பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மக்களை பட்டு துணியால் வருடி கொடுத்ததா?

பிரதமர் மோடி தலைமையிலான அரசு சொந்த மக்கள் மீதே போர் தொடுக்கிறது : சோனியா காந்தி வேதனை இந்திராவும் சஞ்சய் காந்தியும் செய்ததன் பெயர் என்ன மேடம்? மக்களை பட்டு துணியால் வருடி கொடுத்ததா?

மானிட குலம் முன்பொருமுறை பெரும் ஞானத்துடன் இருந்திருக்கின்றது

மானிட குலம் முன்பொருமுறை பெரும் ஞானத்துடன் இருந்திருக்கின்றது, பறக்கும் விமானம் முதல் இன்று காணும் பல விஷயங்கள் அவர்களுக்கு சாத்தியமாகியிருக்கலாம் என்கின்றார்கள் ராமாயணமும் சீவக சிந்தாமணியும் விமானபொறி பற்றி அன்றே விளக்கியிருக்கின்றன‌ ஆனால் அந்த அறிவு பின்பு சுத்தமாக அழிந்திருக்கின்றது, பெரும் அழிவு நடந்திருக்கின்றது. குமரி கண்ட அழிவு என இப்பக்கமும், அட்லாண்டிஸ் கண்ட அழிவு என அப்பக்கமும் சொல்லிகொண்டிருக்கின்றார்கள் உலகம் அழிந்த கதை இந்து புராணங்களிலும் , பைபிளிலும் சொல்லபட்டிருகின்றது அதன் பின் வந்த மனிதன் […]

டிக் டோக்

டிக் டோக் என்பது கோமாளிகளின் கூடாரம் என்பது போய் பலரின் வாழ்வினை கெடுத்து நடுதெருவுக்கு இழுத்துவரும் சீர்கேடாகவும் மாறிற்று டிக் டோக்கில் சில பெண்களின் ஆட்டம் சகிக்கமுடியாது, அதை பார்த்தபின்புதான் ஏன் ஒரு காலத்தில் பெண்களை அடக்கி வைத்தார்கள் என்ற சிந்தனையே ஏற்பட்டது அந்த அளவு தங்கள் திறமையினை வெளிகாட்ட கிடைத்த வாய்ப்பாகவே அதை கருத தொடங்ககிவிட்டார்கள் இந்தில் ரெவிடி பேபி சூர்யா என்பவர் பிரபலமானார், அது விஷயமல்ல. அவருக்கான ரசிகர் கூட்டம் ஏற ஏற அவரின் […]

ஒரு பயலும் தயாராக இல்லை

சீனா தன் சொந்த தயாரிப்பான ஜே10 விமானம் விற்பனைக்கு தயார் என சொல்லிவிட்டது, அது அவர்களின் அதி நவீன விமானம், அமெரிக்க எப் 16க்கு சமம் என சொல்லிகொண்டது “ஜே10 வேண்டுமா? வேண்டுமா..” ? என உலகெல்லாம் கூவி கூவி கத்தினாலும் வாங்க ஒரு பயலும் தயாராக இல்லை சீனாவின் ஜே10 விமானத்தை பார்ப்போர் பேரீட்சம் பழ நினைவோடு சிரித்துகொண்டே நகர்கின்றார்கள் “அடேய் அமெரிக்க விலையினை விட பாதிவிலைக்கு தாரேண்டா.. வாங்குங்கடா” என கத்தினாலும் ஒருவரும் சீண்டவில்லை […]

இனி நாம் கேட்போம்

பகுத்தறிவினை புதைத்து கல்லறை கட்ட செங்கல் வைத்த நேரம்…. இனி நாம் கேட்போம் கட்டடம் கட்ட சந்தணம் வேண்டுமா? சிமென்ட் வேண்டுமா? வாளி நிறைய மண் இருக்க வேண்டிய இடத்தில் வாழைபழம் எதற்கு? தேங்காய் உடைக்காவிட்டால் கட்டடம் நிலைக்காதா? ஆரத்தி தட்டை வணங்காவிட்டால் கட்டடம் இவர் தலையில் விழுந்துவிடுமா? https://m.facebook.com/story.php?story_fbid=2387667718006521&id=100002899486623

அவசர நிலை பிரகடனபடுத்தும் நேரம் வந்துகொண்டிருப்பது போலதெரிகின்றது

நாட்டில் அவசர நிலை பிரகடனபடுத்தும் நேரம் வந்துகொண்டிருப்பது போலதெரிகின்றது, மிசா இரண்டாம் முறை அறிவிக்கபட்டால் நல்லது, இப்போதைய சூழலுக்கும் அரசின் பலத்துக்கும் அது சரியே. இம்முறை மிசாவில் திமுக தலைவர் சிறை சென்றால் உரிய ஆவணம் வழங்கபடும் என்பதால் முதல் ஆளாக அவர்தான் மகிழ்ச்சியோடு உள்ளே செல்வார் என்பது ஒன்றும் ரகசியமல்ல

திமுக குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பெரும் ஆர்பபட்டம்

திமுக குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பெரும் ஆர்பபட்டம் செய்ய போகின்றதாம். நல்லவரோ கெட்டவரோ அந்த கருணாநிதி இருந்திருந்தால் இந்நேரம் இம்மாதிரி ஆடமாட்டார், தன் தேர்ந்த அனுபவத்தில் காட்சிகளை மாற்றி மத்திய அரசுக்கு வேறுமாதிரி சிக்கல் கொடுப்பார் அதாவது இந்நேரம் என்ன சொல்லியிருப்பார் தெரியுமா? “அந்நிய நாட்டு மக்களை வெளியேற்றுவதில் இந்த அரசு காட்டும் அவசரத்தை, இந்நாட்டு நிலமும் தமிழர் சொத்துமான கச்சதீவினை அந்நியரிடம் இருந்து மீட்பதில் காட்டவே இல்லை என்பதுதான் தமிழர் மேலான டெல்லியின் பாசிச நடவடிக்கை […]

பைத்தியக்கார திராவிட கோஷ்டி என்றால் இதுதான்

பைத்தியக்கார திராவிட கோஷ்டி என்றால் இதுதான்உலகில் எல்லா நாட்டு மக்களும் எல்லா நாட்டிலும் வசிப்பார்கள், சிலர் தொழிலுக்காக வசிப்பார்கள். சிலர் ஓய்வு தேடி வருவார்கள். அவரவரவர்க்கு என்ன தேவையோ அதை தேடி வருவார்கள்வருபவர்களை முறையான ஆவணத்தோடும், முறைபடுத்தபட்ட கண்காணிப்பு வழிகளோடுமே சம்பந்தபட்ட நாடு ஏற்கும்முதல் நிபந்தனையே இந்நாட்டின் இறையாண்மைக்கும் இந்நாட்டின் சட்டதிட்டங்களுக்கும் எதிராக மூச்சேவிட கூடாது, நீ இங்கு குடியுரிமைமே வாங்கினாலும் உன்னை எப்பொழுதும் கழுத்தை பிடித்து வெளிதள்ள எமக்கு முழு உரிமை உண்டுஇதுதான் வெளிநாட்டு வாழ்க்கை, […]

குடியுரிமை மசோதாவினை எதிர்த்து மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு

குடியுரிமை மசோதாவினை எதிர்த்து மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கின்றார் ஸ்டாலின் ஆக இலங்கையில் தமிழன் செத்தால் வராத ஆத்திரம் வங்கதேசத்துகாரனை விரட்டும் பொழுது வருகின்றதென்றால் இது தமிழருக்காகவும் திராவிடருக்காகவும் நடத்தபடும் கட்சி அல்ல மாறாக வங்கதேச மக்களுக்காக நடத்தபடும் கட்சி இனி இது வங்கதேச முன்னேற்ற கழகம் வ.மு.க அட, உள்ளாட்சி தேர்தலை நிறுத்தத்தான் சர்வாதிகாரி எவ்வளவு போராடுகின்றார்? ***** திமுக மேலிடத்தில், திமுக எம்பிக்களில், திமுக ராஜ்யசபா எம்பிக்களில் எத்தனை பேர் இஸ்லாமியர்கள் என கேட்டுவிட்டால் […]

முக்கால உண்மை

ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு அரசியலுக்கு வருவது உறுதி- தமிழருவி மணியன் விக்கிரமாதித்தனுக்கு பின் கன்னிதீவு சிந்துபாத்துக்குபின் வரலாறு கண்ட மாபெரும் முயற்சியாளன் இந்த மணியர்தான் அடுத்தவருடம் வேதாளம் இவர் முதுகில் சாத்திவிட்டு முருங்கைமரம் ஏறபோவது முக்கால உண்மை

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications