பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தசமஹாவித்யா 10 : கமலாத்மிகா.

தசமஹாவித்யா 10 : கமலாத்மிகா. இந்த அன்னை தசமஹா வித்யாவின் கடைசிப் படிநிலை. அதாவது எல்லா வரமும் பரிபூரணமான நிலையில் எல்லாம் கடந்த முழுநிலையில், ஒருவனைப் பரிபூரணமாக்கும் வரம் தருபவள், எல்லா வகையிலும் நிறைவு தந்து அந்த நிறைவின் அடுத்தக் கட்டமான முழுத் திருப்தியுடன் இந்த உலகில் இருந்து வெளியேறி பிரபஞ்சத்துடன் இணைவிக்கும் அந்தப் பெரு நிலையினைத் தருபவள் அன்னை. கமலாத்மிகா என்றால் கமலத்தில் அமர்ந்திருக்கும் நாயகி எனப் பொருள், அதாவது தாமரையில் அமர்ந்திருக்கும் நாயகி எனப் […]

தசமஹாவித்யா 09 : ராஜ மாதங்கி.

தசமஹாவித்யா 09 : ராஜ மாதங்கி. தசமஹா வித்யாவில் அடுத்து வருபவள் அன்னை மாதங்கி. சியாமளா தேவி என வழங்கபடுபவளும் இவளே, இந்தப் பிரபஞ்சத்தில் கோடான கோடி உயிர்கள் படைப்புக்கள் இருந்தாலும் அவர்களுக்கெல்லாம் இல்லாத ஒரு சிறப்பு மானிடருக்கு உண்டு. அது உணர்வுகளைத் தக்கபடி வெளிப்படுத்துவது, மானிட இனத்தின் சிறப்பு அதுதான். அப்படிச் சரியாகச் சிந்திப்பதும் சிந்திப்பதை வெளிப்படுத்துவதும் யார் சரியாகச் செய்வார்களோ அவர்கள் பெரும் இடம் அடைவார்கள். சரியாக உணர்ந்து அதைச் சரியாக வெளிப்படுத்தி மற்றவர்களை […]

தசமஹாவித்யா 08 : பகளாமுகி.

தசமஹாவித்யா 08 : பகளாமுகி. இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து, அதற்கு யுக அளவுகளைப் படைத்து, அந்த யுகங்கள் ஒவ்வொன்றுக்கும் மும்மூர்த்திகளையும் படைத்து, அவர்களுக்குத் துணையாக சகல தேவர்கள் பரிவாரங்களெல்லாம் படைத்து, அவர்களைக் கொண்டு இந்த மகா பிரபஞ்சத்தை இயக்குபவள் அன்னை. அப்படியான அந்த மகாசக்தி இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம் தன்னால் படைக்கப்பட்ட தெய்வமெல்லாம் திணறும் போதெல்லாம் அவளே தன் அம்சத்தில் இறங்கி வந்து எல்லாவற்றையும் காப்பாள். அப்படி அவளே வந்து இந்தப் பிரபஞ்சத்தைக் காக்கும் வடிவங்களே […]

தசமஹாவித்யா 07 : தூமாவதி.

தசமஹாவித்யா 07 : தூமாவதி. அன்னையின் மிக நுணுக்கமான அம்சமும் வடிவவுமானது இந்தத் தூமாவதி அவதாரம். பத்துச் சக்திகளாகப் பிரிந்து செயலாற்றும் அன்னையின் இந்த வடிவம் மற்ற வகையில் இருந்து முழுக்க மாறுபட்டது, ஆனால் ஆழமான தாத்பரியம் கொண்டது. தூம் என்றால் புகை, அன்னை புகைவடிவில் எழுந்தவள், மாயத்திரை வடிவில் உருவானவள் என்பதால் இவளுக்கு அந்த நாமம் நிலைத்துவிட்டது, அன்னையின் இந்தத் தோற்றம் பற்றி மூன்று இடங்களில் புராணம் சொல்கின்றது. முதலாவது, அந்தத் தட்சயாகக் காட்சி. அங்குச் […]

தசமஹாவித்யா 06 : திரிபுர பைரவி.

தசமஹாவித்யா 06 : திரிபுர பைரவி. அன்னையின் அடுத்த தசமஹா வித்யா வடிவம் பைரவி, பைரவி என்றால் பைரவரின் பெண் அம்சம் அல்லது பைரவரின் இயக்கு சக்தி எனப் பொருள். பைரவர் என்பது சிவபெருமானின் தோற்றங்களில் ஒன்று. அதற்குப் பயத்தை நீக்குபவர் எனப் பொருள், அன்னை பைரவரின் அம்சமாகப் பயத்தை நீக்கித் தைரியத்தைத் தருவாள், ஆபத்தை அகற்றி நம்மை அச்சமின்றி வாழவைப்பாள் என்பதால் அவளைப் பைரவி, பைரவரின் இயக்கு சக்தி எனக் கொண்டாடுகின்றது புராணம். அந்தப் பைரவியே, […]

தசமஹா வித்யா 05 : மஹா திரிபுர சுந்தரி.

தசமஹா வித்யா 05 : மஹா திரிபுர சுந்தரி. பத்து தேவியரில் அடுத்த அம்சமானவள், பஞ்ச பூத தத்துவத்தின் வடிவமானவளும், மகா சக்தி நிரம்பியவளும் தேவர்கள் மற்றும் மும்மூர்த்திகளின் கடைசிப் புகலிடமும், பொய்யா நம்பிக்கையுமான அந்தத் திரிபுர சுந்தரி. அவளே எல்லோருடைய ஆகக் கடைசிப் புகலிடம். எல்லோருடைய நம்பிக்கையும் ஏன் மும்மூர்த்திகளின் நம்பிக்கையுமே இனி முடியாது எனத் தவித்துப் போகும் நிலையில் கடைசியாக அவள் இறங்கி வந்து காப்பாள். இந்த உலகினைக் காக்கக் கூடியவர் திருமால், அவர் […]

தசமஹா வித்யா 04 : புவனேஸ்வரி.

அன்னையின் பத்து வடிவங்களில் அடுத்த வடிவம் புவனேஸ்வரி தாய். இவள் ஈரேழு உலகிற்கும் அதிபதியாக அதன் இயக்கு சக்தியாக, ஆதார சக்தியாக அறியப்படுகின்றாள், எல்லா உலகுக்கும் ஆதாரம் இவளே. புவனம் என்றால் உலகம், அதை இயக்குபவள் புவனேஸ்வரி. இந்தப் பிரபஞ்சம் ஏகப்பட்ட அண்டங்களைக் கொண்டது. அந்த அண்டங்களில் பதினான்கு உலகம் மட்டும் மானுடர் அறிய அந்த மகா சக்தியால் அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்றபடி அது போக ஏகப்பட்ட உலகங்கள் உண்டு. இந்த உலகங்களெல்லாம் ஒவ்வொரு பலனுக்காய் பரம்பொருளால் உருவாக்கப்பட்டவை. […]

தசமஹா வித்யா 03 : சின்ன மஸ்தா

தசமஹா வித்யா 03 : சின்ன மஸ்தா. “தைத்யானாம் தேஹ நாசாய பக்தானாம் அபயாயச” என்ற வாக்கியத்தின் படி தீயவர்களை அழிக்கவும், நல்லோர்களைக் காக்கவும் ஆயுதங்களைத் தாங்கியுள்ளேன் என அன்னை வந்து நிற்கும் கோலம் இது. இது துஷ்டர்களை அழிக்கும் அன்னையின் உக்கிர கோலங்களில் ஒன்று. ஆனால், மிகுந்த ஆழமான அர்த்தமும், ஞானமும், யோக தத்துவமும் உடையது. தசமஹா வித்யாவில் அடுத்த தெய்வம் அன்னை சின்ன மஸ்தா, இந்தத் தேவி மாபெரும் தத்துவ தாத்பரியமும் எல்லையில்லாச் சக்தியும் […]

தசமஹாவித்யா 02 : தாரா தேவி.

தசமஹாவித்யா 02 : தாரா தேவி. இந்தத் தாரா தேவி என்பவள் சிவனுக்கு அன்னை பத்து தேவதையாகக் காட்சிக் கொடுத்த போது வானமெல்லாம் பரந்து நின்ற அந்தத் தாரா வடிவம். தாரா என்றால் தாரகை, அதாவது நட்சத்திரம் எனப் பொருள். வானமெல்லாம் நட்சத்திரமாக எங்கும் வியாபத்திருப்பது இவளே என்பதில் இருந்து இவளின் புராணம் தொடங்குகின்றது. அவள் வானமெல்லாம் வியாபித்து நிற்கும் மகா சக்தி என்பதைச் சொல்லி அவளின் மகத்துவத்தை வேதமும் புராணமும் போற்றுகின்றன‌. அவள் காளியினைப் போலவே […]

தசமஹாவித்யா 01 : காளி

தசமஹாவித்யா 01 : காளி காளி என்றால் காலம், காலத்தை கட்டுப்படுத்தும் மகா சக்தி எனப் பொருள். காலத்தை கடந்து நிற்பவள் என்றும் பொருள். அது இருளைக் குறிக்கும் சொல்லாகவும் அறியப்படும். இருள் என்றால் இங்கு அறியாமை அல்ல, அது எல்லாம் அறிந்து இயக்கும் அபாரமான மகா சக்தியின் அடையாளம். இந்த உலகில் எல்லாமே இருளில் இருந்தே பிறக்கின்றது. ஒளி என்பது இருளில் இருந்தே வரும், இந்தப் பிரபஞ்சத்தின் 90% கருமையானது, உயிர்கள் ஜெனிக்கும் தாயின் கருவறை […]

Continue in browser
To install tap Add to Home Screen
Add to Home Screen
பிரம்ம ரிஷி
Get our web app. It won't take up space on your phone.
Install
Add பிரம்ம ரிஷி to Home Screen
Close

For an optimized experience on mobile, add பிரம்ம ரிஷி shortcut to your mobile device's home screen

1) Press the share button on your browser's menu bar
2) Press 'Add to Home Screen'.
பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications