பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இதுவன்றி வேறல்ல..

களஞ்சியத்தை சிங்கள ராணுவம் அடித்தது உண்மை அதற்கு முன்னால் ஈழதமிழர் சிலரே ரகசியமாக பிடித்து 4 சாத்து சாத்தி ராணுவத்திடம் ஒப்படைத்தார்கள் என்ற தகவல் வருகின்றது. எங்களை வைத்து பிழைப்பு நடத்துகின்றீர்களா? நாங்கள் அவ்வளவு இளக்காரமா என போட்டு போட்டு அடித்தார்களாம், அந்த .. பயல் சைமனின் ஆள்தானே நீ என சொல்லி சொல்லி அடி விழுந்ததாம் இலங்கை ராணுவமும் நாங்கள் அவரை அடிக்கவில்லை ஆனால் அவர் அடிபட்டது நிஜம் என்பது போல் செய்திகளை கசியவிடுகின்றது அங்கிள் […]

வழக்கம் போல காமெடியில் சிக்கிவிட்டார் செல்லூர் ராஜூ

வழக்கம் போல காமெடியில் சிக்கிவிட்டார் செல்லூர் ராஜூ எகிப்து வெங்காயம் உடலுக்கு நல்லது என அவர் சொல்ல போக, இணையவாசிகள் காய்ச்சி எடுக்கின்றார்கள் ஆனால் ஒரு விஷயம் உண்மை நைல் நதி தீரத்தில் விளையும் பொருளுக்கு அலெக்ஸாண்டர் காலத்தில் இருந்தே மவுசு அதிகம் பைபிளின் ஆபிரஹாம் எகிப்து தானியத்துக்கு அலைந்திருகின்றான், யூத கூட்டம் அங்கேயே காத்து கிடந்தது எகிப்தின் மாதுளைபழங்களை அனுதினமும் வரவைப்பானாம் சாலமோன் அரசன், அது உடலுக்கு நல்லது என்பது அவன் குறிப்பு நெப்போலியன் முதல் […]

அனுமர் வானரமே தான்

ஆம் அனுமர் வானரமே தான், யார் இல்லை என மறுத்தார்கள்?குரங்கினை மனிதன் வணங்குவது பகுத்தறிவா? அதெல்லாம் ஏற்புடையதா? என கேள்வி எழுப்பும் முன்னால் அனுமன் யார் என்பதை பார்க்கலாம்ராமனே பெரும் அதிசயம் ஏதும் செய்யாத மானிட பிறப்பு, அவர் உதாரண புருஷ அவதாரமே தவிர கண்ணன் போல பெரும் மாய‌ அவதாரமில்லை.அனுமன் வால் + நரன் என சொல்லபடும் கூட்டத்தில் இருந்தான். அவர்கள் வால்முளைத்த மனிதர்கள் என்ற வகையில் இருந்தார்கள். பலமிக்க இனம் அதுஅந்த இனத்தின் வாலி […]

ரஜினியின் வாழ்க்கையில் அது ஒன்றும் ரகசியமல்ல

ரஜினியின் வாழ்க்கையில் அது ஒன்றும் ரகசியமல்ல, அது 1980களின் தொடக்க காலம், பிரியா உட்பட தொடர்ந்து அவர் நடித்துகொண்டிருந்த காலம் பெங்களூரில் படபிடிப்பு மறுநாள் சிங்கப்பூர் மறுநாள் சென்னை என அவர் ஓயாது ஓடிகொண்டிருந்த நேரம் இந்த சின்னப்பதேவர் ரஜினியினை அணைத்ததை எம்.ஜி ராம்சந்தர் ரசிக்கவில்லை, சிவாஜி பக்கம் தேவர் செல்லாமல் தடுத்த ராம்சந்தரால் தேவர் ரஜினியினை அணைப்பதை தடுக்க முடியவில்லை ரஜினியுடன் நடிக்க ஜெயாவும் லதாவும் போட்டி போட்ட காலம் அவை, எல்லாம் சேர்ந்து அவரை […]

அசாமில் இருவரை சுட்டு கொன்றுவிட்டது பாசிச அரசு

அசாமில் இருவரை சுட்டு கொன்றுவிட்டது பாசிச அரசு : உபிக்கள் சீற்றம் அவர்கள் ஆட்சியில் இருந்தால் அண்டை நாட்டில் கொத்து கொத்தாக கொன்றாலும் கம்மென்று இருப்பார்கள் அவர்கள் கட்சிக்காரன் மதுரையில் வெட்டியோ, எரித்தோ கொன்றால் கமுக்கமாக இருப்பார்கள் ஆனால் அவர்கள் பதவியில் இல்லாதபொழுது , அரசு கலவரத்தை அடக்க சுட்டால் பொறுக்க மாட்டார்கள் இதெல்லாம் திராவிடத்தின் “நெஞ்சுக்கு நீதி”

நாடு குடியுரிமை சட்டதிருத்தம் கொண்டுவந்தாயிற்று

நாடு குடியுரிமை சட்டதிருத்தம் கொண்டுவந்தாயிற்று உரிய ஆவணம் இருப்போர் எம்மதம், எந்த இனமென்றாலும் சிக்கல் இல்லை, மாறாக இந்நாட்டவர் என்ற அடையாளமில்லாதோரை என்ன செய்வது? உரிய அவகாசமும் கொடுத்தாயிற்று, எந்த ஆவணமும் அவர்களிடம் இல்லை அவர்கள் இந்நாட்டு மக்களாய் இருத்தல் முடியாது, சொந்த நாட்டுக்கு செல்வதே சரி மாறாக இங்கேயேதான் இருப்போம் என கலவரத்தில் இறங்கினால் அவர்களுக்கும் கார்கிலுக்குள் நுழைந்த தீவிரவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்? வடகிழக்கில் நடந்திருப்பது அந்நிய ஆக்கிரமிப்பு, அதை ராணுவம் மூலம் மீட்டெடுத்தலே சரி, […]

அமெரிக்காவினை நோக்குதல் நலம்

இங்கே குடியுரிமை திருத்தத்துக்கு ஒப்பாரி வைக்குமுன் அமெரிக்காவினை நோக்குதல் நலம் இருவாரங்களுக்கு முன்பு கைகால் கட்டபட்டு 150 பேரை இந்தியாவுக்கு அடிமாட்டை போல் அனுப்பிவைத்தது அமெரிக்கா இப்பொழுது 10 ஆயிரம் இந்தியர் கைது செய்யபட்டிருப்பதாக அறிவித்திருக்கின்றது, இவர்கள் உரிய ஆவணமின்றி குடியேறிய கள்ளகுடியேறிகள் அமெரிக்கா செய்தால் நாட்டு நலம், இந்தியா செய்தால் சிறுபான்மைக்கு எதிரானது அவனுகளும் அவனுக கொள்கையும்

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு குடியுரிமை மசோதாவுக்கு எதிராக டிசம்பர் 17-ல் திமுக போராட்டம் அங்காளி பங்காளி என்றாலும் சில நேரங்களில் ஒன்றாகிவிடுகின்றார்கள்.., விரைவில் இம்ரான்கானின் தெரிக் இ சாப் கட்சி தமிழகத்திலும், திமுக லாகூரிலும் கடை திறக்கலாம்

இது பெரும் மில்லியன் டாலர் பண பிரச்சினை

விஜய் மல்லையா, லலித்மோடி இன்னும் பலரை தேடாமல் நித்திசாமியினை மட்டும் மகா அவசரமாக துப்பாக்கி முனையில் தேடுவதிலே இது பெரும் மில்லியன் டாலர் பண பிரச்சினை என்பது தெரிகின்றது மல்லையாவும், லலித்தும் அரசு பணத்தை வங்கி பணத்தை ஏமாற்றினார்கள் அதனால் சிக்கல் இல்லை சாமி ஏதோ தனியார் பண விவகாரத்தில் சிக்கி ஓடிகொண்டிருக்கின்றார், தேடுகின்றார்கள் யாராலோ வெளி சொல்லமுடியாத கதையில் சாமி தரப்புக்கே காற்று பலமாக வீசுகின்றது