அபிராமி அந்தாதி 58
அருணாம்புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்தருணாம்புயமுலைத் தையல் நல்லாள் தகை சேர் நயனக்கருணாம்புயமும் வதனாம்புயமும் கராம்புயமும்சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே இங்கு அம்புயம் என்றால் தாமரை எனும் பொருளை தெரிந்துகொண்டு மேற்கொண்டு காணலாம் இந்து ஞானமரபில் தாமரை முக்கியமானது, அது ஞானமலராக ஞானம் மலர்வதன் குறியீடாகவே கருதபட்டது, இந்துமதத்தின் எல்லா பிரதான தெய்வங்களையும் அம்மதம் தாமரை மலர்மேல்தான் நிறுத்திற்று, பிரம்மன் முதல் தேவி வரை அது தாமரையில் வைத்து மகிழ்ந்தது தாமரை என்பது ஞானத்தின் வெளிப்பாடாகவே இந்துமரபில் […]