பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வாழ்க நீ! எம்மான்!!! – மோடி

நரேந்திர மோடி என்பது தனிப்பெயர் மட்டும் அல்ல, நரேந்த்ர மோடி என்பது பாரத பிரதமரின் பெயர் மட்டுமல்ல, உலகை வசீகரிக்கும் மந்திர சொல் மட்டுமல்ல‌; நரேந்திர மோடி என்பது ஒரு உணர்வு, ஒரு எழுச்சிமிக்க மூச்சு, நம்பிக்கையும் உற்சாகமும் சிலிர்ப்பும் கொடுக்கும் நாமம், நரேந்திர மோடி என்பது ஆச்சரியம் கலந்த புன்னகை கொடுக்கும் பெரும் நிம்மதி உணர்வு. எதெல்லாம் இந்தியருக்கு குருடன் கண்ட கனவு போல வார்த்தையாக இருந்ததோ, எதெல்லாம் எம்மாலும் இதெல்லாம் சாத்தியமா என இருந்ததோ […]

ஸ்ரீரங்கத்து தேவதை

இன்று உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்ற வெகு சில பெண்கள் உண்டு. அமெரிக்காவின் கமலா ஹாரீஸ் உள்ளிட்ட வெகு சிலரே அந்த இடத்தில் உண்டு, அப்படி சில அரசியல் பெண்களுக்குத் தனி செல்வாக்கு உலகில் உண்டு. அந்த வரிசையில் முதன் முதலில் ஒரு தமிழச்சி இடம் பிடித்திருக்கின்றார். உலகம் அவரை உற்று கவனித்து பல விஷயங்களில் பாராட்டிக் கொண்டிருக்கின்றது. அவர் திருச்சி தமிழச்சி, பின் வெளிநாட்டில் படித்து கணவருடன் பெங்களூரிலும் ஐதராபாத்திலுமாக‌ வசித்து, பள்ளி நடத்தியபொழுது சுஷ்மாவின் […]

நெல்சன் மண்டேலா

அந்த தென் ஆப்ரிக்கா, பெரும் கண்டமான‌ ஆப்ரிக்காவின் தெற்கு பகுதிநாடு, ஆனால் மிக மிக வளமான நாடு, வைரத்திற்கும் தங்கத்திற்கும் இன்னும் பல வகையான பொருளுக்கும் பெயர்பெற்ற நாடு, வளம் இருந்தால் அங்கு யார் இருப்பார்? அதுவும் மக்கள் அறியாமையில் இருந்தால் யார் இருப்பார்? எல்லாம் வேட்டையாட ஒரு வல்லரசு இருக்கும், அப்படி 19ம் நூற்றாண்டில் அதை ஆக்கிரமித்த நாடு பிரிட்டன் 19ம் நூற்றாண்டிலே பிரிட்டன் அன்றே பிடித்து வைத்திருந்தது, உலகெல்லாம் இருந்து தமிழர் உட்பட தொழிலாளர்களை […]

அண்ணாமலையின் இரண்டாம் இலங்கை விஜயம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இரண்டாம் இலங்கை விஜயத்தை எப்படி பார்க்கின்றீர்கள் என எம்மிடம் கேட்டால் விஷயம் மிக மிக ஆழமானது துரதிருஷ்ட வசமாக இதுபற்றி தமிழக ஊடகம் சொல்லவில்லை, முன்பு சோ.ராமசாமி காலத்தில் மிக சரியாக ஈழவிவகாரங்களை சொன்ன துக்ளக் பத்திரிகையும் சொல்லவில்லை ஏன் தமிழக பாஜக செய்திகளே சொல்லவில்லை இதையெல்லாம் சொல்லவேண்டிய தமிழக பாஜகவின் ஐடி பிரிவும் வார் ரூம் வானரங்களும் உள்கட்சியில் சண்டையிடுவதெல்லாம் பாஜகவின் சாபம் அல்லது நோய் விஷயம் அவ்வளவு முக்கியமானது, […]

காட்மேன் டிரைலர் நிறுத்தபட்டதில் பலருக்கு கடும் வருத்தம்.

இந்த காட்மேன் டிரைலர் நிறுத்தபட்டதில் பலருக்கு கடும் வருத்தம் சிலருக்கு கண்ணீர் அழுகை அதில் திருமாவும் பா.ரஞ்சித் என்பவரும் முக்கியமானவர்கள் அதாவது இவர்கள் தொழிலே மேல்சாதி என எதையாவது சொல்லி, இந்துமதத்தை சீண்டிகொண்டே இருப்பது என்பதால் அப்படித்தான் சொல்வார்கள். டிரைலர் நிறுத்தபட்டது ஆதிக்கசாதியின் வெறி என்கின்றது இந்த கோஷ்டி கவனியுங்கள் குடியரசு தலைவர் ஒரு தலித், தமிழக சபாநாயகர் ஒரு தலித், தமிழக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் ஒரு தாழ்த்தபட்ட சாதி, ஸ்டாலினின் பலம்வாய்ந்த கூட்டாளி திருமா […]

உண்மைகள் உறங்குவதுமில்லை, பொன்.சிவகுமாரன் மறைவதுமில்லை.

அது 1974ம் ஆண்டு, ஈழ தமிழர்களை சிங்கள அரசுகள் ஒடுக்க ஆரம்பித்த நேரம். வஞ்சகமாக இந்திய மலையக வம்சாவழிதமிழரில் பெரும்பான்மையினரை இந்தியாவிற்கு அனுப்பிவிட்டு (அப்பொழுது ஒரு ஈழதமிழரும் அதனை கண்டிக்கவில்லை,எதிர்க்கவில்லை என்பதுவேறுகதை ) ஈழதமிழரை குறிவைத்து காய்களை நகர்த்தியது. இறுதியாக ஒரு திட்டத்தினை கொண்டுவந்தது. கொண்டுவந்தவர் சிறிமாவோ பண்டாரநாயக, தந்திரகாரி அவர். யானைகுட்டியை கொடுத்து கச்சதீவை வாங்கியர் (அதாவது கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கபட்டபொழுது இந்திராவுக்கு இவர் ஒரு யானைகுட்டி பரிசளித்தார்) என சிங்களர்களால் கொண்டாடபட்ட சிறீமாவோ. அதாவது […]

மத்திய அரசை வாழ்த்துகின்றோம்.

கொரோனா காலத்தில் தன் மகளின் படிப்பு செலவுக்கு வைத்திருந்த ரூபாய் 5 லட்சத்தை மக்களுக்கு செலவிட்ட மதுரை மோகன் என்பவரை முன்பே மோடி பாராட்டியிருந்தது குறிப்பிடதக்கது. இப்பொழுது அவரை இன்னும் கவுரவத்திருக்கின்றது அரசு அதாவது மோகனை அழைத்து கட்சியில் சேர்க்கவில்லை, ஒன்றிய தலைவர் பதவி கொடுக்கபடவில்லை அது அரசியல் அதை விட பெரும் கவுரவத்தை செய்திருக்கின்றது மத்திய அரசு. ஆம் எந்த மகளுக்காக சேர்த்துவைத்த பணத்தை மோகன் மக்களுக்கு செலவிட்டாரோ, அதனால் எந்த மகளுக்காக கலங்கி நின்றாரோ […]

இந்திய சீன முறுகலில் ஒரு நாடு கனத்த அமைதி , அது யாரென்றால் ரஷ்யா.

என்னதான் கொரோனா என்றாலும் அமெரிக்கா வரதுடித்து என்னவெல்லாம் சொல்லும் களத்துக்கு ரஷ்யா வராமல் இருப்பது ஆச்சரியமாக பார்க்கபட்டது இப்பொழுது இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் எதையோ சம்பிரதாயத்துக்கு சொல்லியிருக்கின்றாரே தவிர விஷயம் வேறு எங்கோ செல்கின்றது இந்தியாவும் சீனாவும் வைத்திருப்பது ரஷ்ய சாதனங்களே, இனி யுத்தம் என வந்தால் ரஷ்ய ஆயுதங்களே இருபக்கமும் பாயும் பாகிஸ்தானும் பெரும்பாலும் இப்பொழுது சீனாவுடன் சாய்வதால் இனி இந்திய எல்லையில் எந்த யுத்தம் வந்தாலும் ரஷ்ய ஆயுதமே வெடிக்கும் சீன தயாரிப்பு சில […]

சீனா , நேபாள அடிமைக்கு ஒரு வில்லங்கமான திட்டத்தை கொடுத்தது.

நேபாள அமைச்சர் ஒருவரும், பிரதமர் ஓலியும் ஒரு வரைபடத்தை வைத்து கொண்டு இந்தியா எங்கள் பகுதிகளை ஆக்கிரமித்து வைத்திருக்கின்றது என கூப்பாடு போட்டதற்கு இந்தியா பதிலேதும் சொல்லவில்லை காரணம் இரு நாடுகளும் ஒப்புகொண்ட வரைபடம் உண்டு, அதில் சர்ச்சைகுரிய பகுதிகள் இந்திய பகுதி என்பது என்றோ தீர்வாயிற்று நேபாளத்தில் சில குழப்பவாதிகள் தூக்கிதிரியும் படம் நேபாள அரசால் அங்கீகரிக்கபட்ட படமல்ல என்பதால், அது மெட் இன் சைனா என்பதால் இந்தியா அதன் போக்கில் இருந்தது. (நாம் தமிழர் […]

சீன நிறைய சிக்கலிலே சிக்கியிருக்கின்றது!

சீனாவினை கட்டம் கட்டி தீருவது என முடிவு செய்துவிட்ட அமெரிக்கா , சில ராஜதந்திர நகர்வுகளை முன்வைக்க ஆடிபோய் கிடக்கின்றது சீனா ஆம் ஹாங்காங்க் சீனாவின் ஒரு பகுதி என சீனா சட்டம் கொண்டுவருவது பெரும் சர்ச்சையாகி பிரிட்டனும் அமெரிக்காவும் களத்துக்கு வந்து குதிக்கின்றது அப்படி சட்டம் வந்தால் ஹாங்காங் வாசிகளுக்கு பிரிட்டன் குடியுரிமை அளிப்போம் என்கின்றது பிரிட்டன், அப்படியானால் அந்த பிரிட்டன் குடிமக்களின் சொத்து என ஹாங்காங்கில் பிரிட்டன் தலையிட முடியும் இன்னொரு பக்கம் அமெரிக்க […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications