பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பாலஸ்தீனம் மறுபடி எரிகின்றது

கொஞ்ச நாளாக அமைதியாக இருந்த பாலஸ்தீனம் மறுபடி எரிகின்றது பாலஸ்தீன கிராமங்கள் கிட்டதட்ட 500 கிராமங்களை 1967 போரில் இஸ்ரேல் அபகரித்தது, அது முதல் ஒவ்வொரு ஆண்டும் அதை நினைவு கூர்ந்து பாலஸ்தீனியர் ஆர்ப்பாட்டம் செய்வர் இம்முறை அந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேலிய ராணுவம் சுட்டு 16 பாலஸ்தீனியர் மாண்டாயிற்று கிறிஸ்தவர்களுக்கு பெரிய வெள்ளி என்பது யூதருக்கு பெரும் பண்டிகை, பாஸ் ஓவர் என்பார்கள். அந்த கொண்டாட்டத்தில்தான் இக்கொடுமை நிகழ்ந்திருக்கின்றது இம்மாதிரி மக்கள் பேரணிகளை அவர்களுக்கு சொல்லி கொடுத்தவர் […]

பெட்ரோல் விலை திடீர் விலையேற்றம்

இந்த டிரம்ப் என்பவர் சீன இரும்பு இறக்குமதிக்கான வரியினை உயர்த்தினார் அல்லவா, அதன் தாக்கம் என்னாயிற்று என்றால் எங்கோ போயிற்று அதாகபட்டது சீனா பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியினையும் அதிகரித்துவிட்டது என் பொருளுக்கு நீ வரியினை உயர்த்தினால், உன் பொருளுக்கு நான் உயர்த்தமாட்டேனா என பதிலுக்கு செய்தாயிற்று இது உலக அரங்கில் பதற்றத்தை ஏற்படுத்த, என்னாகுமோ என அஞ்சிய பெட்ரோல் உற்பத்தி நாடுகள் குழப்பத்தில் உற்பத்தியினை குறைத்துவிட்டன‌ அதன் விளைவாக பெட்ரோல் விலை திடீர் விலையேற்றம் […]

ஆட்டிசம் எனும் மன இறுக்கம்

ஆட்டிசம் எனும் மன இறுக்கம் என்பது சில குழந்தைகளை பாதிக்க கூடியது, இவர்கள் வித்தியாசமாக இருப்பார்கள், நாம் சொல்வதை சரியாக புரிந்துகொள்ள அவர்களால் முடியாது, அவர்களை புரிந்துகொள்ளவும் நம்மால் முடியாது திடீரென சிரிப்பார்கள், கத்துவார்கள், மகா அமைதி ஆவார்கள், மெதுவாக காரியங்களை செய்வார்கள் நிச்சயம் இயல்பான மனிதர்களோடு அவர்கள் பழக முடியாது. உண்மையில் “அஞ்சலி” படத்து குழந்தை கதை கூட ஆட்டிசம் கதைதான், மன இறுக்கம் எனும் ஆட்டிசம் என்பதை அதனை விட எளிதாக சொல்ல முடியாது […]

அதி தீவிர ஆயுத சண்டை அமெரிக்காவிற்கு ரஷ்யாவிற்கும் தொடங்கியது

இங்கே நடக்கும் பாஜக தமிழக கட்சிகள் சண்டையினை விடுங்கள், அதி தீவிர ஆயுத சண்டை அமெரிக்காவிற்கு ரஷ்யாவிற்கும் தொடங்கியாயிற்று மிக வேக ஏவுகனைகளை தாங்கள் தயாரித்ததாக ரஷ்யா சொல்ல, ஏவுகனையோ விமானமோ எவ்வளவு வேகம் என்றாலும் லேசர் கதிர்களால் தாக்கி அழிக்கும் நுட்பம் எங்களிடம் உண்டு என காட்டியது அமெரிக்காவின் பெண்டகன் இப்படி பெண்டகன் அறிவித்த இரு நாட்களில் தன் மாபெரும் ஆயுதமான சாத்தானை அறிமுகபடுத்திவிட்டது ரஷ்யா ஆம் சர்மாட் ரக ஏவுகனைகளை மேம்படுத்தி சாத்தான் வெர்சன் […]

துபாய் இளவரசி தப்பி திரிந்தது உண்மை

துபாய் அரசர் என்னதான் தன்னை முற்போக்களாராக காட்டி கொண்டாலும் இன்னும் கட்டுபெட்டிதனத்திலே இருக்கின்றார் என சொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தாயிற்று ஆம் அந்நாட்டு இளவரசிக்கு பல கட்டுபாடுகளை விதித்திருகின்றார், இளவரசியோ சிட்டுகுருவி மனநிலையில் உள்ளவர் இது ஒரு கட்டத்தில் வீட்டு காவலாகியிருக்கின்றது அதாவது சின்ன தம்பி குஷ்பு போல இளவரசி சிறைபட்டிருக்கின்றார், அதிலிருந்து தப்பி இளவரசி செய்ததுதான் அதிரடி படகில் தன் நண்பர்களோடு தப்பி இந்தியா வந்திருக்கின்றார், கோவா அருகே அது பாகிஸ்தான் தீவிரவாத படகு என […]

மனிதனின் விண்கலம் பூமியினை மிரட்டுவது ஒன்றும் புதிதல்ல

உலக வல்லரசு ஆக வேண்டுமென்றால் தரையில் மட்டும் ஆக்கிரமிப்புகளை செய்தால் போதாது, விண்வெளியிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் இதனை முதலில் தொடங்கி வைத்தது சோவியத் ரஷ்யா, அவர்கள் விண்வெளி அறிவு பெற்றால் நிச்சயம் அமெரிக்காவினை நொறுக்குவர் என உணர்ந்த கென்னடி அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட முழு ஒத்துழைப்பு வழங்கினார் அன்று ரஷ்யாவின் வளர்ச்சி அமெரிக்காவினை நொறுக்கும் அளவில் இருந்தது, அன்றே ஸ்டார் வார் எனப்படும் விண்வெளி யுத்ததிற்கு ரஷ்யா தயாராக இருந்தது கென்னடி கொஞ்சமும் சளைக்காமல் […]

அரசியலுக்கு பல முகம் வேண்டும்

அரசியலுக்கு பல முகம் வேண்டும் அதுவும் உலக அரசியல் வல்லரசு என்றால் அது உலகை மிரட்ட ஒரு முகமும், உலகில் சமாதானம் பேச இன்னொரு முகத்துடனும் அலைய வேண்டும் அமெரிக்கா இதில் பயங்கரமான பயிற்சி பெற்ற நாடு, நார்வே தூது குழு என அமைதி முகம் , இஸ்ரேல் எனும் பயங்கர முகம் என பல அரசியல் செய்யும் நாடு உலக வல்லரசு என்ற பெரும் கனவில் உள்ள சீனாவிற்கும் இந்த தந்திரம் பிடிபட்டுகொண்டது, வடகொரியா தன் […]

மேற்காசியாவில் சனி பிடிக்க போகும் நாடுகளில் துருக்கியும் ஒன்று

இனி மேற்காசியாவில் சனி பிடிக்க போகும் நாடுகளில் துருக்கியும் ஒன்று முதலாம் உலகப்போருக்கு முன்னரான 400 ஆண்டுகளின் வரலாற்றை நிர்ணயித்த நாடு துருக்கி, ஆட்டோமான் சாம்ராஜ்யமும் அதன் பெரும் பலமும் மகா ஆச்சரியமானவை வாஸ்கோடகாமாவும், கொலம்பஸும் கடலில் திரிந்ததற்கு முதல் காரணம் துருக்கி, அவர்கள்தான் நிலவழி பாதையினை ஐரோப்பியருக்கு அடைத்தார்கள் நெப்போலியனால் கூட அவர்களை வெல்லமுடியவில்லை, எதிர்க்கவே தயங்கினான் அப்படிபட்ட துருக்கி முதலாம் உலகப்போருக்கு பின் சரிந்து பரிதாபமாகி பின் ஐரோப்பாவின் நோயாளி என பரிகசிக்கபட்டும் பின் […]

வட கொரியா அதிபர் சீனா விஜயம்…

அமெரிக்க உளவுதுறைக்கு சவால் விடும் விஷயம் ஒன்றை வடகொரிய அதிபர் செய்திருக்கின்றார் இதுவரை பெரும் உளவு தகவல்களை அமெரிக்காவால் வடகொரியாவில் இருந்து பெறமுடியவில்லை, காரணம் வடகொரியாவின் இரும்புதிரை அப்படி இப்பொழுது சீனாவிற்கு வடகொரிய அதிபர் செல்லலாம் என செய்திகள் வருகின்றன‌ பொருளாதார தடை இன்னபிற விஷயங்களால் சீனாவால் அவரை பகிரங்கமாக அழைக்க முடியாது என்பதால் ரகசியமாக அழைக்கின்றது என்கின்றார்கள் பொதுவாக வடகொரிய அதிபர் ஈழத்து பிரபாகரன் போன்றவர் , எங்கும் செல்லமாட்டார் இப்பொழுது சென்றாக வேண்டிய காரணம் […]

எப்பொழுதும் எந்த யுத்த செய்தியும் அரேபியாவிலிருந்து வரலாம்.

வடகொரிய அமெரிக்க யுத்தம் தவிர்க்கபட்டாயிற்று, எத்தனை சீன ஹெலிகாப்டர்கள் இந்தியாவில் பறந்தாலும் இந்தியா எச்சரித்துகொண்டே இருக்குமே தவிர யுத்தம் வராது பிரிட்டனும் ரஷ்யாவும் முறுக்கினாலும் ரஷ்யாவுடன் மோத பிரிட்டன் நிச்சயம் யோசிக்கும் இப்படிபட்ட நிலையில் உலகில் யுத்தம் இனி வராதா என்றால் மாபெரும் யுத்தம் அரேபியாவில் வெடிக்கும் சாத்தியம் உள்ளது வளைகுடா நாடுகளில் இப்பொழுது முரட்டு நாடு ஈரான். ஈரானிய புரட்சிக்கு பின்பு அதற்கு பெரும் சிம்ம சொப்பணமாக விளங்கியவர் சதாம் உசேன் சதாமின் வீழ்ச்சிக்கு பின் […]