பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

விநாயகர் அனுபூதி : 16 to 20

விநாயகர் அனுபூதி : 16 “ஆற்றல் அறியேன் அடிசெய் பிழைதீர்சீற்றம் தவிர்வாய் திகழ்சிற் பர! யான்சாற்றும் தமிழ்மா லைதனைத் துதிக்கைஏற்றே அருள்வாய்! அருள்வாய் இனிதே” பாடல் இப்படிப் பிரியும். “ஆற்றல் அறியேன் அடிசெய் பிழைதீர்சீற்றம் தவிர்வாய் திகழ்சிற் பர!யான்சாற்றும் தமிழ் மாலை தனைத் துதிக்கைஏற்றே அருள்வாய்! அருள்வாய் இனிதே” விநாயகப்பெருமானே, “உன் பெரும் சக்தி தெரியாமல், அறியாமல் அறியாமையால் நான் ஏதும் பிழை செய்திருந்தால் மன்னிப்பாயாக. கோபம் தவிர்ப்பாயாக‌. நான் உன்னை துதித்துச் சாற்றும் தமிழ்மாலையினை உன் […]

விநாயகர் அனுபூதி : 11 to 15

விநாயகர் அனுபூதி : 11 “வஞ்சப் புலன் என் வசமாய் நிசமாய்க்கொஞ்சிக் குலவிக் குணமாய் மிளிரஎஞ்சித் தமதில் இனிதே உனதுகஞ்சக் கழல்வை கணநா யகனே” தேவர்களுக்கெல்லாம் தலைவனே! என்னை வஞ்சித்துத் தீய வழியில் சேர்க்கும் ஐம்புலன்களும் என் அறிவுக்கு உட்பட்டு நல்ல செயல்களைச் செய்பவையாய் மாறி ஒளிவிடுவதற்கு, என் சித்தத்தில் உனது தாமரை போன்ற அடிகளை வைப்பாய் என்பது பொருள். ஐம்புலன்களையும் அடக்காமல் எதிலும் வெற்றி இல்லை.அதுவும் ஆன்மீகப் படிநிலையில் இந்தப் புலனடக்கம் மிக மிக முக்கியமானது. […]

விநாயகர் அனுபூதி : 06 to 10

விநாயகர் அனுபூதி : 06 “ஒருகொம் புடையான் உயர்மோ தகமேவிரும்பும் பெருமான் விடையோன் குமரன்சுரும்பார் தொடையன் சுகமா குமெலாம்அருள்வான் அருள்வான் அடியார் அவர்க்கே” பாடல் புரிந்துகொள்ள எளிதானது. “ஒரு கொம்பு உடையான் உயர்மோதகமேவிரும்பும் பெருமான் விடையோன் குமரன்சுரும்பார் தொடையன் சுகமாகும் எல்லாம்அருள்வான் அருள்வான் அடியார் அவர்க்கே” அவன் ஒரு தந்தம் உடையவன், மோதகத்தை விரும்புபவன், விடை எனும் காளைமேல் ஏறிவரும் சிவனின் குமரன், வண்டுகள் மொய்க்கும் மாலையினை அணிந்திருப்பான், அடியார்கள் சுகமாக நிம்மதியாக வாழ எல்லா வரத்தையும் […]

விநாயகர் அனுபூதி : 01 to 05

விநாயகர் அனுபூதி : 01 முருகம்பெருமானுக்குக் கந்த சஷ்டி கவரம், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் எனப் பல வகை பாடல்களைப் பின்னாளில் அடியார்கள் பாடிவைத்தனர். இதன் முன்னோடி விநாயகப் பெருமானுக்கான வழிபாடு விநாயக வழிபாடு எனும் மூத்த வழிபாட்டை சப்த ரிஷிகள் செய்தார்கள், ஒளவையார் செய்தார் இன்னும் ஏகப்பட்டோர் விநாயகப் பெருமானின் பெருமைகளை வகை வகையாக பாடிவைத்தார்கள். நாயன்மார்கள் வரலாற்றை முதலில் பாடிய நம்பியாண்டார் நம்பி பெரும் விநாயக அடியார். இப்படிப்பட்ட வரிசையில் முக்கியமானவர் காசிப […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : அலவாய் முருகப்பெருமான் ஆலயம் மற்றும் செண்பக மலை ஆலயம்

முருகப்பெருமான் ஆலயங்கள் : அலவாய் முருகப்பெருமான் ஆலயம் மற்றும் செண்பக மலை ஆலயம் அலவாய் ஆலயம் கொங்குப் பகுதியில் நாமக்கல் பக்கம் அமைந்திருக்கின்றது. இந்த ஆலயம், ராசிபுரத்துக்கும் வெண்ணந்தூருக்கும் இடையில் இருக்கும் மலையின் தலமிது, இதனைச் சுற்றியே சென்னிமலை முதல் பல முருகப்பெருமான் தலங்கள் உண்டு. அதில் ஒன்று இந்த அலவாய் தலம். இதன் வரலாறு கொங்கண முனிவர் காலத்தில் இருந்து தொடங்குகின்றது, பொதிகை மலை பக்கம் அகத்தியர் போல் கொங்கு நாட்டு பக்கம் பிரசித்தியானவர் கொங்கண […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : மயிலாடும் மலை மற்றும் கனகமலை முருகன் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : மயிலாடும் மலை மற்றும் கனகமலை முருகன் ஆலயம். வேலூர் அருகில் உள்ள கே.வி குப்பம் அருகே அமைந்துள்ளது இந்த ஆலயம். சிறிய குன்றின் மேல் மாயல் கிராமத்தின் அருகே அமைந்துள்ளது இந்த ஆலயம். இது பழங்காலத்தில் இருந்தே உண்டு எனினும் மீளக் கட்டப்பட்டது சமீபத்திய காலங்களிலே. அங்கு நாகராஜ் சித்தர் என்பவர் இருந்தார். முருகபெருமானின் சீடரான அவர் திருத்தணி உள்ளிட்ட பல திருத்தலங்களுக்குச் சென்று முருகனை வழிபட்டு வந்தார், அவர் கனவில் தோன்றிய […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : வடபழனி முருகப்பெருமான் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : வடபழனி முருகப்பெருமான் ஆலயம். தமிழக முருகப்பெருமான் ஆலயங்களில் முக்கியமானதும் சென்னையின் மிக முக்கிய அடையாளத்தில் ஒன்றுமானது வடபழனி முருகப்பெருமான் ஆலயம், 18 ஆம் நூற்றாண்டில் ஒரு ஓலை கொட்டைகையில் துவங்கப்பட்ட இவ்வாலயம் இப்போது ராஜகோபுரத்துடன் பிரமாண்டமாக வளர்ந்திருப்பதெல்லாம் முருகனின் தனி அருள். இந்த ஆலயத்தின் தலவரலாறு அண்ணாசாமி நாயக்கர் என்பவரிடம் இருந்து துவங்குகின்றது, அது 18 ஆம் நூற்றாண்டின் காலங்கள். இப்போது இருக்கும் சென்னை அப்போது இல்லை, மெட்ராஸ் என்பது கடற்கரை கோட்டை […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : கன்னியாகுமரி முருகன் குன்றம் ஆலயம் மற்றும் மருங்கூர் சுப்பிரமணியசாமி ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : கன்னியாகுமரி முருகன் குன்றம் ஆலயம் மற்றும் மருங்கூர் சுப்பிரமணியசாமி ஆலயம். முதலாவது ஆலயமான முருகன் குன்றம் ஆலயம் கன்னியாகுமரியின் நுழைவாயிலில் தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, இந்த ஆலய வரலாறு மகா தொன்மையானது. வரலாற்றின் அடிப்படையில் ஆழமானது. அதாவது, இந்தப் பகுதிகள் சேரநாட்டின் தென்கிழக்கு எல்லையாய் இருந்த பகுதிகள். சேர நட்டின் கிழக்கு எல்லை மிகப்பெரிய மலைகளால் ஆனது என்பதால் இந்தப் பிரதேசம் மட்டும் சிறிய பகுதி மட்டும்கொஞ்சம் காவல் செய்யப்பட வேண்டிய பகுதி என்பதால் […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : தோவாளை செக்கர்கிரி மற்றும் அமரர்பதிகாத்த நயினார் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : தோவாளை செக்கர்கிரி மற்றும் அமரர்பதிகாத்த நயினார் ஆலயம். பாரத தென்முனை எக்காலமும் தவம் செய்ய ஏதுவான இடம், இதனை அன்னை தேவி கன்னியாகுமரியில் வந்து அமர்ந்து சொன்னாள், இன்னும் பல அவதாரங்கள் அதை உறுதிப்படுத்தின. அந்தத் தென்முனை எப்போதும் சூட்சுமான சித்தர்களைக் கொண்டிருந்தது, அந்தச் சித்தர்களின் தலைவனாக கடவுளாக அந்த முருகப்பெருமான் வீற்றிருந்தார். அவர் இருந்ததாலே அகத்தியர், விசுவாமித்திரர், கௌதமர் என எல்லா ஞானியரும் தென் பக்கம் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார்கள், ஞானம் […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : தென்பழனி முருகன் மற்றும் வவ்வால் குகை முருகன் ஆலயம் ஆரல்வாய் மொழி.

முருகப்பெருமான் ஆலயங்கள் : தென்பழனி முருகன் மற்றும் வவ்வால் குகை முருகன் ஆலயம் ஆரல்வாய் மொழி. மேற்குத் தொடர்ச்சி மலையில் பொதிகை மலை மட்டும் அகத்திய தலைமையில் சித்தர்கள் குவிந்த இடம் அல்ல, அவர்கள் அந்த நீண்ட மலை முழுக்க பயணித்தார்கள், அபூர்வ மூலிகைகள் தேடி, பிரபஞ்சத்தின் நல்ல அதிர்வுகளைத் தரும் இடம் தேடி தேடி அலைந்தார்கள், தாங்கள் இருக்குமிடமெல்லாம் முருகப்பெருமனையும் வணங்கினார்கள். பின்னாளில் அவர்கள் சமாதியானாலும் அவர்கள் உருவாக்கிய முருகப்பெருமான் ஆலயங்கள் அந்த மலைமுழுக்க நிலைபெற்றன. […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications