பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாச்சியார் திருமொழி : 27

நீரிலே நின்றயர்க் கின்றோம் நீதியல் லாதன செய்தாய்… தோழியுடன் நீராட சென்றாள் ஆண்டாள், இப்பொழுதெல்லாம் கண்ணன் வருவதில்லை, அவள் ஆடையினை திருடுகின்றான் எனும் பழியினை அவன் தவிர்த்துவிட்டான், ஆண்டாளுக்கு அவன் வருவதில்லை என்பது சோகம் என்றாலும் வெளிகாட்டவில்லை எப்பொழுதும் கண்ணன் நினைவாக இருந்தவள் நீராடும் பொழுதும் அவன் நினைவினிலே நீராடினாள், சுற்றி பார்த்து கொண்டே இருந்தாள், கண்ணன் வருவான் என கண்கள் பூக்க பார்த்து கொண்டிருந்தாள், கரையில் இருந்த ஆடைகள் காணமல் போகாதா? அவனை நோக்கி பாடி […]

நாச்சியார் திருமொழி : 26

அன்று ஒரு பொய்கையிலே நீராட விளைகின்றாள் ஆண்டாள், பொய்கை என்பதும் சுனை என்பதும் இயற்கையாக அமைந்தவை, குளம் என்பது செயற்கையாக அமைய பெற்றது அந்த பொய்கைக்கு தான் தன் தோழியரோடு நீராட செல்கின்றாள் ஆண்டாள், தாமரை மலர்கள் பூத்து குலுங்கும் தடாகம் அது வழக்கமாக கண்ணன் வருவதும் ஆடைகளை எடுத்து விளையாடுவதுமாக இருப்பதால் இம்முறை தோழி ஒருவரை ஆடைக்கு காவல் வைப்பது என முடிவாயிற்று ஆண்டாளுக்கு அதனில் மெல்லிய வருத்தம் இருந்தது, கண்ணன் வருவதும் ஆடைகளை மறையவைத்து […]

கந்தர் அனுபூதி : 02

“உல்லாச நிராகுல யோக இதச்சல்லாப விநோதனும் நீ அலையோஎல்லாம் அற என்னை இழந்த நலம்சொல்லாய் முருகா சுரபூ பதியே” உல்லாச என்றால் மங்காத உள்ளக் களிப்பும், நிராகுல என்றால் துன்பமற்ற நிலையும், யோக என்றால் யோகநிலை தருபவனும், இத என்றால் இதமான நன்மை பயப்பவனும், சல்லாபம் என்றால் பல விஷயங்களை தெரியவைத்து அடியாருடன் மகிந்து திருவிளையாடல் புரிபவனும் என பொருள் நீ அலையோ என்றால் நீயில்லையோ , நீதானே என்பது பொருள் முருகா சுரபூ பதியே என்றால் […]