பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நியூசிலாந்து துப்பாக்கி சூடு

நியூசிலாந்து துப்பாக்கி சூடு பற்றி பலத்த சர்ச்சை வருகின்றது, இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்லமுடியும் மசூதியினை தாக்கியிருகின்றார்கள், பல இஸ்லாமியர் கொல்லபட்டிருக்கின்றார்கள் இப்போதைய இறந்தோர் எண்ணிக்கை 30 இது வேறு ஏதும் தகறாறா? இல்லை மத ரீதியான தாக்குதலா என்பதை நியூசிலாந்து இன்னும் சொல்லவில்லை மாறாக கைது செய்யபட்டவன் ஒரு ஆஸ்திரேலியன் என்றுமட்டும் சொல்லிகொள்கின்றது அவர்கள் சொல்லவருவது என்னவென்றால் இது வெளிநாட்டு தீவிரவாதிகள் அல்ல, ஆஸ்திரேலியன் ஆஸ்திரேலியன் என திரும்ப திரும்ப சொல்கின்றது நியூசிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் அவ்வளவு பொருந்தாது […]

சீனா விவகாரம்

சீனா விவகாரத்தில் ராகுல் மோடியினை சீண்ட, மோடி கும்பல் ராகுலை இழுத்து வைத்து கேள்வி கேட்கின்றது என்ன கேட்கின்றார்கள், “சீனாவிற்கு ஐநா சபையில் அந்தஸ்து வாங்கி கொடுத்ததே நேருதானே, அவர்தான் சிக்கலுக்கு முழு காரணம்” என பொங்க தொடங்கிவிட்டார்கள் எல்லா சிக்கலுக்கும் அந்த காலகட்டத்தை பார்க்க வேண்டும், கோரி முகமது காலத்தில் ஏன் மிராஜ் விமானங்கள் பாவிக்கபடவில்லை என்றால் அது அர்த்தமற்றது அக்காலம் கொடுமையானது, இந்தியா சுதந்திரமடைந்த புதிது, வறுமையும் இன்னும் ஏராளமான சவால்களும் இங்கு இருந்தன‌ […]

பூமி அதிர்ச்சியினை விட கொடிய அதிர்ச்சி

நேற்று காலை பூமி அதிர்ச்சியினை விட கொடிய அதிர்ச்சி நடந்தது, விஷயம் இப்பொழுதுதான் வெளிவருகின்றது ஆம் நேற்று காலை முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் சில சமூக ஊடகங்கள் இயங்கவில்லை, அதற்கு முன்பே வாட்சப்பில் சிக்கல் என்கின்றார்கள், நாம் அதிகாலை கனவில் தலைவி குஷ்பு பிரதமராக பதிவியேற்கும் வைபவத்தில் இருந்ததால் அது தெரியவில்லை ஆனால் முகநூலில் உணர்ந்தோம், நுழையமுடியவில்லை இன்னும் பலர் முகத்தில் சாணியடித்தது போல் அலைந்தார்கள் அட்மின் அங்கும் இங்கும் ஓடிகொண்டிருந்தான், எல்லோர் முகத்திலும் கவலையின் ரேகைகள், ஆயிரம் […]

போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள்

தொடர்ந்து போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் விபத்துக்குள்ளாவதால் பல நாடுகள் அதை தற்காலிக தடை செய்திருக்கின்றன‌ சீனா , சிங்கப்பூர் என பல நாடுகள் அதை தடை செய்தாயிற்று, ஆனால் அமெரிக்காவில் இன்னும் தடை விதிக்கபடவில்லை இந்த நாம் தமிழர் கட்சி போல அந்த மேக்ஸ் 8 ரக விமானங்கள் அறிமுகபடுத்தபட்டதில் இருந்தே சிக்கல்தான், சில பல சர்ச்சைகளில் சிக்கி, விபத்திலும் சிக்கி பல நூறுபேர் உயிரையும் அது குடித்துவிட்டது போயிங், அனட்டோவ், ஏர்பஸ், […]

வருகின்றது ஈரான்

கூட்டத்தில் வசமாக சிக்கிவிட்ட ரவுடியினை முதலில் யார் அடிப்பது என்பதுதான் சிக்கல் , முதல் அடி ஒருவன் அடித்துவிட்டால் தன் பின் கூட்டம் சரமாரியாக பின்னி எடுக்கும் அப்படி பாகிஸ்தான் எனும் ரெவிடியினை இந்தியா முதலில் அடிக்க, ஓடி வருகின்றது ஈரான் இந்தியாவினை போலவே ஈரான் மேலும் வம்பிழுத்தனர் அங்கு இருக்கும் பாகிஸ்தான் கோழியின் தீவிரவாத குஞ்சுகள் இந்தியா அடித்ததை தொடர்ந்து எப்பொழுதும் ஈரான் தாக்கலாம் என்ற மிரட்டலும் வந்திருகின்றது ஈரானே யாரை நொறுக்கலாம் என ஒருமாதிரி […]

சாக்கோஸ் தீவுகள்

இந்தியாவில் புறம்போக்கு நிலமெல்லாம் அரசியல்வாதிக்கு என்பது போல உலகில் புறம்போக்கு நிலமெல்லாம் ஒரு காலத்தில் பிரிட்டனுக்கு புறம்போக்கு நிலமென்றால் கடலில் உள்ள பெரும் ஆளில்லா தீவுகளும் அடக்கம், அப்படி ஒரு காலத்தில் வளைத்து போட்டிருந்தது பிரிட்டன். இந்தியா போன்ற நாடுகள் சுதந்திரமடைந்தாலும் பல தீவுகளை தங்களுக்கு சொந்தம் என சொல்லி வம்பு செய்வது அவர்கள் பாணி அர்ஜெண்டினா அருகே உள்ள தீவு முதல் பல தீவுகளில் சர்ச்சை செய்வார்கள். சில தீவுகளை விழுங்குவார்கள், அப்படி விழுங்கபட்டதுதான் இலங்கைக்கு […]

கிரெம்ளின் பகிரங்க மிரட்டல்

ஐரோப்பாவில் ரஷ்ய எல்லையில் ஏவுகனை தளம் அமைத்து ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் நெடுநாளைய கணக்கு அப்படி ஒரு அறிவிப்பினையும் 1990களின் இறுதியில் செய்தது, சில நேரங்களில் அது வேகமும் எடுக்கும் புட்டின் வந்து ஆட ஆரம்பித்தபின் அமெரிக்கா அதில் சுணங்கியது, புட்டீனின் சிரிய நடவடிக்கை ராணுவ ஒத்திகை, நவீன ஏவுகனை ஒத்திகை என பல மிரட்டல்கள் வந்தபின் அமெரிக்கா மவுனம் காத்தது இப்பொழுது ஐரோப்பாவில் ஏவுகனை சிஸ்டம் பொருத்தும் திட்டமில்லை என அமெரிக்கா […]

சீன பாரம்பரியம்

சொந்த ஊரில் இருந்து சிலமைல் தள்ளி சென்றாலே தன் பாரம்பரியத்தை மறப்பவன் தமிழன், ஆனால் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் தன் பாரம்பரியத்தை இழுத்து செல்வதில் சீன இனம் தன்னிகரற்றது அப்படி சீன புத்தாண்டை கொண்டாடுகின்றார்கள், சந்தேகமில்லை அக்காலத்தில் பொங்கல் விழா தமிழகத்தில் 1 மாதம் கொண்டாடபடும் என்பார்கள் அல்லவா அப்படி அவர்கள் புத்தாண்டும் கிட்டதட்ட 1 மாதம் இழுக்கும் 1 மாதமென்றால் முழுக்க அல்ல மாறாக முக்கிய நேரங்களை கொண்டாடுவது தமிழருக்கு காணும் பொங்கல் என்றொரு […]

வெனிசுலா

சில நாட்களுக்கு முன்பு தி இந்து தமிழ் பத்திரிகையில், “வாழும் போதே நரகமாகும் வெனிசுலா” என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் முழுக்க படு அபத்தமான கட்டுரை அது, அங்கிள் சைமனின் பிதற்றலுக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல அது அப்படி ஒரு முழு பொய்யும், உளறலும் ஆகும் தென்னமெரிக்கா பற்றியோ அங்கு நிலவும் அரசியல் பற்றியோ லத்தீன் கத்தோலிக்க பிரிவினை கிறிஸ்தவ அரசியல் பற்றியோ கொஞ்சமும் ஞானமில்லாதவர் அந்த எழுத்தாளர் சாவேஸ் என்பவர் எப்படி உருவானார்? […]

காக்னிசென்ட் – லஞ்சம்

காக்னிசென்ட் எனப்படும் அமெரிக்க நிறுவணம் சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் சென்னையில் கட்டபட்ட கட்டங்களுக்கு தடையில்லா சான்றிதழ் பெற லஞ்சம் கொடுத்திருக்கின்றதாம் விஷயம் அமெரிக்க நீதிமன்றத்தில் பற்றி எரிகின்றது, தமிழகத்தில் முறைகேடில் ஈடுபட்டது என அமெரிக்காவில் விவகாரம் விஸ்வரூபமாகின்றது இதுதான் வாய்ப்பு விட கூடாது என திமுக வரிந்து கட்டுகின்றது, பெரும் ஆதாரங்களோடு களத்திற்கு வருகின்றார் ஸ்டாலின் ஆனால் அதே விஷயம் இவர்கள் பக்கம் திரும்பும் என்பதை ஏனோ மறக்கின்றார் ஆம் இந்த சர்ச்சை நடந்தது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications