ஐப்பசி பவுர்ணமி – அன்னாபிஷேகம்
“சோறு கண்ட இடம் சொர்க்கம்” என்றால் சோற்றினை சிவலிங்கத்துக்கு படைப்பதை காண்பது. அதைக் கண்டால் சொர்க்கம் கிடைக்கும் என ஒரு விளக்கம் வருகின்றதே, அது சரியானதா? என ஒரு சிலர் கேட்பதால் நாம் நம்மால் இயன்ற அளவு அதைச் சொல்ல விளைகின்றோம். இதில் ஏதேனும் தவறு இருப்பின் இது அடியேனின் தவறல்ல. சில ஞானியரின் குறிப்புகளில் இருந்துதான் தருகின்றோம். சோறு என்றால் அது ஒரு பொருள் அல்ல, சோறு என்பது ஒரு நிலை. அதாவது பக்குவப்பட்ட நிலை. […]