பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பகவத் கீதை‍ 10

கீதையின் 10 அத்தியாயம் “விபூதி அத்தியாயம்” விபூதி என்றால் கடவுளின் தன்மை என்பது பொருள், அந்த பரம்பொருளின் தன்மையினை ஆழ விளக்குகின்றான் கண்ணன் அர்ஜூனா நீ எனக்கு உகந்தவன் என்பதால் நீ தெளிவுற வேண்டி இன்னும் சொல்கின்றேன் வான தேவர்கள் கூட‌ என் மகிமையை உணராதவர்கள், முனிவர்களுக்கு கூட தேவலோகத்தை தாண்டி என்னை பற்றி தெரியது ஆனால் வானவர்களுகும் ரிஷிகளுக்கும் மூலம் நானே நான் பிறப்பில்லாதவன் தொடக்கமும் முடிவும் இல்லாதவன் என உணர்பவன் மனிதரில் தெளிவுபெற்றவன் பாவம் […]

பகவத் கீதை‍ – 9

அர்ஜூனா இந்த “ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்” எனும் யோகங்களில் சிறந்த யோகத்தை உனக்கு போதிக்கின்றேன், இதனை ரகசியமாக அனுதினமும் பின்பற்றி வந்தால் பெரும் பலன் அடைவாய். ஆசையற்றவனாகிய உனக்கு இந்த அதி ரகசியமான ஞானத்தை லவுககீக உலகின் தத்துவத்துடன் சொல்லுகிறேன். இதையறிவதால் தீமையிலிருந்து விடுபடுவாய். இந்த ராஜவித்தை, ராஜரகசியம், தூய்மை தருவதில் மிக மாண்புடையது, கண்ணெதிரே காணுதற்குரியது. செய்தற்கு மிக எளிது, அழிவற்றது. மனதால் நம்பிக்கையற்ற மனிதர் என்னை எய்தாமல் மீண்டும் நரக சம்சாரப் […]

கீதையின் எட்டாம் அத்தியயாம்.

கீதையின் எட்டாம் அத்தியயாம் அஷ்சர பிரம்ம யோகம் அஷரம் என்றால் அழியாத அல்லது மாற்றமுடியாத என எனபொருள் , அழியாத பிரம்ம யோகத்தை பற்றி சொல்ல்லும் பகுதி இது அர்ஜூனன் கேட்கின்றான், “கண்ணா பிரம்மம் எது? ஆத்ம ஞானம் யாது? கர்மமென்பது யாது? பூதஞானம் யாது? தேவஞானம் என்பது எதனை? யாக ஞானம் என்பதென்ன? யாக ஞானம் என்பதென்ன? தம்மைத் தாமே உணர்ந்தவர்களால் இறுதிக் காலத்திலேனும் இவ்வுலகத்தில் நீ அறியப்படுவது எப்படி? கண்ணன் தெளிவாக விளக்குகின்றான், “அர்ஜூனா […]

பகவத் கீதை – 7

கண்ணனுக்கு மறை பொருளான ஞானத்தை விளக்கிய கண்ணன், கண்காணும் சொரூப வடிவான தன் தன்மையின் விஞ்ஞானத்தை அதாவது அவன் இருப்பின் சாட்சியினை இந்த அத்தியாயத்தில் விளக்குகின்றான் அது “ஞான விஞ்ஞான யோகம்” எனும் 7ம் அத்தியாகமாவே வருகின்றது கண்ணன் சொல்கின்றான் ” அர்ஜூனா என்னோடு கலந்துந்து, முழு மனத்தோடு யோகத்திலே அமர்ந்தவனாய் என்னை முழுதும் உணருமாறு கவனமோடு கேள், நான் சொல்கின்றேன் ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் சம்பூரணமாக உனக்குச் சொல்லுகிறேன். இதை அறிந்தால் பிறகு நீ அறிய வேண்டியது […]

பகவத் கீதை 6ம் அத்தியாயம்

அர்ஜூனனுக்கு மேற்கொண்டு யோக சந்நியாச தன்மையினை போதிக்கும் இந்த ஆறாம் அத்தியாயமே “ஆத்மஸம்யம யோகம்” கண்ணன் சொல்கின்றான், “அர்ஜூனா சந்நியாஸி என்பவன் யார்? எவனொருவன் கர்ம பலனில் பற்றில்லாமல் செய்ய வேண்டிய கர்மங்களைச் செய்கிறானோ அவனே ஸந்நியாசி. அவனே யோகி . யாகத்தில் அக்கினியைப் பற்ற வைக்காததாலோ, கர்மங்களைத் துறந்ததாலும் ஒருவன் ச‌ந்நியாசி ஆக மாட்டான். அர்ஜூனா., ஸந்நியாசமென்று எதைச் சொல்லுகிறார்களோ அதையே யோகமென்று அறிவாயாக.கர்ம பலனைப் பற்றிய எண்ணத்தைத் துறக்காதவன் யோகி ஆகமாட்டான். யோகநிலையில் முன்னேற […]

பகவத் கீதை- 5

அர்ஜூனக்கு கர்ம யோகமும் ஞான யோகமும் விளங்கிற்று, அவனை பொறுத்தவரை கடமையினை செவ்வனே செய்து கடவுளை காண்பது எல்லாவற்றுக்கும் கடவுளே காரணம் என நினைத்து அமைதி கொள்வது கர்மயோகம், கடவுளை சரணைந்து அவரிலே இளைவது ஞான சந்நியாக யோகம் இதில் குழம்பிய அர்ஜூனன் கேட்கின்றான், “கண்ணா, கர்மங்களைத் துறந்து விடு என்கிறாய். மேலும் கர்ம யோகத்தைப் பற்றியும் சொல்கிறாய். இவ்விரண்டிலும் எது உயர்ந்ததோ, அந்த ஒன்றைப் பற்றிச் சந்தேகத்திற்கு இடமில்லாமல் முடிவு செய்து எனக்குச் சொல், நான் […]

பகவத் கீதை 4ம் அத்தியாயம்

கர்மயோகத்தை கேட்ட அர்ஜூனன் , கண்ணன் தன்னை போரில் ஈடுபட மட்டும் தூண்டுவதாக எண்ணி குழம்பியிருந்தான், இதை அறிந்த கண்ணன் 4ம் அத்தியாயத்தில் தொடர்கின்றான் “அர்ஜூனா இந்த‌ யோகத்தை நான் சூரியனுக்குச் சொன்னேன், சூரியன் மனுவிற்குச் சொன்னான் ,மனு இக்ஷ்வாகுவிற்குச் சொன்னான், இந்த யோகம் பரம்பரை பரம்பரையாக சொல்லபட்டது, அரசர்களும் ரிஷிகளும அதை அறிந்திருந்தார்கள், பின் இந்த யோகம் வெகு காலமாக மறைந்து போய் விட்டது. நீ என் சீடனும் என்னை சரணடைந்தவனுமாய் இருகின்றாய் அதனால் இந்த […]

பகவத் கீதை-3

கண்ணன் யோகியாக மாறி கடமையினை விருப்பு வெறுப்பின்றி செய் என சொன்னதும் அர்ஜூனன் மனதை மறுபடி மயக்கமேகம் மூடுகின்றது, அவன் தடுமாறி கேட்கின்றான், “கண்ணா, பெரும் யோகியாக இருக்கும் ஒருவனால் இந்த போர் எனும் படுபயங்கர கர்மத்தை செய்யமுடியுமா? நீ அதற்கு என்னை தூண்டலாமா?” “அர்ஜூனா யோகங்கள் பலவகை, நான் உனக்கு கர்ம யோகத்தை பற்றி சொல்கின்றேன். ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் ஏற்றுகொண்ட கடமையே கர்மம், அவன் அதற்காகவே படைக்கபட்டிருகின்றான். அதை அவன் ஒரு யோகிக்குறிய மனநிலையில் […]

கீதையின் இரண்டாம் அத்தியாயம் ஸாங்க்ய யோகம்.

கீதையின் இரண்டாம் அத்தியாயம் ஸாங்க்ய யோகம். ஸாங்கியம் என்றால் இல்லாத ஒன்றுக்கும் இருக்கும் ஒன்றுக்குமான தொடர்பினை சொல்லும் தத்துவம் குழம்பி தவிக்கும் அர்ஜூனனிடம் மெல்ல கேள்விகளை எழுப்புகின்றான் கண்ணன் “அர்ஜூனா இம்மாதிரி குழப்பங்கள் உனக்கு வந்ததே இல்லையே, இது உனக்கு சிறப்பை தராது, உயர்ந்த லட்சியத்தில் உள்ளவனுக்கு இக்குழப்பம் வீழ்ச்சியினை கொடுக்கும், இந்த பலவீனத்தை தள்ளிவிட்டு எழு” அர்ஜூனன் குழப்பத்தின் உச்சியில் சொல்கின்றான் “அவர்கள் அயோக்கியராயினும் பெரியவர்கள், அவர்கள் ரத்தத்தில் நான் வென்று ஆகபோவது ஒன்றுமில்லை, என்னால் […]

கீதையின் முதல் அத்தியாயமே எவ்வளவு சரியாய் இருக்கின்றது பார்த்தீர்களா?

பாரதத்தின் மிக பெரும் ஞான பொக்கிஷம் கீதை, அதை கொண்டாடா நாடு இல்லை, அதன் புகழ் பாடாத விஞ்ஞானியும் மேதைகளுமில்லை படிக்கும் ஒவ்வொருவனும் எந்த மனநிலையில் இருந்து படிப்பானோ அவனுக்குரிய தெளிவினை கீதை வழங்கும், அது விஞ்ஞானியோ நிர்வாகியோ பாமரனோ யாராக இருந்தாலும் சரி அது யாரையெல்லாமோ எட்டி எங்கெல்லாமோ ஒளி வீசியது, அணு விஞ்ஞானி முதல் மகாத்மா காந்தி வரை அதனால் தெளிவு பெற்றார்கள் அந்த ஞான தொகுப்பின் தன்மை அப்படியானது , ‍ இந்தியாவின் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications