பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாச்சியார் திருமொழி : 83

நாச்சியார் திருமொழி : 83 ( பாசுரம் 11.1, 11.2) கண்ணன் மேல் கொண்ட காதலால் முழுக்க ஏங்கிப்போனாள் ஆண்டாள், அந்த ஏக்கம் உடலைப் பாதித்தது, தன் நீண்ட நாள் காதலில் அவன் இன்னும் தன்னை அவனோடு சேர்க்காதது அவளை மிகுந்த ஏக்கத்துக்குள்ளாக்கிற்று. வாழவும் விடாமல், சாகவும் விடாமல் அந்தக் காதலுடன் கண்ணன் காட்டும் பூச்சாண்டி அவளுக்குள் பெரும் சோகத்தைத் தந்தது, இனியும் தாங்கமுடியாது என்றபடி அவள் கவலையில் வீழ்ந்து அது அவள் உடலைப் பாதித்து, அதனால் […]

சிவ வாக்கியார் பாடல்கள் : 21 to 30

சிவ வாக்கியார் பாடல்கள் : 21 “அஞ்செழுத்தி லேபிறந்து அஞ்செழுத்தி லேவளர்ந்து அஞ்செழுத்தை யோதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்தி லோரெழுத் தறிந்துகூற வல்லிரேல் அஞ்சலஞ்ச லென்றுநாத னம்பலத்தி லாடுமே” இப்பாடல் இப்படிப் பிரிந்து வரும். “அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல் அஞ்சல் அஞ்சல் என்று அம்பலத்தில் ஆடுமே” அதாவது அஞ்செழுத்தான “ஓம் நமசிவாய” என்பதை  ஓதும் குலத்தில் பிறந்து, அந்தப் பஞ்சரட்சரத்தை ஓதி […]

சிவ வாக்கியார் பாடல்கள் 11 to 20

சிவ வாக்கியார் : 11 ‘நானதேது நீயதேது நடுவினின்ற தேதடாகோனதேது குருவதேது கூறிடுங் குலாமரேஆனதேது வழிவதேது வப்புறத்தி லப்புறம்ஈனதேது ராமராம ராமவென்ற நாமமே” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும். “நான் ஏது நீ ஏது நடுவில் நின்றது ஏதடாகோன் ஏது குரு ஏது கூறிடும் குலா மரேஆனது ஏது? வழிவது ஏது? வப்புறத்தில் அப்புறம்ஈனது ஏது ராம ராம ராம என்ற நாமமே” பாடலின் பொருள் இதுதான். நான் என்பது ஏது?, நீ என்பது ஏது? […]

நாச்சியார் திருமொழி : 70

நாச்சியார் திருமொழி : 70( பாசுரம் 9.1) ஆண்டாள் கண்ணன் நினைவில் மூழ்கிக் கிடந்தாள், அவன் நினைவு எனும் பெருங்கடலில் நீந்தி தத்தளித்துக் கொண்டிருந்தாள், அவனின் ஆசை முகம் ஒன்றே அவள் மனமெங்கும் வியாபித்திருந்தது. வழக்கம்போல் அதிகாலை பூஜை முடித்து குங்குமம் சூட எடுத்தவள் அதனையே உற்றுப் பார்த்துப் புன்னகைத்தாள், “எனக்கு இதனை திலகமாய் இட எப்போது வருவாய் கண்ணா?” எனக் கேட்டுக்கொண்டவள் வழக்கம் போல் குங்குமத்தைக் கண்ணன் காலடியில் இட்டு பின் தன் நெற்றியால் ஒற்றித் […]

நாச்சியார் திருமொழி : 71

நாச்சியார் திருமொழி : 71 ( பாசுரம் 9.2) அடைமழையாய் ஆண்டாள் மனதில் கண்ணன் நினைவு கொட்டிக் கொண்டிருந்தது. உள்ளூர அது சிலிர்ப்பைக் கொடுத்தது. சிலிர்ப்பு ஏக்கமுமானது, அந்த ஏக்கத்தில் பெரும் மழையில் ஒடுங்கும் சிறு பறவையென அவள் அவன் நினைவால் ஒடுங்கியவள் அந்த நந்தவனத்தில் அமர்ந்திருந்தாள். பூஜைக்காக மலர்பறிக்க வந்தவள் வேலியோரம் கொடியில் கிடந்த முல்லை கொடியினைக் கண்டாள், மெல்ல வரிசையாக மெல்ல விரிந்த முல்லைகளைக் கண்டாள். அது அவளை நோக்கிப் புன்னகைத்தன, இன்னும் சில […]

நாச்சியார் திருமொழி : 72

நாச்சியார் திருமொழி : 72 ( பாசுரம் 9.3, 9.4) காதல் கொண்ட நெஞ்சம் எப்போதும் அதே கனவிலும் தேடலிலும் இருக்கும், ஆண்டாளும் அப்படி சிக்கிக் கொண்டாள். கடலில் நீந்தும் ஓடத்தைக் காற்று இன்னும் அதிகப்படுத்துதல் போல, யாகத்தின் நெருப்பினை நெய் இன்னும் வளர்த்தல் போல கண்ணில் படும் காட்சி காதில் விழும் ஓசைகள் என எல்லாமும் அந்த நினைவினை இன்னும் பெரிதாக்கும். ஆண்டாள் அவன் நினைவிலே ஏங்கிக் கொண்டிருந்தாள், கற்பூரம் போல் அவள் மனம் அவனில் […]

நாச்சியார் திருமொழி : 73

நாச்சியார் திருமொழி : 73 ( பாசுரம் 9.5, 9.6, 9.7) ஆண்டாள் கண்ணனை வழமை போல் தேடிக் கொண்டிருந்தாள், அவளுக்குள் அவன் நினைவு எரிந்து கொண்டிருந்தது, கண்களும் மனமும் சிந்தையும் அவனைத் தேடிக் கொண்டிருந்தன, அவன்பால் ஏக்கமும் கலக்கமும் கொண்டவள் மழையினை எதிர்பார்க்கும் நாற்றுபோல் வாடிக்கிடந்தாள். அதிகாலை வானத்தை நோக்கியபடி அமர்ந்திருந்தாள், அங்கே மேகங்கள் எழுந்தன, மெல்லச் சூரியன் தன் பாதையில் மேலேழுந்தது, பறவைகள் இறகுகளை அசைத்தபடி மிதந்து சென்று கொண்டிருந்தன‌. பசுக்கள் கன்றுகளுக்குப் பால் […]

நாச்சியார் திருமொழி : 74

நாச்சியார் திருமொழி : 74 ( பாசுரம் 9.8, 9.9) காதல் கொண்ட மனம் கடல் போன்றது அங்கு அலைகள் ஓயாமல் வீசிக்கொண்டே இருக்கும், அந்த அலையில் ஆடும் படகுபோல் ஆண்டாளின் எண்ணங்கள் ஆடிக்கொண்டிருந்தன‌. அவளுக்கு உண்ண பிடிக்கவில்லை, உறக்கம் சுத்தமாக வரவில்லை, எப்போதும் கண்ணனின் நினைவாக ஏங்கி கொண்டிருந்தவளுக்கு அதிகாலையிலே விழிப்பு வந்தது. ஆனால், அந்த நிசப்தமான அமைதியில் என்ன பொழுது அது என அவளால் அறியமுடியவில்லை. அப்போது செம்போத்து பறகை “க்கும்ம் க்கும்ம்” என […]

நாச்சியார் திருமொழி : 75

நாச்சியார் திருமொழி : 75 ( பாசுரம் 10.1) ஆண்டாளுக்கு கண்ணில் காணும் எல்லாமும் கண்ணனை நினைவுப்படுத்தி கொண்டே இருந்தன. அவளும் கண்ணில்பட்ட எல்லாவற்றையும் கண்ணனிடம் தூது அனுப்பித் தோற்றுக்கொண்டே இருந்தாள். மேகம் குயில் என எல்லாவற்றையும் அனுப்பியாயிற்று என்பதால் மனதில் ஒரு சலிப்பும் எட்டிற்று. தானே எப்போதும் கண்ணனைத் தேடிகொண்டிருப்பதையும், அவன் தன்னைத் தேடி வரவில்லை என்பதையும் எண்ணியபோது அவன் மேல் கோபம் உண்டாயிற்று. தன் அன்பை அவன் புரிந்துகொள்ளவில்லை தானே வலிய வலிய தேடுவதில் […]

நாச்சியார் திருமொழி : 76

நாச்சியார் திருமொழி : 76 ( பாசுரம் 10.2) ஆண்டாள் அதிகாலை கண்விழித்தாள். கனவெல்லாம் கண்ணன் நினைவாக நிறைந்திருந்த அவளின் தூக்கம் கலைந்திருந்தது. இப்போது நினைவெல்லாம் கண்ணன் எனும் நிலைக்குள் வழமையான நிலைக்குள் வந்தாள். வீட்டின் மாடக்குழியில் இருந்த தீபம் அணைந்திருந்தது. எங்கும் சூழ்ந்திருந்த காரிருளின் கருமை அவளுக்குக் கண்ணனையே நினைவுப்படுத்தியது. புன்னகைத்தபடி வீட்டின் பின்பக்கம் இருந்த நெருப்புக் குழியில் இருந்து நெருப்பெடுத்து விளக்கேற்றும்படி எழுந்தவள் வழமை போல் முதல் பெயராக வாய் திறந்து “கண்ணா” என […]

Continue in browser
To install tap Add to Home Screen
Add to Home Screen
பிரம்ம ரிஷி
Get our web app. It won't take up space on your phone.
Install
Add பிரம்ம ரிஷி to Home Screen
Close

For an optimized experience on mobile, add பிரம்ம ரிஷி shortcut to your mobile device's home screen

1) Press the share button on your browser's menu bar
2) Press 'Add to Home Screen'.
பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications