பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சரஸ்வதி அந்தாதி : 28

சரஸ்வதி அந்தாதி : 28 “இலங்கும் திருமுகம் மெய்யிற் புளகம் எழும்விழிநீர்மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கும் மனமிகவேதுலங்கும் முறுவல் செயக்களி கூரும் சுழல்புனல்போல்கலங்கும் பொழுது தெளியுஞ்சொல் மானைக் கருதினர்க்கே” இனி பாடலின் பொருளைக் காணலாம். “இலங்கும் திருமுகம் மெய்யிற் புளகம் எழும்விழிநீர் மலங்கும்” முகம் பிரகாசிக்கின்றது ஒளிர்கின்றது அவர்கள் மேனி பரவசத்தால் நிறைந்திருக்கின்றது, கண்களில் நீர் வழிகின்றது. “பழுதற்ற வாக்கும் பலிக்கும்” அவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் குற்றமற்றதும் பலிக்கும் தன்மை கொண்ட அருள்வாக்காக அமையும். “மனமிகவே […]

சரஸ்வதி அந்தாதி : 27

சரஸ்வதி அந்தாதி : 27 “பொருளா லிரண்டும் பெறலாகு மென்றபொருள் பொருளோமருளாத சொற்கலை வான்பொருளோ பொருள் வந்துவந்தித்தருளாய் விளங்கு மவர்க் கொளியா யறியாதவருக்கிருளாய் விளங்கு நலங்கிளர் மேனியிலங் கிழையே” இப்பாடல் இப்படி பிரிந்து வரும். “பொருளால் இரண்டும் பெறலாகும் என்ற பொருள்பொருளோமருளாத சொற்கலை வான் பொருளோ பொருள் வந்துவந்தித்(து)அருளாய் விளங்குமவர்க்கு ஒளியா‍யாய் அறியாதவருக்(கு)இருளாய் விளங்கு நலங்கிளர் மேனி இலங்கிழையே” இனி பாடலின் பொருளைக் காணலாம். “பொருளால் இரண்டும் பெறலாகும் என்ற பொருள் பொருளோ” என்பது ஒரு ஆழ்ந்த […]

சரஸ்வதி அந்தாதி : 26

சரஸ்வதி அந்தாதி : 26 “வைக்கும் பொருளு மில்வாழ்க்கைப் பொருளுமற் றெப்பொருளும்பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின்மெய்க்கும் பொருளு மழியாப் பொருளும் விழுப்பொருளும்உய்க்கும் பொருளுங் கலைமா னுணர்த்து முரைப்பொருளே” இப்பாடல் இப்படி பிரிந்து வரும். “வைக்கும் பொருளும் இல் வாழ்க்கைப் பொருளும் மற்ற எப்பொருளும்பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல பூதலத்தின்மெய்க்கும் பொருளும் அழியாப் பொருளும் விழுப்பொருளும்உய்க்கும் பொருளும் கலைமா(து) உணர்த்தும் உரைப்பொருளே” இனி பாடலை கொஞ்சம் ஆழமாக காணலாம். “வைக்கும் பொருளும் இல் வாழ்க்கைப் பொருளும் மற்ற […]

சரஸ்வதி அந்தாதி : 25

சரஸ்வதி அந்தாதி : 25 “தொழுவார் வலம்வரு வார்துதிப் பார்தம் தொழில்மறந்துவிழுவார் அருமறை மெய்தெரி வார்இன்ப மெய்புளகித்(து)அழுவார் இனுங்கண்ணீர் மல்குவார் என்கண்ணின் ஆவதென்னைவழுவாத செஞ்சொற் கலைமங்கை பாலன்பு வைத்தவரே” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும். “தொழுவார் வலம்வருவார் துதிப்பார் தம் தொழில் மறந்துவிழுவார் அருமறை மெய் தெரிவார் இன்பமெய் புளகிஅழுவார் இன்னும் கண்ணீர் மல்குவார் என் கணாவது என்னைவழுவாத செம் சொல் கலையமங்கை பால் அன்பு வைத்தவரே” இனி பாடலின் பொருளைக் காணலாம். முதல் வரி […]

சரஸ்வதி அந்தாதி : 24

சரஸ்வதி அந்தாதி :24 “அடையாள நாண்மல ரங்கையி லேடு மணிவடமும்உடையாளை நுண்ணிடை யொன்று மிலாளை யுபநிடதப்படையாளை யெவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும்தொடையாளை யல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும் “அடையாள நாண்மலர் அங்கையில் ஏடும் மணிவடமும்உடையாளை நுண்ணிடை ஒன்றுமிலாளை உபநிடதப்படையாளை எவ்வுயிரும் படைப்பாளை பதுமநறும்தொடையாளை அல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே” இனி பாடலின் பொருளை காணலாம். “அடையாள நாண்மலர் அங்கையில் ஏடும் மணிவடமும் உடையாளை” என பாடல் தொடங்குகின்றது,. அன்னையின் கை அன்றைய […]

சரஸ்வதி அந்தாதி : 23

சரஸ்வதி அந்தாதி : 23 “சேதிக்க லாந்தர்க்க மார்க்கங்க ளெவ்வெவர் சிந்தனையும்சோதிக்க லாமுறப் போதிக்க லாம்சொன்ன தேதுணிந்துசாதிக்க லாமிகப் பேதிக்க லாமுத்திதா னெய்தலாமாதிக்க லாமயில் வல்லிபொற் றாளை யடைந்தவரே” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து வரும். “சேதிக்க லாம்தர்க்க மார்க்கங்கள் எவ்வெவர் சிந்தனையும்சோதிக்க லாமுறப் போதிக்க லாம்சொன்ன தேதுணிந்துசாதிக்க லாமிகப் பேதிக்க லாம்முத்தி தானெய்தலாம்ஆதிக் கலாமயில் வல்லிபொற் றாளை அடைந்தவரே” இனி பாடலின் பொருளைக் காணலாம். “சேதிக்கலாம் தர்க்க மார்க்கங்கள் எவ் எவர் சிந்தனையும்” என முதல் வரி […]

சரஸ்வதி அந்தாதி : 22

சரஸ்வதி அந்தாதி : 22 “வேறிலை யென்று னடியாரிற் கூடி விளங்குநின்பேர்கூறிலை யானுங் குறித்துநின்றே னைம்புலக் குறும்பர்மாறிலை கள்வர் மயக்காம னின்மலர்த்தா ணெறியிற்சேறிலை யீந்தருள் வெண்டா மரைமலர்ச் சேயிழையே” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும். “வேறிலை யென்றுன் அடியாரிற் கூடி விளங்குநின்பேர்கூறிலை யானும் குறித்துநின் றேன்ஐம் புலக்குறும்பர்மாறிலை கள்வர் மயக்காமல் நின்மலர்த்தாள் நெறியில்சேறிலை ஈந்தருள் வெண்டா மரைமலர்ச் சேயிழையே” இனி பாடலின் பொருளைக் காணலாம். முதல் வரி “வேறிலை யென்றுன் அடியாரிற் கூடி” எனத் தொடங்குகின்றது. […]

சரஸ்வதி அந்தாதி : 21

சரஸ்வதி அந்தாதி : 21 “அடிவேத நாறுஞ் சிறப்பார்ந்த வேத மனைத்தினுக்குமுடிவே தவளமுளரி மின்னே முடியா விரத்தினவடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயலிரவின்விடிவே யறிந்தென்னை யாள்வார் தலந்தனில் வேறிலையே” இப்பாடல் கீழ் கண்டவாறு பிரிந்து பொருள் தரும். “அடிவேதம் நாறும் சிறப்பார்ந்த வேதம் அனைத்தினுக்கும்முடிவே தவள முளரிமின்னே முடியா இரத்தினவடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயல் இரவின்விடிவே அறிந்தென்னை ஆள்வார் தலந்தனில் வேறிலையே” பாடலின் பொருளை இனி காணலாம். “அடிவேதம் நாறும் சிறப்பார்ந்த”, அதாவது “அடிவேதம் நாறும் […]

சரஸ்வதி அந்தாதி : 20

சரஸ்வதி அந்தாதி : 20 ‘காரணன் பாகமுஞ் சென்னியுஞ் சேர்தரு கன்னியரும்நாரண னாக மகலாத் திருவுமொர் நான்மருப்புவாரணன் தேவியு மற்றுள்ள தெயவ மடந்தையரும்ஆரணப் பாவை பணித்தகுற் றேவ லடியவரே” இப்பாடல் கீழ் கண்டவாறு பிரிந்து பொருள் தரும். “காரணன் பாகமும் சென்னியும் சேர்தரும் கன்னியரும்நாரணன் அகம் அகலாத் திருவும் ஓர் நான்மருப்புவாரணன் தேவியும் மற்றுள்ள தெய்வ மடந்தையரும்ஆரணப் பாவை பணித்தர்க்கு உற்ற ஏவல் அடியவரே” இனி பாடலின் பொருளைக் காணலாம். “காரணன் பாகமும் சென்னியும் சேர்தரும் கன்னியரும்” […]

சரஸ்வதி அந்தாதி : 19

சரஸ்வதி அந்தாதி : 19 “கமலந்தனி லிருப்பாள் விருப்போ டங்கரங் குவித்துக்கமலங்கடவுளர் போற்றுமென் பூவை கண்ணிற் கருணைக்கமலந்தனைக் கொண்டுகண் டொருகாற் றங்கருத்துள் வைப்பார்கமலங் கழிக்குங் கலைமங்கை யாரணி காரணியே” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும் “கமலம் தனில் இருப்பாள் விருப்போட அங்கரம் குவித்துகமல கடவுளர் போற்றும் மென் பூவை கண்ணிற்கு கருணைகமலந் தனைக்கொண்டு கண்டொருகால்தம் கருத்துள்வைப்பார்கமலங் கழிக்கும் கலைமங்கை ஆரணி காரணியே” இனி பாடலின் பொருளை காணலாம் “கமலம் தனில் இருப்பாள்”, அன்னை தாமரை மலரில் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications