பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கவிஞன் கண்ணதாசன்

கண்ணதாசன் வள்ளுவன்,இளங்கோ,கம்பன்,பாரதிக்கு பின் தமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன். முத்தமிழ் அறிஞர் எனும் அடையாளம் அவர் இருவருக்கே பொருந்தும். குளிர்ந்த தென்றல் பூக்களையும் சேர்த்து வீசுவது போன்ற‌ தமிழ் அவருடையது, வாழ்வின் அனைத்து பக்கங்களுக்கும் பாடியவர், எல்லா மதங்களுக்கும் செய்யுள் அமைத்தவர். இன்றும் மலேசிய சிங்கப்பூர் நாடுகளை காணுங்கள், உங்கள் காதில் “அக்கறை சீமை அழகினிலே மனம் ஆடகண்டேனே..” பாடல் தானாக ஒலிக்கும். அரசியலநிலைய பாருங்கள் “ஊதுபத்திக்கும் பீடிகளுக்கும் பேதம் புரியல” எனும் வரிகள் காதில் […]

இலங்கையின் தந்திரம் மகா நுட்பமானது

  என்ன சொல்லுங்கள், இந்த இலங்கையின் தந்திரம் மகா நுட்பமானது புலிகளை ஒழிக்க அமெரிக்காவின் உதவி தேவைபட்டபொழுது நெருங்கினார்கள், அமெரிக்காவும் நிரம்ப உதவியது. ரசாயாண ஆயுத சிக்கல்,போர்குற்றம் வராமல் இலங்கையினை காத்துகொண்டதில் அமெரிக்க பங்கு அதிகம் எப்படி நெருங்கினார்கள் என்றால் 1991ல் வளைகுடா போரின்பொழுது இந்தியவிமான நிலையத்தில் அமெரிக்க விமானங்களுக்கு எரிபொருள் வழங்கியதை ராஜிவ் கண்டிக்க அது தடைபட்டது அப்பொழுது “பிளிஸ் கம் ஹியர்” என வலிய அழைத்து எரிபொருள் கொடுத்தது இலங்கை அப்பொழுது கைகேயி போல […]

நோபல் இலக்கியத்திற்கான பரிசு இந்த ஆண்டு வழங்கபடாதாம்

நோபல் பரிசில் இலக்கியத்திற்கான பரிசு ஒன்றும் உண்டு, அது இந்த ஆண்டு வழங்கபடாதாம் காரணம் பரிசுக்கான நபரை தேர்ந்தெடுக்கும் குழு மதுரை பல்கலைகழக நிர்மலா தேவி விவகாரம் போல பல பாலியல் புகாரில் சிக்கிகொண்டது இதனால் இந்த வருடம் விருது இல்லை என அறிவித்துவிட்டார்கள் இதனால் மனுஷ்யபுத்திரனுக்கு நோபல் இல்லை என சாரு நிவேதிதாவும், அவருக்கும் நோபல் இல்லை என்பதில் மனுஷும் மகிழ்ச்சி கொண்டிருக்கின்றனர் இருவருக்குமே நோபல் இல்லை என்பதில் ஜெயமோகனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி  

பாரதியின் தமிழ் பற்றும் , பாரதிதாசனின் தமிழ் வெறியும்…

பாரதிக்கு தமிழ்பற்று இருந்தது, அதை விட அதிகமாக தேசாபிமானம் இருந்தது   பாரதியின் தாசன் என சொல்லிகொண்டிருந்தவருக்கு தமிழ்வெறிதான் இருந்தது, அதுவரை மெல்லிய பூ எடுத்துவீசுவது போன்றிருந்த தமிழ் கவிதைகள், பாரதிதாசன் காலத்திலே கல்லெடுத்து வீசுவது போல் மாறின‌ 100% முழு தமிழ் உணர்வாளர்களுக்கு அவர் பெரும் கவிஞராக தெரிவதில் நியாயமிருகின்றது ஆனால் பாரத்திக்கு இருந்த பெரும் இந்திய அபிமானமும், பெரும் பெருமிதமும் பாரதியின் தாசன் என சொல்லிகொண்டவருக்கு சுத்தமாக இல்லை பாரதிதாசன், இந்த ஈழத்து காசி […]

ஜெயமோகனுக்கு ஓளவையார் தாசியாகிவிட்டார்

“என்னை ஏன் யாரும் கண்டுகொள்ளவில்லை? 4 பேர் காரிதுப்பினால்தானே நான் முற்போக்கு எழுத்தாளன்..” என நினைத்துவிட்டு எழுதிவிட்டார் ஜெயமோகன் பெண் கல்வி பற்றி தொடங்கி இப்படி எழுதிவிட்டார் //ஔவையார் பாணர் குலத்தைச் சார்ந்தவர். அவர்கள் விறலியராக ஆடிப்பாடுபவர்கள். அதாவது தாசிகள். ஆண்டாள் ஆலயப்பணிசெய்த உயர்குடியினர். காரைக்காலம்மையார் வணிகக்குடியினர்// வைரமுத்துவிற்கு நன்றி சொல்லிவிட்டு ஆண்டாளை உயர்குடி ஆக்கிவிட்டார், காரைக்காரலமையாரை விட்டுவிட்டார் ஆனால் ஓளவ்வையார் சிக்கிவிட்டார் ஆம், ஒளவ்வையாரை தாசியாக்கிவிட்டார் ஜெயமோகன், இனி தமிழ் உணர்வாளர்கள் தூங்கமாட்டார்கள், அவர்களுக்கு வேலை […]

உலக புத்தக விழா

உலக புத்தக விழாவாம், தலை சிறந்த புத்தகங்களை எல்லோரும் வரிசைபடுத்துகின்றார்கள் எனக்கு தெரிந்து மிக சிறந்த தத்துவ புத்தகங்களில் பைபிளின் சீராக் ஆகமும், திருக்குறளும் என்றுமே நம்பர் 1. அர்த்த சாஸ்திரம் இன்னும் சூப்பர் மாக்கிய வல்லியின் அரசியல் வழிகாட்டும் புத்தகம் மிக சிறந்தது அலெக்ஸ்டாண்டர் காலத்து குறிப்புகளை, ரோமர் காலத்து குறிப்புகளை எழுதிய அந்த அறிஞர்களின் புத்தகங்கள் அற்புதமானவை இந்தியாவினை தேடிவந்த யுவான் சுவாங், மார்க்கோ போலோ முதல் வாஸ்கோடகாமா வரை எழுதிய புத்தகங்கள் பெரும் […]

கம்பன் கழகங்கள் தமிழகத்திலும் பெருகிட வேண்டும்

மலேசியாவில் கம்பன் கழகம் உண்டு, அடிக்கடி கம்பன் புகழைபாடுவார்கள் இலங்கை கொழும்பிலும் கம்பன் கழகம் உண்டு, கம்பன் சொன்ன வாழ்வியல் நெறிகள் என வள்ளுவனுக்கு அடுத்து அவனை கொண்டாடுகின்றார்கள் ஆஸ்திரேலியா முதல் பல நாடுகளில் கம்பன் கழகமும் அவனுக்கு விழாக்களும் நடத்தபடுகின்றன‌ தமிழின் சுவையினை சாறு பிழிந்து கொடுத்தவன் என உலகெலாம் அவனை தமிழர் கொண்டாடுவது போலவே முன்பு தமிழகத்திலும் கொண்டாடியிருக்கின்றனர் எதுவரை? இந்த திராவிட அழிச்சாட்டியம் தலையெடுக்கும் வரை அவர்கள் அதுவரை கொண்டாடிய கம்பனை பழித்தார்கள், […]

ஆசான் Pa Raghavan எழுதியும் புரியாத விஷயம் ஏதுமில்லை

எப்பொழுதும் யாராவது ஒரு தொடர் எழுதுவார்கள், பத்திரிகை உலகில் அது சகஜம் ஆனால் தினமணியில் Pa Raghavan புதிதாக ஒரு தொடர் எழுதுகின்றார், விஷயம் ஆன்மீகம் துறவு தத்துவம் பற்றியது. உண்மையில் இந்து மத தத்துவம் மிக உயர்ந்தது, ஆழமிக்கது. துறவு என்பதற்கும் ஆன்மீகம் என்பதற்கும் அது வகுத்திருந்த எல்லையும் ஆழமும் உயரமும் பெரிது சிக்கல் என்னவென்றால் யாரும் பாமரருக்கு புரியும் வகை சொல்லவில்லை எமக்கும் துறவில் ஆசை இருந்தது. ஆனால் கத்தோலிக்க திருச்சபை ஒரே மகனை ஏற்காது என்றார்கள். […]

சென்னை புத்தக கண்காட்சி 2018

சென்னையில் புத்தக கண்காட்சி நடக்கின்றது, புத்தகம் என்பது மனிதனை செதுக்கும் விஷயம், அந்த சம்பவங்கள் காட்சிகளுக்குள்ளே உங்களை அழைத்து செல்லும். புத்தகம் படிக்க படிக்க சிந்தனை பெருகும், இந்த உலகமே உங்களுக்கு ஒவ்வொரு நாளும் புதிதாக படும், வாழ்வு போரடிக்காது ஒரு நல்ல‌ புத்தகம் வாசிப்பது என்பது பலநூறுபேரிடம் மனதுவிட்டு பேசுவதற்கு சமம், அவ்வளவு அனுபவத்தை கொடுக்கும் நல்ல புத்தகம் போல தோழனுமில்லை, மனதிற்கு மருந்துமிலை, மகிழ்வுமில்லை வழிகாட்டியுமில்லை சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சி, தமிழகம் அறிவார்ந்த […]