பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இதுதான் மும்பை அரசியல்

மகராஷ்ட்ராவில் பாஜக ஆட்சியில் இல்லா நிலையில், சிவசேனையும் காங்கிரசும் ஆட்சியில் இருக்கும் நிலையில் தீபிகா படுகோனே டெல்லி பல்கலைகழக பயங்கரவாத மாணவர்களை பார்க்க சென்றிருக்கின்றார் அல்லவா? இதுதான் மும்பை அரசியல், கூடவே பத்மாவதி பட சர்ச்சைக்கு பழிவாங்க கிளம்பிவிட்டது அம்மணி இதுவே பால்தாக்கரே இருந்திருந்தால் அம்மணி வீடு ரணகளமாகியிருக்கும் தாக்கரே இல்லை, இப்பொழுதுள்ள சிவசேனை காங்கிரசால் கட்டிவைக்கபட்டிருக்கின்றது இருந்து பாருங்கள், இன்னும் பலர் வருவார்கள் ஏன் தாவுத் இப்ராஹிமே வந்தாலும் வரலாம்

ஈரான் தன் கடும் பழிதீர்த்தலை கட்டாயம் செய்யும் என எதிர்பார்க்கும் அமெரிக்கா

ஈரான் தன் கடும் பழிதீர்த்தலை கட்டாயம் செய்யும் என எதிர்பார்க்கும் அமெரிக்கா, சில கணக்குகளை இடுகின்றது அதாவது அல்கய்தா, ஐஎஸ் போன்றவை உலகெல்லாம் வலைபின்னல் கொண்ட இயக்கம், உலகில் எங்கும் தாக்கும் வண்ணம் அவை கட்டமைக்கபட்டிருக்கின்றன‌ ஆனால் அவை சன்னி இயக்கம், ஷியாவான சுலைமானி கொலைக்கு அவை பழிவாங்க நிச்சயம் கிளம்பாது இதனால் உலகெல்லாம் அமெரிக்காவுக்கு மிரட்டல் குறைவு என்பதால் ஷியாக்கள் வலுவான அரபு பகுதியில் மட்டும் தனி கவனம் செலுத்துகின்றது அமெரிக்கர்கள் இஸ்ரேல் மற்றும் ஜோர்டானுக்கு […]

அந்த ஆலயம் சாக்கடையாயிற்று

நிச்சயம் அந்த ஜேஎன்யூ கோவிலாக நினைத்துத்தான் கட்டபட்டது, அங்கு இந்நாட்டு மாணவர் படித்து பெரும் அறிவுடன் வந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்றுதான் கட்டபட்டது பெரும் கோடிகணக்கான நிதி , மக்களின் பணம் அந்த நோக்கத்துக்காகவே செலவழிக்கபடுகின்றது ஆனால் மாபெரும் ஆலயமாக இருந்து அறிவு தீபங்களை தந்து அந்த பல்கலைகழகம் நாட்டுக்கு வெளிச்சமேற்றும் என நினைத்தால் ஏமாற்றமே வந்துவிட்டது அந்த ஆலயம் சாக்கடையாயிற்று, கொசுக்கள் உற்பத்தியாகின்றன‌ அந்த சாக்கடையில் பன்றிகளும் ஒரு சில நச்சு பாம்புகளும் புகுந்துவிட்டன, […]

எம் பதிவினை எடுத்து அவர்கள் பதிவு போல் போட்டுகொள்கின்றார்கள்

எம் பதிவினை எடுத்து அவர்கள் பதிவு போல் போட்டுகொள்கின்றார்கள், ஏதும் சொன்னால் ஆக்ரோஷமாக திட்டுகின்றார்கள். இனி வியாசர் வந்தாலே ஜெயமோகனின் அடிபொடிகள் பாரதம் எழுதியது ஆசான் என்பார்கள், ராஜராஜசோழன் வந்தாலே தஞ்சை கோவிலை அவனுக்கு கொடுக்கமாட்டார்கள் ஷாஜகான் வந்து தலைகீழாக நின்றாலும் தாஜ்மஹால் அவன் உரிமை ஆகாது விஷயத்தை உலகுக்கு கொடுப்பதோடு ஒருவனின் கடமை முடிந்துவிடுகின்றது அப்படிபட்ட இந்த உலகில் நாமெல்லாம் எம்மாத்திரம், ஆயினும் அந்த பரிதாபத்துகுரிய ஜீவன்கள் அவர்களின் குழந்தைகளையாவது சொந்தமாக பெற்று கொள்ளட்டும்

நமக்கு ஏது முகமூடி?

ஒருமாதிரி சீண்டுகின்றார்கள், தூற்றுகின்றார்கள், அன்று இவன் எழுதியதை பாருங்கள் என முகத்திரையினை கிழிப்பதாக சொல்கின்றார்கள் நமக்கு ஏது முகமூடி? இல்லா முகதிரையினை எப்படி கிழித்தார்கள்.நாம் என்றுமே திறந்த புத்தகம் நல்லவேளையாக இவர்கள் அன்றே இருந்தால் வால்மிகியினை ராமாயணம் எழுத விட்டிருக்கமாட்டார்கள், காளிதாசனை ஆடுமேய்ப்பனாகவே இரு என வைத்திருப்பார்கள் சாகுந்தலையும் கிடைத்திருக்காது 1960களில் இருந்தால் நீ அன்னாளைய கறுப்பு சட்டை என கண்ணதாசனை விரட்டியிருப்பார்கள், அர்த்தமுள்ள இந்துமதம் எனும் பொக்கிஷமும் கிடைத்திருக்காது புராணத்தில் ஒரு கதை உண்டு ஒரு […]

சாதிய படமாம், அதை வெளியிட கூடாதாம்..

எத்தனையோ படங்களில் இந்து தெய்வங்களை மகா கொச்சையாக விமர்சிப்பார்கள் சமீபத்தில் கூட ஒரு யோகிபாபு படத்தில் சோ ராமசாமி உட்பட பலரை கடுமையாக விமர்சித்தும் ஈரோட்டு ராம்சாமியினை கடவுள் அளவுக்கும் செதுக்கியிருந்தார்கள் அவர்கள் எவ்வளவும் செய்யலாம், இந்து மதத்தையும் அதன் கடவுள்களையும் மகா மட்டமாக கேவலபடுத்தலாம் அவர்கள் சினிமாவில் பிராமணரை எவ்வளவும் சீண்டலாம், பழிக்கலாம் ஆனால் இவர்கள் செய்யும் அட்டகாசத்தை சினிமாவாக‌ சொன்னால் அது சாதிய படமாம், அதை வெளியிட கூடாதாம்..

எதற்கு கிழித்தார்கள்?

ஆளுநர் உரையினை சட்டசபையில் கிழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் ஆக இனி யாரும் திமுக சட்டபையில் என்ன கிழித்தது என கேட்டுவிட முடியாது எதற்கு கிழித்தார்கள்? ஒருவேளை பழனிச்சாமி அந்த அறிக்கையினை முக ஸ்டாலின் முதலில் வாசிக்க வேண்டுமென சொல்லிவிடுவார் என்று அஞ்சியிருப்பார்களோ?

இந்து அமைப்புகள் நுழைந்தது தவறு

என்ன இருந்தாலும் டெல்லி பல்கலைகழகத்துக்குள் இந்து அமைப்புகள் நுழைந்தது தவறு ஆனால் அவர்கள் நுழையும் அளவு நிலமையினை மோசமாக்கி வழி செய்து கொடுத்தது அந்த தேசவிரோத மாணவர்களும் அவர்களை விட்டு வைத்த அரசும்

அந்த மனிதர் மகா சுவாரஸ்யமானவர்

அந்த மனிதர் மகா சுவாரஸ்யமானவர், தமிழ் திரையுலகம் கண்டெடுத்த ரத்தினம், தமிழ் சினிமாவுக்கே திருப்புமுனை கொடுத்தவர் பாக்யராஜ் சினிமாவில் தன் அறிவாலும் திறமையாலும் ஜெயித்து வந்தவர் அவர், அவர் கொடுத்த முத்திரையும் அற்புதமான படங்களும் தமிழ் சினிமாவின் வரங்கள் காலத்தால் மிஞ்சி நிற்கும் ரசனையான காட்சி முதல் சிரிக்க வைக்கும் காமெடி, உருகவைக்கும் சென்டிமென்ட் வரை அவர்படங்களின் முத்திரையே தனி சாதாரண அசிஸ்டென்ட் டைரக்டராக வந்து, தனக்கென ஒரு இடத்தை பிடித்து எல்லோர் மனதிலும் சிம்மாசனமிட்டு அமர்ந்த […]

இவர் ஏன் இவ்வளவு சிரமபட்டு உண்ணாமல் உறங்காமல் நம்மை ஆய்வு செய்தார்?

இந்த நபர் யாரென தெரியவில்லை ஆனால் மனிதர் வெற்றிமாறனின் ரசிகர் போலிருக்கின்றது, முருகதாஸ் போன்றோர் இவரை பயன்படுத்தலாம் இவர் ஏன் இவ்வளவு சிரமபட்டு உண்ணாமல் உறங்காமல் நம்மை ஆய்வு செய்தார்? திமுகவினரிடம் கேட்டால் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இருக்க்கும் ஷாப்பிங் காம்ளக்ஸை இவர் பெயரில் கொடுத்துவிட்டார் என சிரிக்காமல் சொல்லியிருப்பார்கள் விஷயம் முடிந்திருக்கும் நாம் நம்மை பற்றி அதாவது நம் நிலைபாட்டினை பற்றி பல இடங்களில் சொல்லியாயிற்று நாம் ஒன்றும் 92 வயது அனுபவசாலி அல்ல, அரசியலிலோ […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications