கார்த்திகை சோமவாரத்தில் வழிபட வேண்டிய முக்கிய சிவாலயங்கள்.
கார்த்திகை சோமவாரத்தில் வழிபட வேண்டிய முக்கிய சிவாலயங்களில் திருநெடுங்களம் ஆலயமும் ஒன்று. இது திருச்சி அருகே அமைந்துள்ளது. இங்கு சிவன் திருநெடுங்களநாதர், நித்திய சுந்தரேஸ்வரர் என அமர்ந்திருக்க, அன்னை மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி என அழைக்கப்படுகின்றார். சம்பந்த பெருமான் தன் தேவாரத்தில் இந்த ஆலயத்தின் “இடர் களையும் பதிகம்” என ஈசன் மேல் பத்து பாடல்களை பாடியுள்ளார், இப்படிப் தொடங்கி பாடியுள்ளார். “மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல் வளரும்பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுன்னைப் பேசினல்லால்குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்தநிறையுடையார் […]