பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆடி பூரம்

இந்துக்களின் ஒவ்வொரு பண்டிகையும் அதன் கொண்டாட்டமும் மானிட வாழ்வின் ஒவ்வொரு பக்கத்தையினையும் உணர செய்பவை, அர்த்தமில்லா பண்டிகைகள் என்றோ வெட்டி செலவு பண்டிகைகள் என்றோ அங்கு எதுவுமில்லை ஒவ்வொரு கொண்டாட்டமும் அவர்களுக்கு அவ்வளவு ஞானமானது , வானியல் பிரபஞ்ச கோள்களுடனும் அன்றைய நாளில் ஓங்கியிருக்கும் சக்தியுடனும் மிக நுணுக்கமாக பின்னபட்ட ஞானமதம் அது அதனில் ஒன்றுதான் இந்த ஆடிபூரம், ஆடிமாத பூர நட்சத்திரம் ஆடிபூரம் என்றாயிற்று பூர நட்சத்திரம் ஜாதகரீதியாக சிம்மராசிக்குரியது, அந்த நட்சத்திரம் சக்திதேவிக்கு உகந்தது […]

அபிராமி அந்தாதி : 43

அபிராமி அந்தாதி : 43 “பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்திரிபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்புரிபுர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சிலைக்கைஎரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே” முதல்வரி”பரிபுர சீறடி” என என்றாகின்றது, பரிபுரம் என்றால் சிலம்பு, பரிபுரம், ஞெகிழி, ஞெகிழம், அரதனம், நூபுரம் என பல பொருள் உண்டு எனினும் இவை எல்லாம் சிலம்பு எனும் கொலுசை குறிப்பதே அன்னை கால்களில் சிலம்பை அணிந்திருக்கின்றாள் என்பதை “பரிபுர சீறடி” என்கின்றார் பட்டர், இங்கு […]

கேசவராம் பலிராம் ஹெட்கேவர்

எக்காலமும் அந்நியருக்கு எதிர்ப்பை கொடுத்துகொண்டே இருக்கும் இந்துஸ்தானம் மொகலயாயரை தொடர்ந்து அதே எதிர்ப்பை வெள்ளையனுக்கும் இந்தியா காட்டி கொண்டே இருந்தது, ஆனால் தன் சாதுர்யமான தந்திரத்தாலும் பிரித்தாளும் சூழ்ச்சியாலும் அவன் அதை அடக்கி கொண்டே இருந்தான் அவனை எதிர்ப்போரை மக்களிடம் இருந்து தனிமைபடுத்தி வீழ்த்துவது அவன் தந்திரொபாயங்களில் ஒன்று, ஆச்சரியமாக இந்திய மக்களும் பெரும் எதிர்ப்பினை திரண்டு காட்டவில்லை, கட்டபொம்மன் முதல் பலர் தூக்கிலிடபடும் பொழுதெல்லாம் தேசமெங்கும் ஒரு ஒற்றுமையான எதிர்ப்பு இல்லை 1857 முதல் விடுதலைபோர் […]

அபிராமி அந்தாதி : 37

“கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்னமெய்க்கே அணிவது வெண் முத்துமாலை விட அரவின்பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும்எட்டுத்திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே” இப்பாடல் அன்னையின் திருகோலத்தையும் அந்த கோலத்தில் அவளின் உயர்ந்த குணத்தையும் குறித்து பாடபடும் பாடல், பட்டர் அந்த பொருளில் மிக அழகாக பாடுகின்றார். முதல்வரி “கைக்கே அணிவது கன்னலும் பூவும்” அன்னையின் கைகளில் கரும்பும் பூக்களும் கொண்டிருக்கின்றாள் என்பது பொருளாகும், அன்னை மன்மதனை வெற்றிகொண்டு அவன் ஆயுதங்களை பறித்தவள் எனும் […]

ஆதி சங்கரர்

இந்துமதம் மகா சூட்சுமனானது, அது எக்காலமும் எதிரிகளை கொண்டிருக்கும் அந்த எதிரிகள் வடிவம் எதுவோ அதற்கேற்ப தன்னில் ஒரு வடிவினை அது உருவாக்கும் அரிஸ்டாட்டிலின் தயாரிப்பில் அலெக்ஸாண்டர் வந்தால் அது சாணக்கியனின் குப்தனை உருவாக்கும் முகமது கோரி வந்தால் அது நாயக்க மன்னர்களை உருவாக்கும், அவுரங்கசீப் வாள் எடுத்தால் அது சிவாஜியினை உருவாக்கி வாள் கொடுக்கும் அப்படிபட்ட இந்துமதம் தத்துவ விளக்கம் என இந்துமதத்தை சமணமும் பவுத்தமும் குழப்பிய காலங்களில், இந்த சைவ சமயம் பெரும் இருளில் […]

தியாகராசர் – த்யாகப்ரம்மம்

இந்தியா எனும் ஞான பூமியில் தமிழகமும் அந்த புண்ணியத்தை பெற்றது, எண்ணற்ற அவதாரமும் பக்தர்களும் வாழ்ந்த பெரும் ஞான பூமி அது அவர்கள் தங்கள் கர்மத்தால் தவமிருந்தார்கள், தங்களுக்கு தெரிந்த வகையில் ஆத்மரீதியாக இறைவனை வணங்கினார்கள், இறைவனும் ஓடி ஓடிவந்து அவர்களுக்கு தன்னை வெளிபடுத்தினான் இது திருவிளையாடலில் நடந்தது, நாயன்மார்கள், அடியார்கள் வாழ்வில் நடந்தது இன்னும் எத்தனையோ யோகிகள் சுவாமிகள் தவ வாழ்வில் நடந்தது அடிக்கடி நடக்கும் இந்த பிரபஞ்ச விளையாட்டு 17ம் நூற்றாண்டிலும் நடந்தது அந்த […]

இன்று அந்த பரசுராமர் ஜெயந்தி

இந்த உலகம் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இனத்தால் அதாவது வர்ணத்தால் ஆளபடும், இன்று சர்வ நிச்சயமாக வியாபாரிகள் எனும் வைசிய வர்ணத்தால் ஆளபடுகின்றது இதை உடைத்து தொழிலாளர் எனும் சூத்திர வர்ணத்தால் ஆளபட வேண்டும் என்ற சித்தாந்தம் இடையில் எழுந்தாலும் உடைபட்டு போயிற்று, இன்றைய உலகம் வியாபார சமூகம் ஆளும் உலகம் மன்னர்கள் எனும் ஷத்திரியர்கள் ஆண்ட காலமும் இருந்தது எந்த வர்ணம் ஆண்டாலும் அங்கு வேதம் வாழவேண்டும் என்பது பரம்பொருளின் விருப்பம், அதற்கு சோதனை வரும்பொழுதெல்லாம் […]

அபிராமி அந்தாதி : 34

“திங்கட் பசுவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்கஎங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்–தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ?- தரங்கக் கடலுள்வெண்கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே” இந்த பாடலில் பட்டர் ஒரு வித்தியாசமான கோணத்தில் அன்னை புகழினை பாடுகின்றார் அன்னை நிலவின் மேல் நிற்பவள், அதாவது அன்னையின் காலடியில் நிலா இருக்கின்றது, அன்னையின் காலடியில் கிடக்கும் நிலாவினை அவள் கால்பட்ட நிலாவினை சிவன் தலையில் சூடியிருக்கின்றார் என்றால் அவர் அன்னையினையும் தலையினால் தாங்குகின்றார் […]

பகவத் கீதை 18: மோட்ச சந்நியாச யோகம் : 03/03

“அர்ஜூனா, அறிவினால் செயல்களை யெல்லாம் எனக்கெனத் துறந்துவிட்டு, என்னிடத்தே ஈடுபட்டு, புத்தி யோகத்தில் சார்புற்று, எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு. என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய் எல்லாத் தடைகளையும் எனதருளால் கடந்து செல்வாய். அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயாயின், பெரிய நாசத்தை அடைவாய். நீ அகங்காரத்திலகப்பட்டு “இனிப் போர் புரியேன்” என்று துணிவாயாயின், உன் துணிவு பொய்யாகும் . இயற்கைகுணமான உன் போர் குணம் உன்னை அங்கே இழுக்கும் இயற்கையில் தோன்றிய ஸ்வகர்மத்தால் கட்டுண்டிருக்கும் […]

பகவத் கீதை 18ம் அத்தியாயம் ‍ – மோட்ச சந்நியாச யோகம் : 02/03

பகவத் கீதை 18ம் அத்தியாயம் ‍ – மோட்ச சந்நியாச யோகம் : 02/03 அர்ஜூனா, ஆசை நீங்கியவன், அஹங்காரமற்றவன், உறுதியும் ஊக்கமும் உடையவன் வெற்றி தோல்வியில் வேறுபடாதவன் இத்தகையவன் குணம் உடையோன் சாத்விகமானவன். ஆசையுள்ளவன், வினைப்பயனை விரும்புபவன், பிறர்பொருளை விரும்புபவன், துன்புறுத்தும் தன்மையுடையவன், சுத்தமில்லாதவன், மகிழ்வும் சோர்வும் கொள்பவன், அத்தகைய குணம் உடையோன் ராஜஸன். யோகத்திற்கு ஒவ்வாத மனமுடையவன், அறிவு வளரப்பெறாதவன், முரடன்,வஞ்சகன், பழிகாரன், சோம்பேரி, துயருறுபவன், காலம் நீட்டிப்பவன், இத்தகைய குணமுடையோன் தாம்சன். அர்ஜூனா, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications