கவிராயர் “உடுமலை நாராயண கவி”

ஏகபட்ட சமஸ்கிருத வார்த்தைகள், தெலுங்கு கீர்த்தனைகள் மிகுந்திருந்த தமிழ் திரைபாடல்களின் காலத்தில், எளிய தமிழ் பாடல்களை கொடுத்து பெரும் திருப்பம் கொடுத்தவர் அவர். பாரதியாரின் நண்பர், அதனால் பாரதி போலவே நாட்டுபற்றும், சமூக விழிப்பு பாடல்களும் எழுதினார் கலைவாணருக்கும் அவரே குருநாதர், கலைவாணரின் புகழ்பெற்ற கிந்தனார் நாடகத்தின் பாடல் எல்லாம் இவர் எழுதியது அண்ணாவின் வேலைக்காரி, கலைஞரின் பராசக்தி என உடுமலை நாராயணகவியின் பாடல்கள் பிரசித்திபெற்றது திராவிட இயக்கத்தின் கருத்துக்களை முதன் முதலில் பாடலில் கொண்டுவந்தவர் அவரே, […]