பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

எங்க இழுத்துட்டு போறாங்கண்ணு எனக்கே தெரியல்ல‌

படம் என்ன சொல்கின்றது தெரிகின்றதா? சும்மா இந்த படத்தை வெளியிடவில்லை ரஜினி. படம் குறிப்புகளை உணர்த்துகின்றது,  ரஜினி சொல்லவருவது இதுதான் “நான் விருப்பட்டு குதிரை ஏறல்ல‌ , அரசியல்ங்கிற குதிரையில என்ன ஏறவைத்து இழுத்துட்டு போறாங்க. முன்னால போறவன் யாருண்ணு உங்களுக்கே தெரியும். அவன் போக்கில இழுக்கிறான் அல்லவா, இப்படித்தான் சிலர் இரக்கமே இல்லாமல் என்னை இழுத்துட்டு போறாங்க.. விருப்பம் இல்லாம அந்த குதிரையில ஏறிபோறேன்னு இதைவிட எப்படி சொல்லமுடியும்? ரொம்ப பாவங்க நான், எங்க இழுத்துட்டு […]

சசிகலா சிறையில் கம்பியூட்டர் தொழில்நுட்பமும் கற்கின்றார் : செய்தி

சிறையில் காளான் வளர்த்தல் உட்பட சில வேலைகளை செய்யும் சசிகலா கூடுதலாக கம்பியூட்டர் தொழில்நுட்பமும் கற்கின்றார் : செய்தி அரசியலில் அவர் வளர்த்த காளான்கள் போதாதா? சிறையில் சென்றும் வளர்க்க வேண்டுமா? சும்மாவே ஒருவரை கண்காணிப்பதில் கில்லாடி சசிகலா, இப்பொழுது தொழில்நுட்பமும் கற்கின்றாராம். இன்னும் 3 வருடத்தில் என்னவெல்லாம் கற்று வெளிவரபோகின்றாரோ அநேகமாக ரோபா போல் வெளிவரலாம், அதன் பின் இருக்கின்றது அதிரடி. சிறை ஒரு சுவாரஸ்யமான மர்மமான அரசியல்வாதியினை தொழில்நுட்ப அறிவோடு அனுப்பி வைக்க போகின்றது.

மராட்டிய விவசாயிகள் போராட்டம் முழுவெற்றி

மராட்டிய விவசாயிகள் போராட்டம் முழுவெற்றி பெற்றிருக்கின்றது, மும்பையில் அவர்கள் பேரணி நுழைந்தபொழுது மக்கள் பேராதரவு கொடுத்து வரவேற்றிருக்கின்றார்கள் அரசு பணிந்து அவர்களின் விவசாயகடன் , மின்சார கட்டணம் எல்லாம் ரத்து செய்திருக்கின்றது தமிழகத்தில் ஏன் விவசாயி பெரிதும் பொங்கவில்லை என்பதன் காரணம் மின் கட்டணம் இலவசம் என்பது. கலைஞர் செய்துவைத்த அட்டகாசமான திட்டம் அது. உண்மையில் விவசாயிகளுக்கு அது மிகபெரும் வரபிரசாதம் இன்றைய விவசாயி யாரும் அன்று சங்ககாலம் போல ஆறு குளத்து பாசானம் செய்யவில்லை, செய்தாலும் […]

பாபா குகை முன்பு ரஜினிகாந்த்…

ரஜினிக்கு இருப்பது இரண்டே வழி ஒன்று விவேகானந்தரின் , ரமண மகரிஷியின் வழியில் ஆன்மீகவாதியாவது அல்லது அரசியல்வாதி ஆவது இதனை தாண்டி இரண்டும் கலந்து ஆன்மீக அரசியல்வாதி ஆவேன் என்பதெல்லாம் குழப்பம் ஏற்படுத்தும் கதை நல்ல ஆன்மீகவாதி அரசியலுக்கு வருவதில்லை, அரசியல்வாதி மனசாட்சிபடி நடந்தால் அவனால் ஆன்மீகத்திற்கு செல்லமுடியாது காரணம் இந்த உலகில் நல்லாட்சி கொடுத்தவன் எல்லாம் கடவுள் நம்பிக்கையற்றவர்களாகவே இருந்திருக்கின்றார்கள், வரலாறை புரட்டினால் அறியலாம். காரணம் அரசு என்பது அறம், மனசாட்சி, 100% நியாயம் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டது […]

குரங்கணி தீவிபத்து எதற்காம் தெரியுமா?

ஒரு சில குருவி மூளைகாரர்கள் இருக்கின்றார்கள், ஏதும் விபத்து நடந்தால் உடனே இது மத்திய அரசின், உளவுதுறையின் சதிதிட்டம் என கிளம்பிவிடுவது இந்த குரங்கணி தீவிபத்து எதற்காம் தெரியுமா? அப்படியே மலையினை அரசு கட்டுபாட்டில் கொண்டுவந்து அந்த நியூட்ரினோ மையத்தை அமைப்பார்களாம் எங்கே மல்லாக்க கிடந்து யோசிப்பார்களோ தெரியாது, இவர்களுக்கு மட்டும் இப்படி விபரீத சிந்தனைகள் வருகின்றது ஏன் காட்டில் இதற்கு முன் தீ பிடித்ததே இல்லையா? உலகம் முழுக்க அரசுகள் தீ வைக்குமா? இதெல்லாம் இந்நேரம் […]

மகராஷ்டிர விவசாயிகள் பேரணி நாட்டை உலுக்குகின்றது

மகராஷ்டிர விவசாயிகள் ஆயிரகணக்கான விவசாயிகளின் பேரணி நாட்டை உலுக்குகின்றது, சிகப்பு கொடிகளுடன் அவர்கள் கிளம்புவது நாட்டை அதிர்வுள்ளாக்குகின்றது தமிழ்நாட்டிலும் இப்படி விவசாயிகள் உண்டு. ஆனால் மொத்தமாய் திரள்வார்களா என்றால் இல்லை பாலாற்று கரை விவசாயிக்கு காவேரிகரை விவசாயி வரமாட்டான், காவேரிகரை விவசாயி பிரச்சினைக்கு மற்ற விவசாயிகள் வரமாட்டார்கள் மலைபகுதி விவசாயி பிரச்சினைக்கு கோவைக்காரர்கள் வரமாட்டார்கள். கோவை விவசாயி பிரச்சினை கன்னியாகுமரி விவசாயிக்கு புரியாது தேனி விவசாயி சிக்கல் மதுரை விவசாயிக்கு தெரியாது ராதாபுரம் விவசாயி ஒரு சொட்டு […]

ராகுல் ராஜிவ் கொலையாளிகளை மன்னித்தும் இந்த அரசு விட மறுக்கின்றது

என்ன தான் ராஜிவ் கொலையாளிகளை மன்னித்துவிடடோம் என ராகுல் சொன்னாலும் அக்கொலையாளிகள் வெளிவருவது எளிதில் சாத்தியமில்லை அவர்களை வெளியேவிட்டால் நிச்சயம் வட இந்தியாவில் பெரும் எதிர்ப்பு வரும், நிச்சயம் வரும். அதனை பாஜக விரும்பாது பாஜக விரும்பாது என்பதன் பொருள் தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்களை வெளிவிட முடியாது என்ற ஒற்றை அறிவிப்பில் தெரிகின்றது ஆக காங்கிரசோ, பாஜகவோ ராஜிவ் கொலையாளிகளை வெளிவிடாது என்பது புரிகின்றது. ராஜிவ் கொலை இந்திய ஆன்மாவில் விழுந்த அடி என மன்மோகன் […]

இமயமலை தியான மண்டபத்தில் ரஜினியினை சந்திந்தார் பாஜக பிரமுகர்

இமயமலை தியான மண்டபத்தில் ரஜினியினை சந்திந்தார் பாஜக பிரமுகர் பிரேம் குமார் சந்தித்தார் : செய்தி ஆன்மீக பயணத்தில் அரசியல் பேசமாட்டேன் என சொல்லிவிட்டு சென்றவர் ரஜினி, அங்கு சென்று யாரை சந்தித்து பேசியிருக்கின்றார், அந்த பாஜக பிரமுகர் என்ன பாபா பிரதிநிதியா? இல்லை மோடியின் பிரதிநிதி ஆக ரஜினி இனி அங்கு தங்கி இருக்கும் 15 நாட்களும் நடக்க போவது நிச்சயம் அரசியல் ஆலோசனை என்பதில் சந்தேகமே இல்லை . ஆன்மீகம் எனும் பெயரில் நடக்கும் […]

சிம்புவின் ‘பீப்’ பாடலை அவரின் அட்மின் வெளியிட்டார் : டி.ராஜேந்தர் விளக்கம்

சிம்புவின் ‘பீப்’ பாடலை அவரின் அட்மின் வெளியிட்டார் , டி.ராஜேந்தர் விளக்கம் முன்பு சிம்புவின் பீப் பாடல் வந்து அவர் பட்ட பாடு கொஞ்சமல்ல‌ இப்பொழுது எல்லா பழியும் அட்மின் சுமக்க வேண்டியது இருப்பதால் (முன்பெல்லாம் ஐடி கம்பெனிகளில்தான் அட்மின் மேல் பழிபோடுவார்கள், இப்பொழுது எல்லோரின் தவறையும் அட்மின் சுமக்கிறார்கள்) சிம்புவின் பீப் பாடலையும் அட்மின் மேல் போட்டாகிவிட்டது சிம்புவின் பீப் சாங் இருக்கட்டும், நமக்கு வரும் சந்தேகம் என்ன தெரியுமா? 37 வருடங்களுக்கு முன்பே இந்த […]

பெரியாரின் சொத்துகணக்கு

வெங்கய்ய மவன் ஒத்தையில நிக்கான், தில் இருக்க சந்நியாசி எல்லாம் போங்கல.. இதோ பாருங்கள் பெரியாரின் சொத்துகணக்கு என புதிதாக ஒரு கும்பல் கிளம்பியுள்ளது சரி எங்கே காட்டுங்கள் என்றால் 1 முழத்திற்கு வாசிக்கின்றார்கள் அது எல்லாம் என்ன சொத்து என்றால் முழுக்க கல்வி நிலையம், ஆதரவற்ற இல்லம், வழிகாட்டும் மையம், மருத்துவ இல்லம் இது எல்லாம் பெரியார் தமிழகத்தை ஏமாற்றி சம்பாதித்தாம் , அட பதர்களா, கொஞ்சமேனும் மூளை இல்லையா இல்லை தமிழரை எல்லாம் ராசா […]