பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வசந்த பஞ்சமி

இன்று வசந்த பஞ்சமி வசந்த காலத்தில் வரும் நவராத்திரியின் பஞ்சமி திதி வசந்த பஞ்சமி என கொண்டாடபடும் என்றாலும் சில கணக்கீடுகள் அடிப்படையில் இந்த சியாமளா நவராத்திரியின் பஞ்சமி வசந்த பஞ்சமியாக கொண்டாடப்படுகின்றது. இந்தப் பண்டிகை சாதாரணம் அல்ல, மிக மிக முக்கிய பண்டிகையாக தேசமெங்கும் ஒரு காலத்தில் இருந்தது, பின் பவுத்த குழப்பம் அந்நிய படையெடுப்பு என பல குழப்பங்களால் சுருங்கிவிட்டாலும் இன்று மெல்ல மெல்ல அது மீண்டெழுந்து வருகின்றது. இந்தக் கொண்டாட்டம் முன்பு பாரதம் […]

சியாமளா நவராத்திரி

இந்து மரபில் நான்கு நவராத்திரிகள் உண்டு. ஆடி மாதம், புரட்டாசி, தை, பங்குனி என நான்கு மாதங்களில் அவை கொண்டாடப்படும். ஆடி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வராஹி நவராத்திரி, தமிழக அம்மன் கொடை விழாக்கள் இந்த சாயலே. புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி. வழமையாகக் கொண்டாடப்படும் நவராத்திரி இதுதான், துர்கா பூஜை சரஸ்வதி பூஜை எனக் கொண்டாடப்படுது […]

தை அமாவாசையில் அபிராமி அந்தாதி

அபிராமி பட்டரின் பக்தி தை அமாவாசையில் ஏகப்பட்ட வழிபாடுகள், பக்தி காரியங்கள் உண்டு என்றாலும் மிக முக்கியமானதும் தவிர்கக கூடாததுமானது அபிராமி அந்தாதி பாடலை பாடுவது. காரணம் ஒரு தை அமவாசையில்தான் அபிராமி பட்டருக்கு சோதனை வந்து, அவரைக் காக்க அன்னையே வந்து தன் காதில் அணிந்திருந்த தோட்டை கழற்றி வீசி அமாவாசை அன்று பவுர்ணமி வர செய்து தன் உன்னத பக்தனான பட்டரை காப்பாற்றினாள். இந்த சம்பவம் என்றோ நடந்தது அல்ல, சுமார் 400 ஆண்டுக்கு […]

தை அமாவாசை

இன்று தை அமாவாசை. அமாவாசைகளில் தர்ப்பணம் என்பது இந்துக்களுக்கு முக்கியம். அதுவும் தை அமாவாசை என்பது முன்னோர்களுக்கான வழிபாடுகளைச் செய்யும் மகத்தான நாள். அவ்வகையில் இன்று இந்துக்களுக்கு கடமைகள் உண்டு. காலை காகத்துக்கு எள்சோறு வைத்தல், பசுவுக்கு உணவிடுதல் , மீன்களுக்கு இரையிடுதல் எனச் சில கடமைகள் கட்டாயம் உண்டு. இன்றைய நாள் கடலோரம், ஆற்றங்கரையோரம் முன்னோர் வழிபாடுகளைச் செய்து வழிபடுதல் நலம். அது மூதாதையர் ஆசீர்வாதங்களையெல்லாம் பெற்றுத்தரும். மூதாதையர் சொத்துக்களை மட்டும் பெற்றுக்கொள்வதல்ல வாழ்வு. அவர்களுக்கு […]

பினாங்கு தைப்பூசம்

உலகெங்கும் கொண்டாடப்பட்ட தைப்பூசம் மலேசிய திருநாட்டின் பல பாகங்களிலும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அதில் பினாங்கு தீவில் நடந்த கொண்டாட்டமும் முக்கியமானது. இதே பினாங்கு தீவில்தான் பெரிய மருதுவின் மகன் துரைச்சாமியினை பிரிட்டிசார் சிறை வைத்தனர். இந்தியத் தமிழகம் சிவகங்கையில் இந்து அரசர்களாக இருந்த மருதுபாண்டியரை இந்து ஆலயத்தை இடிப்பேன் என மிரட்டி சரணடையச் செய்த பிரிட்டிசார் அவர்களை கொன்றுபோட்டு மகனை பினாங்குக்கு கடத்தினார்கள். இந்து ஆலயத்தை இடிப்போம் இந்து மதத்தினை ஒழிப்போம் என பீரங்கி துப்பாக்கி முனையில் […]

தைப் பூசம்

இந்திய தமிழகம் மட்டுமல்ல, உலகெங்கும் இந்துக்கள் இருக்குமிடமெல்லாம் கொண்டாடப்படும் பண்டிகை தை பூசம். இது வான்கோள்கள் சஞ்சாரத்திலும் முக்கியமானது, இன்றைய நாளில் மகர ராசியில் சூரியனும் கடகத்தில் சந்திரனும் வரும் நாள், பவுர்ணமியும் கூடிவரும் நன்னாள். பவுர்ணமி என்றால் நிறைவு, கடக ராசி என்பது மோட்ச தத்துவம், மோட்ச கர்மாவினை உணரும் வழி அங்கே உண்டு. அதாவது இந்நாளில் ஞானம் பெருகும், தான் யார் என்பது புரியும் அதற்கான கிரகபலன்கள் அதிகம் சாதகமாக உண்டு. ஒவ்வொருவர் மனமும் […]

மாட்டுப்பொங்கல்

இன்று காளைமாடுகள் விவசாயத்திலிருந்து விடைபெற்றுவிட்டன. உழவு, வண்டி மாடு, ஏற்றம் இறைத்தல் என காளைகளின் எல்லா வேலைகளையும் எந்திரங்கள் பறித்துக்கொண்டன, காலமாற்றம். விவசாயம் மட்டுமல்லாது செக்கு இழுத்தல், பாரங்களை இழுத்தல் என எல்லா கனரக தொழிலிலும் காளைகள்தான் அக்காலத்தில் இருந்தன, இனி அப்படியான காலம் இல்லை. பாலுக்காகவும் உணவுக்காகவும் மட்டும் மாடுகள் பராமரிக்கப்படும் காலமிது, அந்த தேவையும் இல்லையென்றால் மாடுகளை இனி மனிதன் மறந்து விடுவான். குதிரைகளும், யானைகளும் மனிதனிடமிருந்து விலகியதைப் போல மாடுகளும் பின்னொரு காலத்தில் […]

ஜல்லிகட்டு காளை

சில விலங்குகளின் தன்மைகள் ரசிக்க கூடியவை எதை கண்டும் பின்வாங்காமல் கம்பீரமாக நடக்கும் சிங்கம், ஒருவித பெருமிதத்துடன் நடக்கும் சேவல், மந்ததையில் முன் செல்லும் ஆட்டு கடா என ஒரு வரிசை உண்டு பலம் வாய்ந்ததாயினும் பாகனுக்கு கட்டுபட்டு, கணவனை பின் தொடரும் புதுமனைவி போல, (ஆம் புது மனைவி போல மட்டும்) செல்லும் யானையும் அந்த வரிசை. அதில் இந்த ஜல்லிகட்டு காளையும் சேர்ந்து கொள்ளும். களத்தில் யாராலும் அடக்க முடியா காளைகள், கோட்டை தாண்டியதும் […]

பொங்கல் – சூரிய நாராயண ஸ்லோகங்கள்

இந்துக்கள் சூரியனுக்கான வணக்கத்தை தங்கள் முன்னோர் வகுத்த வகையில் சொல்லி போற்றுகின்றார்கள் “ஆதித்தாய நமஹ! சூர்யாய நமஹபாஸ்கராய நமஹ! தினகராய நமஹதிரைலோக்யாய நமஹ! சூடாமணியே நமஹதிவாகராய நமஹ! லோகமித்ராய நமஹஜோதி ஸ்ருபாய நமஹ! அருணாய நமஹவரத ஹஸ்தாய நமஹ! ரவியே நமஹசூர்யநாராயண சுவமியே நமஹ” என வணங்குகின்றார்கள் “சீலமாய் வாழ சீரருள் புரியும்ஞாலம் போற்றும் ஞாயிறே போற்றிசூரியா போற்றி சுந்தரா போற்றிவீரியா போற்றி வினைகள் களைவாய்” என வணங்குகின்றார்கள் “ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!அருள் […]

பொங்கல்

வேதங்களில் சூரியன் சங்க காலத்திலோ இல்லை பண்டைய காலத்திலோ உழவனுக்கு விழா, உழவர் பண்டிகை என ஏதுமில்லை, 18ம் நூற்றாண்டுக்கு முன் அப்படி ஒரு விழா கொண்டாடப்பட்டதாக எந்த ஆதாரமுமில்லை. தைமாதம் அறுவடை நாள் என்பதெல்லாம் சரி, ஆனால் முப்போகம் விளைந்த மண்ணில் ஒவ்வொரு நான்கு மாதத்துக்கு ஒருமுறை அறுவடை நடந்து கொண்டேதான் இருந்தது, அதனால் இது அறுவடை விழா என சொல்லிவிடுவதிலும் அர்த்தமல்ல‌. உழவுக்கும் உலக உயிர்களுக்கெல்லாம் ஆதாரமானது சூரியன் என்பதை உணர்ந்த இந்துமதம் அவரை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications