பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தியாகராசர் – த்யாகப்ரம்மம்

இந்தியா எனும் ஞான பூமியில் தமிழகமும் அந்த புண்ணியத்தை பெற்றது, எண்ணற்ற அவதாரமும் பக்தர்களும் வாழ்ந்த பெரும் ஞான பூமி அது அவர்கள் தங்கள் கர்மத்தால் தவமிருந்தார்கள், தங்களுக்கு தெரிந்த வகையில் ஆத்மரீதியாக இறைவனை வணங்கினார்கள், இறைவனும் ஓடி ஓடிவந்து அவர்களுக்கு தன்னை வெளிபடுத்தினான் இது திருவிளையாடலில் நடந்தது, நாயன்மார்கள், அடியார்கள் வாழ்வில் நடந்தது இன்னும் எத்தனையோ யோகிகள் சுவாமிகள் தவ வாழ்வில் நடந்தது அடிக்கடி நடக்கும் இந்த பிரபஞ்ச விளையாட்டு 17ம் நூற்றாண்டிலும் நடந்தது அந்த […]

இன்று அந்த பரசுராமர் ஜெயந்தி

இந்த உலகம் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இனத்தால் அதாவது வர்ணத்தால் ஆளபடும், இன்று சர்வ நிச்சயமாக வியாபாரிகள் எனும் வைசிய வர்ணத்தால் ஆளபடுகின்றது இதை உடைத்து தொழிலாளர் எனும் சூத்திர வர்ணத்தால் ஆளபட வேண்டும் என்ற சித்தாந்தம் இடையில் எழுந்தாலும் உடைபட்டு போயிற்று, இன்றைய உலகம் வியாபார சமூகம் ஆளும் உலகம் மன்னர்கள் எனும் ஷத்திரியர்கள் ஆண்ட காலமும் இருந்தது எந்த வர்ணம் ஆண்டாலும் அங்கு வேதம் வாழவேண்டும் என்பது பரம்பொருளின் விருப்பம், அதற்கு சோதனை வரும்பொழுதெல்லாம் […]

அபிராமி அந்தாதி : 34

“திங்கட் பசுவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்கஎங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்–தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ?- தரங்கக் கடலுள்வெண்கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே” இந்த பாடலில் பட்டர் ஒரு வித்தியாசமான கோணத்தில் அன்னை புகழினை பாடுகின்றார் அன்னை நிலவின் மேல் நிற்பவள், அதாவது அன்னையின் காலடியில் நிலா இருக்கின்றது, அன்னையின் காலடியில் கிடக்கும் நிலாவினை அவள் கால்பட்ட நிலாவினை சிவன் தலையில் சூடியிருக்கின்றார் என்றால் அவர் அன்னையினையும் தலையினால் தாங்குகின்றார் […]

சித்திரை விஷூ வாழ்த்துக்கள்.

தமிழர் புத்தாண்டு அதுவுமாக தமிழருக்கு கோவிலுக்கு செல்ல வழியில்லை, எல்லா ஆலயங்களும் பூட்டியிருக்கின்றன‌ அதனால் என்ன? மரத்தடி பிள்ளையார் முதல் கல்லில் இருக்கும் கருப்பசாமி வரை ஏன் வீதியெல்லாம் ஆலயங்களை அமைத்தார்கள் என்பதன் பொருளை இந்துக்கள் உணர்ந்து கொண்டிருக்கின்றனர் ஆலயம் பூட்டியே இருக்கட்டும், அட வீதியினை விட்டு வெளியே வர வேண்டாம், கூடி பிரார்த்திக்கும் அவசியமில்லை. மரத்தடி போதும் அதில் இருக்கும் பிள்ளையார் போதும் , கல் போதும். கையில் இருக்கும் சூடம் போதும் அதுவுமில்லை என்றால் […]

காக்கையினை நம் முன்னோர்கள் என சொல்கின்றது இந்துமதம்.

இப்பொழுதெல்லாம் காலையிலே வாசலுக்கு வந்துவிடுகின்றது காகங்கள், இரு வாரங்களில் அதுவும் நமக்கு நட்பாகிவிட்டது நானும் அதுவும் ஒரே நிறம் என்பதும் காரணமாக இருக்கலாம்.. காகம் மானிட வாழ்வில் அக்காலம் தொட்டே வரும் பறவை, சாணக்கியன் வள்ளுவன் என எல்லா மேதைகளும் கவனித்த பறவை அது சாணக்கியன் சொல்வான் “பறவைகளில் தந்திர சாலி காகம்மிருகக்ங்களில் தந்திர சாலி நரிபெண்களில் தந்திர சாலி தோட்டக்காரி (இதை வேலைக்காரி என்றும் சொல்லலாம்)” அது தந்திரசாலி மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. பறவைகளில் […]

பங்குனி உத்திர திருவிழா!

updated on March 24, 2024 பங்குனி என்றால் வடமொழியில் “உச்சம்” என்று பொருள், சமஸ்கிருத கலப்புள்ள மலாய் மொழியிலும் உச்சிற்கு பங்குனி என்றே பெயர். சூரியன் உச்சிக்கு வரும் மாதம் பங்குனி,பொதுவாக வெயில் அதிகம். இம்மாதம் அது. மீன ராசியில் உச்சத்தில் இருக்கும் சூரியனால் பல நன்மைகள் அன்று கிடைக்கும் என்பது ஐதீகம், அதாவது ஒவ்வொரு உயிர்க்கும் ஒரு சக்தி கிடைக்கும் சக்தி என்றால் ஒரு மனிதனோடு சேர்ந்து அவனை இயங்க வைக்கும் நல்ல சக்தி, […]

மார்கழி

இந்த மாதம் மாரிகாலம் கழியும் மாதம் என்பதால் மார்கழி என்றும் , “மார்க்க சீர்ஷம்” எனும் சமஸ்கிருத வார்த்தை அதாவது “மேலான வழி” எனும் பொருளில் வரும் மார்க்க வழி எனும் சொல்லே மார்கழி ஆயிற்று என்றும் சொல்வார்கள் மாதங்களில் அது சைவருக்கும், வைணவருக்கும் மேலான மாதம். சைவர்கள் தேவர் வரும் மாதம் என திருவெம்பாவை பாடி கொண்டாடுவார்கள். வைணவருக்கு கண்ணணே “அர்ஜூனா, மாதங்களில் நான் மார்கழி” என சொன்னபின் என்ன மாற்று கருத்து இருக்க முடியும்? […]

பரசுராமர் ஜெயந்தி

வேதங்களை காக்க வந்த நிரந்தர காவலாளியின் அவதார நாள் “ராமன் எத்தனை ராமனடி..” என்பார்கள் இந்துக்கள், ராம அவதாரம் தவிர சில ராமன்கள் உண்டு. பலராமன் , பரசுராமன் என இன்னும் பலர் உண்டு. ராமன் என்பது இங்கு பொதுபெயராய் இருந்தது, இதில் இந்த பரசுராமன் என்பவர் விஷ்ணுவின் 6ம் அவதாரம். அன்று ஷத்திரியரின் அட்டகாசம் அதிகரித்திருக்கின்றது, மிகபெரும் அழிச்சாட்டியம் செய்து பெரும் அழிவினை கொடுத்திருக்கின்றார்கள். வேதங்களையும் பலவிஷயங்களையும் மதிக்கா நிலையில் அவர்களின் ஆட்டம் அதிகமாயிருந்தபொழுது பரசுராமர் […]

ரக்ச பந்தன்

எந்த நாட்டிலும் இல்லாத சிறப்பான சில பண்டிகைகள் இந்தியாவில் உண்டு அதில் ஒன்று ரக்ச பந்தன் ரக்ச என்றால் காப்பாற்றுதல் என்று பொருள், ரட்சித்தல் என்பதெல்லாம் இந்த பொருள். பந்தன் என்றால் உறவு என்ற பொருளில் வரும், மொத்தத்தில் பாதுகாக்கும் உறவு எனபொருள் இது மகாபாரத காலத்திலே தொடங்கிற்று, பகவான் கண்ணனின் கையில் வழிந்த ரத்த காயத்தை தன் சேலையினை கிழித்து பாஞ்சாலி கட்டியதாகவும் , அதனால் மனம் இறங்கிய கண்ணன் அவளை தங்கையாக பாவித்து எக்காலமும் […]

ஹோலி பண்டிகை

ஹோலிபண்டிகை பற்றி ஏராளமான காரணங்கள் உண்டு. அது ஹோலி என்றால் ஒரு வித பயிர். அது அன்றுதான் விளையும் அதனால் அக்கால விவசாயிகள் கொண்டாடிய அறுவடை விழா ஹோலியாயிற்று என்பது ஒரு கூட்டம் சொல்வது மதவாதிகள் இரு காரணங்களை சொல்கின்றார்கள், முதலாவது கண்ணன் பூதகியினை கொன்ற நாள், இரண்டாவது இரண்யன் கதை அதாவது கண்ணன் குழந்தையாக இருந்தபொழுது அவனை அப்பொழுதே கொன்றுவிட பூதகி என்றொரு அரக்கி வந்தாளாம். அவள் விஷப்பாலை ஊட்டி குழந்தை கண்ணணை கொல்ல முயன்றபொழுது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications