பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அய்யய்யோ

அய்யய்யோ பாஜக வந்தாயிற்று இனி மதகலவரம் வரும் என்றார்கள், ஒரு கலவரமும் வரவில்லை நாடு அமைதியாய் இருக்கின்றது அய்யய்யோ இனி ராமர் கோவிலை கட்டிவிட்டு மதுரா மசூதி இடிப்பார்கள் இந்தியா எரியும் என்றார்கள் ஒன்றும் ஆகவில்லை அய்யய்யோ இனி கிறிஸ்தவன் பைபிள் வாசிக்கமுடியாது பாஜக ஒழித்துவிடும் என்றார்கள், வேளாங்கண்ணி திருவிழா வழக்கம் போல் நடக்கின்றது, தினகரனின் பேத்தி கூட போதிக்கின்றார் எந்த ஆலயத்துக்கும், மசூதிக்கும் அவர்கள் வழிபாட்டுக்கும் துளி அளவேனும் சிக்கல் இந்த ஆட்சியால் வந்ததாக தெரியவில்லை, […]

மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்துகின்றது பாஜக : உபிஸ்

மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்துகின்றது பாஜக : உபிஸ் நாட்டை மதரீதியாக பிளந்தவன் ஜின்னா, அதன் பின்பு நாடு பிளவு எனும் பேச்சுக்கே, அதுவும் மதரீதியான பிளவு எனும் பேச்சுக்கே இடமில்லை எப்படி பாஜக மதரீதியாக பிளக்கும்? யார் தனிநாடு கேட்கின்றார்கள்? எந்த பெரும்பான்மை கோஷ்டி அப்படி கூடி கேட்டது? எங்கே இருக்கின்றது சாத்தியம்? எங்காவது எவனாவது ஏதோ சொல்லிகொண்டிருந்தால் அவனெல்லாம் நாடு கேட்கின்றான் என அர்த்தமா? சந்தடிசாக்கில் கோபாலபுரத்தை தனிநாடாக அறிவிக்க ரகசியமாக கிளம்புகின்றார்கள் போல

லாட்டரி சீட்டு மோகம் மறுபடியும் தமிழ்நாட்டில் ஒரு உயிரை கொன்றிருக்கின்றது

லாட்டரி சீட்டு மோகம் மறுபடியும் தமிழ்நாட்டில் ஒரு உயிரை கொன்றிருக்கின்றது, விழித்து கொண்ட அரசு லாட்டரி இங்கு மறைமுகமாக நடத்தபடுவதை அறிந்து ஏதோ செய்கின்றது ஆக இன்னமும் லாட்டரி நடமாடுகின்றது, மறைமுகமாக பல உயிர்களை கொல்கின்றது லாட்டரியும், கள்ள லாட்டரியும் உச்சத்தில் இருந்து, அந்த பணத்தில் கருணாநிதினையே வசனம் எழுத வைத்த காட்சிகள் எல்லாம் இங்கு நடந்தன‌ ஜெயலலிதா மகா துணிச்சலாக அதை சட்டம் போட்டு தடுத்தார், இப்பொழுது மறைமுகமாக இருந்தால் அதுவும் ஒழிக்கபட வேண்டியதே லாட்டரி […]

3 சூரியன்கள் வானில் தெரிந்திருக்கின்றன

இயற்கை அவ்வப்போது சில ஆச்சர்ய சுவாரஸ்யங்களை கொடுக்கும், அப்படி சீனாவில் கொடுத்திருக்கின்றது 3 சூரியன்கள் வானில் தெரிந்திருக்கின்றன, ஒரு நிஜ சூரியன் மற்ற இரண்டும் சூரியனின் பிம்பம் வானில் மேக திரள்களில் இருக்கும் நீரின் விளைவில் சில பிரதிபலிப்புகள் தோன்றும் ,வானவில் அப்படியானது வெகு அபூர்வமாக சூரியன் பிரதிபலிக்கும் அப்படி இரு பக்கமும் பிரதிபலிக்கபட்டு 3 சூரியனாக சீனாவில் தெரிந்திருக்கின்றது வெகு அபூர்வமாக நடக்கும் விஷயம் அது, இதனால் உலகம் 3 உதய சூரியன்களின் காட்சியினை பார்த்துகொண்டிருக்கின்றது […]

இந்திய எதிரிகளின் வரிசை மிக அழகாக தெரியும் நேரமிது

பாலஸ்தீனம் என்றொரு நாடு இருந்தது, அதை பிரித்து இஸ்ரேலை உருவாக்கினார்கள் இஸ்ரேலை அழித்தொழித்து முழு பாலஸ்தீனம் படைக்க போகின்றோம் இதனால் பெரும் போர் தொடங்கபோகின்றது, பாலஸ்தீன இஸ்லாமியரெல்லாம் எங்கள் நாட்டுக்கு வாருங்கள் அப்பொழுது யூதரை ஒழிப்பது சுலபம், முழு பாலஸ்தீனம் கிடைத்தபின் நீங்கள் உள்ளே சென்று மகிழ்வாக வாழலாம் என அழைப்பு விடுத்தன எகிப்து உட்பட ஒரு டஜன் நாடுகள் அவர்களை நம்பி சென்றனர் பாலஸ்தீன இஸ்லாமியர் கடும் யுத்தம் தொடங்கியது போரில் எதிர்பாரா பின் விளைவாக […]

அடுத்த நிசான் இ பாகிஸ்தான் விருது யாருக்கு கொடுக்கலாம்?

“அடுத்த நிசான் இ பாகிஸ்தான் விருது யாருக்கு கொடுக்கலாம்? ராகுல்காந்திக்கும் தமிழ்நாட் டல்பதிக்கும் கொடுக்கலாம். நமக்கு ரொம்ப சப்போர்ட் பண்றாங்க‌.. யெஸ் யெஸ், நம்ம இஸ்லாமிய சகோதரத்துவ சவுதி, குவைத், துருக்கி, யுஏஇ, தஜிக், துர்கெனி, உஸ்பெக்கிஸ்தான், எகிப்து எல்லாம் சும்மா இருக்கும் போது இவங்க எவ்வளவு நமக்காக போராடுராங்க தெரியுமா? சொந்த அரசையே எதிர்க்குறாங்க, நினைச்சாலே கண்ணுல தண்ணி வருது ஆமாம், இந்த வங்கதேசத்து உயர் விருதான “பங்காள்தேஷ் பிரீடம் ஹாணர்” விருது அவகங்க இரண்டு […]

நிர்பயாவின் கொலையாளிகளை தூக்கிலிட அவரின் பெற்றோர்களுக்கே வாய்பளிக்கலாம்

நிர்பயாவின் கொலையாளிகளை தூக்கிலிட அவரின் பெற்றோர்களுக்கே வாய்பளிக்கலாம், எதற்கு ஆள் தேடிகொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை நிர்பயா விவகாரத்தில் இன்னொருவன் தப்பியதற்கு மகா முக்கிய காரணம் அவனின் வயது, அந்த சண்டாளனுக்கு வயது 14 ஆகியிருந்தது, மைனர் என்பதால் தூக்கில் இருந்து தப்பினான் இந்த பாதகத்தை அதுவும் சாட்சியினை அழிக்க இரும்பு கம்பியினை உட்சொருகிய பாதகத்தை அவனே செய்தான் (இந்த கொடும் காட்சியினை அட்லி தெறிபடத்தில் காப்பி அடித்தார் என்பது வேறுவிஷயம், சினிமாக்காரனுக்கு காசே முக்கியம்) அவனையும் தூக்கிலிட […]

இரண்டாம் பாகத்துக்கு வாய்ப்பே இல்லை

பொன்னியின் செல்வன் போன்ற படத்துக்கு மகா அவசியம் பெரும் பொருட்செலவும் தேர்ந்த நீண்ட வசனங்களும் இரண்டுமே மணிரத்னம் படத்தில் வாய்ப்பே இல்லாதவை, மணிரத்னம் வரலாற்று கதைகளுக்கு பொருந்தமாட்டார், அது அவருக்கு வராது. ஆக தயாரிப்பாளர் முதல் பகுதியிலே முக்காடு போட்டு வங்கதேச அகதிகள் பட்டியலில் ஓடபோவதால் இரண்டாம் பாகத்துக்கு வாய்ப்பே இல்லை..

நமக்கே தெரியாமல் சங்கத்து பதவியினை ஏலம் விட்டிருக்கின்றார்கள்

இந்த ஊராட்சி மன்ற தலைவர் பதவி எல்லாம் ஏலம் விடபடுவது போல நமக்கே தெரியாமல் சங்கத்து பதவியினை ஏலம் விட்டிருக்கின்றார்கள்நாம் இந்த குடியுரிமை சட்டம், உலக அரசியல், ஆன்மீகம் என தேடிகொண்டிருந்தபொழுது இந்த மாபெரும் சதிசெயல் அரங்கேறியிருக்கின்றது.அரசியல் என்றால் இப்படித்தான் முதுகில் குத்துவார்கள் போல‌இந்த Dhurai Sathish என்பவர் சங்கத்து தலைவர் பதவியினை ஏலம் எடுத்துவிட்டாராம், இனி அவர்தான் தலைவராம்வேலூர் பக்கம் சங்கத்து மிரட்டலுக்கு பயந்து தலைவிக்கு வாய்ப்பு கொடுத்த ரஜினிக்கு உயிர்பிச்சை கொடுத்திருக்கின்றோம், டைரக்டர் சிவாவுக்கு […]

அவனுகளும் அவனுக கிரிக்கெட்டும்

டி20 ஆட சொன்னால் அவனுகளுக்கு டெஸ்ட் மேட்ச் மறந்துவிடுகின்றது, டெஸ்ட் மேட்ச் ஆட சொன்னால் ஒருநாள் போட்டி மறந்துவிடுகின்றது இனி டி20க்கு ஒரு அணி, டெஸ்ட்டுக்கு ஒரு அணி, ஒரு நாள் போட்டிக்கு தனி அணி என மூன்று அணிகளை உருவாக்க வேண்டும் போலிருக்கின்றது அவனுகளும் அவனுக கிரிக்கெட்டும் ஆனால் மேற்கிந்திய தீவு பலம்பெற்று வருவது மறுக்கமுடியா உண்மை, இழந்த பொற்காலத்தை மீட்டெடுப்பார்கள் போலிருக்கின்றது

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications