பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இஸ்ரேல் உலகை அதிர வைக்கும் விஷயத்தை வெளியிட்டுள்ளது

ஈரானும் அமெரிக்காவும் முட்டிகொண்டிருக்கும் நிலையில் ஈரானின் பரம எதிரியான இஸ்ரேல் உலகை அதிர வைக்கும் விஷயத்தை வெளியிட்டுள்ளது இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி “நாம் வான் பாதுகாப்பின் புது யுகத்தில் நுழைந்துவிட்டோம், இனி எதிரியின் ஏவுகனைகளும் விமானமும் நுழையமுடியாதபடி பல அடுக்கு பாதுகாப்பு செய்துவிட்டோம்” என்கின்றது ஆம் லேசர் கற்றையினை வலுபடுத்தி மகா வலுவான வான் வேலியினை அமைத்திருக்கின்றது இஸ்ரேல் ஏற்கனவே அயர்ன் டோம் எனப்படும் சிஸ்டம் அவர்களின் நகரங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நிலையில் […]

புதுவெளிச்சத்துடன் எழும்பி வருவதை உலகமும் ஆச்சரியத்துடன் கவனிக்கின்றது

ஒரு இனத்தை தொடர்ந்து அடிமையாக வைத்திருக்க எல்லா ஆளும் இனமும் செய்யும் நுட்பம் அந்த இனத்தின் அடையாளத்தை ஒழிப்பது அலெக்ஸாண்டர் காலத்தில் அது உண்டு மிகசிறந்த உதாரணம் ரோமர்கள் அழித்து போட்ட யூதர்களின் ஆலயம் அன்றைய இஸ்ரேல் யூதேயா என தனிநாடாக இருந்தது, ஆனால் ரோமருக்கு அடங்கிய நாடாக இருந்தது, ஏரோது அதன் அரசனாய் இருந்தான் அப்பொழுதுதான் இயேசு பிறந்தார் யூதர் அவ்வப்போது கலகம் செய்வதும் ரோமர் அடக்குவதுமாய் காலம் நகர்ந்தது, இயேசுவினை கூட சுதந்திர போராளியாக […]

இந்த குழந்தையினை தர்பாரில் ரஜினி மகளாக நடிக்க வைத்திருக்கலாம்

இந்த குழந்தையினை தர்பாரில் ரஜினி மகளாக நடிக்க வைத்திருக்கலாம் நாம் சொல்வது வலது ஓரமாய் சிரிக்கும் அந்த அழகு குழந்தையினை… அட அட அட‌ “சிரித்தாலே போதும் தெய்வங்கள் கூடும்..”

ஈரானில் உக்ரைனிய விமானம் வீழ்ந்ததில் அரசியல் ஆரம்பாயிற்று

ஈரானில் உக்ரைனிய விமானம் வீழ்ந்ததில் அரசியல் ஆரம்பாயிற்று அது விழும் பொழுதே, அதாவது ஈரானின் விமான நிலையம் அருகே அது 180 பயணிகளோடே விழுந்தபொழுது பெரும் சர்ச்சையாயிற்று ஆனால் அந்த நேரம் ஈரான் அமெரிக்க முகாம்களை தாக்கிகொண்டிருந்ததால் சிக்கல் இல்லை இப்பொழுது அதை வீழ்த்தியது அமெரிக்காவா ஈரானா என்ற சர்ச்சை வெடிக்கின்றது ஏதோ நடந்திருக்கின்றது, ஈரான் அமெரிக்க முகாம்களை தாக்கிய நேரம் தங்கள் வான்வெளியினை பலபடுத்தியிருக்கலாம் அதில் ஏதும் எதிர்பாரா விஷயம் நடந்திருக்கலாம் என்பது ஒரு தியரி […]

ஒருவரை நம்ப இன்னொருவர் தயாராக இல்லை

ஈரானும் அமெரிக்காவும் யுத்தத்துக்கு தயார் இல்லை என பரஸ்பரம் அறிவித்து கொண்டாலும் ஒருவரை நம்ப இன்னொருவர் தயாராக இல்லை இந்த பய இவ்வளவு நடந்தும் சண்டைக்கு வரவில்லை என்றால் வேறு ஏதோ திட்டமிடுகின்றான் என இரு நாடுகளுமே ஒன்றை ஒன்று சந்தேகத்தோடு பார்த்துகொண்டிருக்கின்றன‌ இருவருக்குமே தூக்கமில்லை தலையினை பிய்த்துகொண்டிருக்கின்றார்கள் பழைய படத்தில் நம்பியாரும் ராம்சந்திரனும் சண்டைக்கு முன்பு அரைமணி நேரம் சுற்றி சுற்றி வருவதை போல் வருகின்றார்கள் ஆனால் கடைசி வரை அப்படியேத்தான் சுற்றிகொண்டிருப்பார்கள் போலிருக்கின்றது

எந்த கட்சி ஊர்வலம் என்றாலும் கோவில் யானை போல் சென்றுவிடுகின்றார்கள்

திருச்சியில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாக பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பெரும் கூட்டம் கூடியது : செய்தி காங்கிரஸ், அதிமுக, திமுக, கறுப்பு சட்டை திக, இஸ்லாமியர் கட்சி, திருமா கட்சி, இப்பொழுது பாஜக என பெரும் கூட்டம் எல்லா கட்சிக்கும் கூடுகின்றது. திருச்சி ஒரு மாதிரி ஊராக இருக்கும் போல அதாவது அந்த ஊர் மக்கள் எல்லா கட்சியிலும் இருக்கின்றார்கள் , அதனால் எந்த கட்சி ஊர்வலம் என்றாலும் கோவில் யானை போல் சென்றுவிடுகின்றார்கள்

அதை பார்க்காவிட்டால் எப்படி?

சாலையில் அலங்கார கார்கள் அணிவகுப்பதற்கும் தேர் வருவதற்கும் வித்தியாசம் உண்டு, ரஜினி படம் அந்த தேர்வகை , அதை பார்க்காவிட்டால் எப்படி? அப்படி தர்பார் படத்துக்கு போயாயிற்று, தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஒரு பெரும் முடிவோடு தமிழகத்தை சுற்றிவருவது தெரிகின்றது. மிகபெரும் கோடீஸ்வரனான அந்த ஈழதமிழன் மீனுக்கு இரை போடும் பொழுது போக்கு போல தமிழ் சினிமாவினை தயாரிக்கின்றார் போல‌ தர்ப்பார் படத்தில் கதை என்பது முருகதாஸின் பழைய படங்களின் கதை, நாகம் தன் குட்டியினை தானே விழுங்குமாம், […]

வைகோ எனும் தமிழக சாபத்தை மன்னிக்கவே முடியாது

எதை வேண்டுமானாலும் மன்னிக்கலாம், ஆனால் துணை ஆய்வாளர் இரு சர்ச்சைகுரிய நபர்களால் சுட்டு கொல்லபட்டவுடன் அவர்கள் மணல் கொள்ளையர் என சொன்ன வைகோ எனும் தமிழக சாபத்தை மன்னிக்கவே முடியாது அவர்கள் தீவிரவாதிகள் என எல்லோரும் சொல்ல தயங்கும் நேரத்தில் , விசாரணை முடிவு வரட்டும் அதற்குள் ஏதும் சொல்லகூடாது என அமைதிகாக்கும் நேரத்தில் வைகோவுக்கு மட்டும் அவர்கள் மணல் கொள்ளையர்கள் என சொன்னவன் எவன்? மணல் கொள்ளையன் லாரியுடன் வராமல் சும்மா சுட்டு விட்டு ஓடுவானா? […]

பல கிறிஸ்தவர்கள் பொங்கிவிட்டார்கள்

நாம் பொங்கல் பண்டிகை பற்றி சொன்னதற்கு அதாவது கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் கொண்டாடா நிலையில் அவர்களுக்கு ஏன் பொங்கல் பரிசு என சொன்னதற்கு பல கிறிஸ்தவர்கள் பொங்கிவிட்டார்கள் இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால் அவர்களுக்கு பைபிளே ஒழுங்காக தெரியவில்லை அல்லது படிக்கவே இல்லை என்பது நன்றாக தெரிகின்றது பரிதாபம் நாம் என்ன சொன்னோம், பொங்கலின் பிரதானம் சூரியனுக்கு நன்றி சொல்லும் நிகழ்வு, பொங்கலின் முதல் தத்துவமே அதுதான். எந்த கிறிஸ்தவன் இயேசுவினை விட்டு இன்னொரு விஷயத்தை வணங்குவான்? வணங்கட்டும் […]

கருணாநிதிக்கு அந்தமானில் ஏன் சிலை திறக்கின்றார்கள்?

கருணாநிதிக்கு அந்தமானில் ஏன் சிலை திறக்கின்றார்கள் என பார்த்தால், ஸ்டாலினுக்கு அங்கு பெரும் மரம் அறுக்கும் தொழிற்சாலை உண்டு என தகவல் கசிகின்றது, சில செய்திகள் வருகின்றது சமூக நீதி என்பதும், பிராமணரிடம் இருந்து விடுதலை என்பதும் மர ஆலை நடத்துவது போலிருக்கின்றது.. ஆக “ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனோ, காசு காரியத்தில் கண் வையடா தாண்டவகோனே, முட்டா பயலை எல்லாம் தாண்டவகோனே காசு முதலாளி ஆக்குதடா தாண்டவகோனே..” எனும் பராசக்தி பாடல் வரி நினைவுக்கு வருகின்றதா இல்லையா?

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications