்து இப்பொழுது மருத்துவ உலகையும் சீண்டிவிட்டார்கள் நாளை அதை கண்டித்து இந்திய மருத்துவ கழகம் வேலை நிறுத்தம் செய்யும் என தெரிகின்றது இதனால் நாடு முழுக்க சிகிச்சைகளில் சிக்கல் ஏற்படலாம் இன்னும் யாரெல்லாம் போராட போகின்றார்களோ தெரியாது, ஆனால் இனி அடிக்கடி போராடுவார்கள் போல் தெரிகின்றது புதிய இந்தியாவில் இதெல்லாம் சகஜமோ என்னமோ?

திமுகவில் நிறைய சைக்கோ உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்

நெல்லை முன்னாள் மேயர் கொலையாளி தான் ஒரு சைக்கோ என சொல்லிகொண்டே இருகின்றானாம் மனிதன் தெளிவான சைக்கோ போலிருக்கின்றது தன் தாய் சீனியம்மாளுக்கு அரசியல் எதிரி எனும் வகையில் உமா மகேஸ்வரியினை கொன்றதாக தெளிவாக சொல்லிவிட்டு தான் ஒரு சைக்கோ என சொல்லிகொண்டே இருக்கின்றான் இதிலிருந்து என்ன தெரிகின்றது? திமுகவில் நிறைய சைக்கோ உறுப்பினர்கள் இருக்கின்றார்கள், சைக்கோ பிரிவு என்றொரு பிரிவுமட்டும்தான் அதிகார பூர்வமாக தொடங்கபடவில்லை

அவர் அப்படித்தான் அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை

முக ஸ்டாலின் முதியவர் ஒருவரை மரியாதையின்றி தள்ளிவிடும் காட்சி வைரலாகின்றது. அவர் அப்படித்தான் அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை, முன்பே மெட்ரோ ரயில் உட்பட பல இடங்களில் அதை பார்த்தாயிற்று நிச்சயம் திமுக என்பது தலைவர்களின் பண்பால் வளர்ந்த கட்சி, அண்ணாவும் கலைஞரும் அதில் கண்ணும் கருத்துமாயிருந்தவர்கள் அண்ணா அதில் தன்னிகரற்றவர் கலைஞர் வாழ்வில் கூட ஏகபட்ட சம்பவம் உண்டு, ஒரு கிராமத்தில் கூட்டம் முடிந்து கிளம்புகின்றார் கலைஞர், பின்னால் ஓடிவருகின்றார்கள் சிறுவர்கள். பதறி காரை நிறுத்திய கலைஞர் […]

மக்களின் மனநிலை ஆன்மீகம் நோக்கி ஓடுகின்றது

கடந்த 40 வருடங்களில் மிக பெரிய புரட்சியாளர் அத்தி வரதர் என்பவரே மிகபெரும் கூட்டத்தை அவரே கூட்டியிருக்கின்றார், இவ்வளவுக்கும் அவர் பேசவுமில்லை எழுதவுமில்லை யாரையும் அழைக்கவுமில்லை தமிழகம் ஆன்மீகம்பால் திரும்பியிருக்கின்றது, அது தியானமடங்களோ கிறிஸ்தவ ஆலயங்களோ இல்லை வேறு தலங்களோ நிரம்பி வழிகின்றது மக்களின் மனநிலை ஆன்மீகம் நோக்கி ஓடுகின்றது, தேடி தேடி ஓடுகின்றார்கள் அத்திவரதருக்கான வரவேற்பு அதனை தெளிவாக காட்டுகின்றது, மிகபெரிய ஆன்மீக எழுச்சி ஏற்பட்டிருப்பதை கண்கூடாக தெரிகின்றது இது அரசும் ஆலய நிர்வாகமும் காவல்துறையும் […]

உண்மையில் காங்கிரசே தேசம் காத்திருக்கின்றது

நல்ல வேளையாக அன்று பாஜக அரசு இல்லாமல் காங்கிரஸ் அரசு இருந்தது இல்லாவிட்டால் ராமதாஸ் துணையோடு வீரப்பன் மனைவி அமித்ஷாவினை சந்தித்து அவனை காத்திருப்பாள் ஆட்டோசங்கர் மனைவிகள் ஆம் மனைவிகள் அவனை காத்திருப்பர் ஏன் பிரபாகரனின் தாயாரும் ஆண்டன் பாலசிங்கமும் இங்கு ஆரஞ்ச் ஜூஸ் குடித்து கொண்டிருப்பர் உண்மையில் காங்கிரசே தேசம் காத்திருக்கின்றது

விளையாட்டுதனமாக இருந்தால் சரியல்ல‌

நிச்சயம் பெரும் பார்வையினையும் கவனத்தையும் பெற்றுவிட்டோம் இன்னும் விளையாட்டுதனமாக இருந்தால் சரியல்ல‌ இனி ஒரு கட்சி நிலைப்பாடு எடுத்து விட வேண்டிய காலம் வந்துவிட்டது, எல்லா பக்கமும் இனி ஆடமுடியாது என்பதால் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது காமராஜரே சொன்னபடி அதிமுக என்பதற்கு திமுக பரவாயில்லை என்பதால் எந்நாளும் அதுவே நம் அபிமான கட்சி, அவர்களை தவிர இப்போதைக்கு யாரும் தமிழகத்திற்கு உகந்தகவர்கள் அல்ல நிச்சயம் நாம் இந்தியர்கள் சந்தேகமில்லை, ஆனால் தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் காக்க வேண்டிய […]

சில பாஜகவினர் விமர்சிப்பதுதான் காமெடி

பிரமோத் மகாஜன் என்றொரு பாஜக தலைவர் இருந்தார், ஓரளவு நல்ல மனிதர் இன்று அவர் இருந்திருந்தால் மோடியுமில்லை அமித்ஷாவுமில்லை ஆம் அவர்தான் முதல்வராகியிருப்பார் உள்வீட்டு சண்டையில் அவர் கொல்லபட்டார், ஏன் கொல்லபட்டார் எதற்கு கொல்லபட்டார் கொலையின் நோக்கமென்ன என இதுவரை தெரியாது மோடியும் அமித்ஷாவும் ஆளும் காலத்திலும் தெரியாது அல்லது தெரிய விடமாட்டார்கள் அந்த மர்மம் எந்நாளும் மர்மமே ஆனால் அதை எல்லாம் மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு திமுகவின் முன்னாள் மேயர் படுகொலையினை சில பாஜகவினர் விமர்சிப்பதுதான் […]

நன்றிக்குரிய அந்த முத்துலெட்சுமி ரெட்டிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

தமிழக பெண்களின் தனி அடையாளம் அவர், இன்றும் அவரே தமிழக பெண்களுக்கு மாபெரும் உத்வேகமும் வழிகாட்டியுமானவர் அந்த முத்துலெட்சுமி பிராமண பிறப்பு ஆனால் பிராமண கட்டுபாடுகளுக்கு அவர் கட்டுபடவில்லை, கல்வி கற்பேன் என போராடினார் 1900களில் பெண்களுக்கு கல்வி இல்லை, வெள்ளையன் ஆட்சி என்றபொழுதும் அவன் இங்குள்ள சம்பிரதாயங்களில் கைவைக்கவில்லை, ஐடா ஸ்கேடர் பொன்ற ஐரோப்பிய பெண் மருத்துவர்கள் வந்தபொழுதும் இங்கே மருத்துவம் பயின்ற பெண்கள் இல்லை இவ்வளவுக்கும் மருத்துவச்சி என பெண்களுக்கு நாட்டு மருத்துவம் சொல்லிகொடுத்து […]

காட்டுவாழ்க்கை எப்படி இருக்கும்ம்னு பார்க்க வந்திருகிகேன் ஜி..”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல கிரில்ஸ்ஜி, இன்னும் கொஞ்ச நாளையில இந்தியாவ காட்டுவாசி நாடா மாத்திருவோம் ஏற்கனவே வடக்க மாத்திட்டோம், தெற்க இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு நாடு முழுக்க பூரா பயலும் மாடு கோவணம்னு காட்டுவாசியா அலையபோறான், அப்போ ஒரு பிரதமரா தடுமாற கூடாதுல்ல ஜி, அதுக்குத்தான் காட்டுவாழ்க்கை எப்படி இருக்கும்ம்னு பார்க்க வந்திருகிகேன் ஜி..”