சேந்தனாரின் திருவாதிரை திருப்பதிகம் “”பல்லாண்டு கூறுதுமே” – ஒன்பதாம் திருமுறை
இன்று பாடவேண்டிய திருப்பதிகமான “பல்லாண்டு கூறுதுமே” எனும் மார்கழி திருவாதிரை வழிபாட்டுகுரிய பாடல் எது என்பதை இதோ தருகின்றோம். இந்நாளில் இதனைப் பாடுதல் நலம். குழுவாக கூட்டமாகக் கூடிப் பாடுதல் இன்னும் நலம். திருச்சிற்றம்பலம் சொல்லித் தொடங்கலாம். “மன்னுக தில்லை வளர்கநம்பத்தர்கள் வஞ்சகர் போயகலபொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்துபுவனி யெல்லாம் விளங்கஅன்னநடை மடவாள் உமைகோன்அடியோ முக்கருள் புரிந்துபின்னைப் பிறவி யறுக்க நெறிதந்தபித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. மிண்டு மனத்தவர் போமின்கள்மெய்யடியார்கள் விரைந்து வம்மின்கொண்டுங் கொடுத்தும் குடிகுடிஈசற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்துஅண்டங் […]