பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வடகொரிய அதிபருக்கு ராக்கெட் விடுவதும், அணுகுண்டு வெடிப்பதும் வாடிக்கையாகிவிட்டது

தமிழிசை விடும் அறிக்கை போல வடகொரிய அதிபருக்கு ராக்கெட் விடுவதும், அணுகுண்டு வெடிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. அதனை காட்டி அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிப்பது அவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது பொருளாதார தடையில் பல வகை உண்டு. பாயாசத்திற்கு முந்திரி தரமாட்டோம் என தொடங்குவார்கள் அதன் பின் சேமியா, ஜவ்வரிசி என தடைபோடுவார்கள், இறுதியில் அடுப்பெரிக்க விறகு தரமாட்டோம் எனும் நிலைக்கு சென்றுவிடும் வடகொரியாவின் பொருளாதார தடையும் அந்த அடுப்பை அணைக்கும் நிலைக்கு சென்றாயிற்று, எரிபொருள் தடை வடகொரிய கப்பல்கள் நகர […]

கெத்தாக திரிகின்றார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிர்ப்புகள் வலுக்கின்றன, எப்படியாவது அவரை விரட்டவேண்டும் என ஏராளமான புகார்கள் அப்படி ஒரு பெண்ணும் சொல்லிவிட்டார், “டிரம்ப் என்னை கையினை பிடித்து இழுத்தார்” அதாவது முன்பொரு காலத்தில் டிரம்ப் அந்த அம்மணியிடம் தன் விருப்பத்தை சொன்னாராம், அதனை இப்பொழுது சொல்கின்றார் அந்த புருக் ஷீல்ட் டிரம்ப் கிளிண்டன் பட்டபாட்டினை அறிந்திருக்கின்றார், அதனால் பொய் சொல்லவில்லை மாறாக‌ கூடுதலாக தமிழ் சினிமா பார்ப்பாரோ என்னவோ வடிவேலு ஸ்டைலில் போட்டு தாக்கிவிட்டார் “ஒரு இளைஞன் ஒரு […]

ஜெர்மானியர்கள் தடையாக இருந்த சுவரை இடித்தார்கள் இணைந்தார்கள்

இரண்டாம் உலகபோரில் பெரும் தோல்வி கண்டது ஜெர்மனி, அதன் பின் இரு நாடுகளாக பிரியும் படி கத்திவீசபட்டது. மேற்கு ஜெர்மன், கிழக்கு ஜெர்மன் என பிரிக்கபட்டது. ஒன்றிற்கு அமெரிக்காவும் இன்னொன்றிற்கு சோவியத்தும் பொறுப்பேற்றன‌ பிரமாண்ட பெர்லின் சுவரும் கட்டபட்டது மேற்கில் முதலாளித்துவமும், கிழக்கே கம்யூனிசமும் கொள்கையாக்கபட்டன‌ ஆனால் மக்கள் ஜெர்மானியர்களாகவே உணர்ந்தனர், வாய்ப்புக்காக காத்திருந்தனர். சோவியத் உடைய மக்கள் எழுந்தனர் கிட்டதட்ட 45 வருட பிரிவினை இணைத்தனர், அந்த சுவரும் உடைபெற்றது வரலாற்றில் பிரிக்கபட்ட நாடு இணைந்த […]

அமெரிக்காவில் லாஸ் வேகாஸில் துப்பாக்கி சூடு : 60 பேர் பலி

இதுவரை இல்லா மிகபெரிய அளவில் அமெரிக்காவில் லாஸ் வேகாஸில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது, 60 பேர் பலி எனவும், 500 பேருக்கு மேல் காயம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முதல் காரணம் அமெரிக்க வாழ்க்கை முறை, தனி நபர் சுதந்திரமிக்க நாடு, தங்கள் மகிழ்ழ்சியே முக்கியம் என நினைக்கும் மனப்பான்மை அது. ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு காரணத்தால் விரக்தியாகி வெடித்துவிடுகின்றது. வெறுப்பை எப்படியோ காட்ட எண்ணி துப்பாக்கி தூக்கிவிட்டு பாய்ந்துவிடுகின்றார்கள் எப்படி துப்பாக்கி சரளாமக […]

‘பிளேபாய்’ நிறுவனர் ஹக் ஹெப்னர் காலமானார்

பிரபல கவர்ச்சி இதழான ‘பிளேபாய்’ நிறுவனர் ஹக் ஹெப்னர் காலமானார் அன்னார் இந்த உலகிற்கு ஆற்றிய பணி கொஞ்சமல்ல, மர்லின் மன்றோ முதல் நமது நாட்டு ஷெர்லின் சோப்ரா வரை அவர்தான் உலகிற்க்கு உணர்த்தினார். அந்த வரிசை சொல்லி மாளாது, உலகின் கவர்ச்சி கன்னிகளை எல்லாம் தேடி பிடித்து படமெடுத்து, தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் உயர்ந்த சிந்தனையுடன் வாழ்ந்தவர். வீர அஞ்சலி, கண்ணீர் அஞ்சலி எல்லாம் அவருக்கு சரிவராது, “மன்மத” அஞ்சலிதான் செலுத்த […]

ரொஹிங்கியா : நடப்பது என்ன?

ரொஹிங்கியா அகதிகள் மீது இந்தியா இரண்டாம் படுகொலைகளை நிகழ்த்துவதாக விகடன் பத்திரிகை சொல்லியுள்ளது, ஷோபா சக்தி என்பவர் எழுதியிருக்கின்றார். நடப்பது என்ன? ரோஹிங்யா இஸ்லாமியர் உலகெல்லாம் தெரித்து ஓடுகின்றனர். பல நாடுகள் அகதிகளாக அடைக்கலம் கொடுக்கின்றன அதில் ஒன்று இந்தியா. இப்பொழுது உள்ள உலக சூழலில் யார் அகதி? யார் தீவிரவாதி என்பதே பெரும் குழப்பம். அகதிகள் பெயரில் தீவிரவாதிகள் ஊடுருவது மகா எளிது. ஈழ அகதிகளோடே புலிகளும் ஊடுருவியது ஒன்றும் ரகசியமல்ல‌ இன்று சிரிய அகதிகளை […]

குர்திஸ்தானுக்கான தனிநாடு வாக்கெடுப்பு இன்று நடக்கின்றது

குர்திஸ்தானுக்கான தனிநாடு வாக்கெடுப்பு இன்று நடக்கின்றது , ஈராக்கில் குர்துகள் வாழும் பகுதியில் இது நடக்கின்றது நிச்சயம் குர்துக்கள் தனிநாட்டுக்கு வாக்களிப்பார்கள், ஆனால் உடனடியாக குர்திஸ்தான் உதித்திவிடுமா என்பதுதான் சிக்கல். எந்த நாடும் தன் நாடு உடைய அனுமதிக்காது. குர்துகள் தனிநாடு பிரகடனம் செய்தால் மறுநிமிடம் தாக்க ஈராக் ராணுவம் தயங்காது. ஈரான் போன்ற நாடுகள் குர்திஸ்தானை அங்கீகரிக்கமாட்டோம் என சொல்லியாயிற்று, துருக்கி தன் ராணுவத்துடன் ஈராக் எல்லைக்கு வந்தாயிற்று? என்ன சிக்கல்? குர்துகள் துருக்கி, சிரியா, […]

கிளிண்டன் என்றொருவர் அதிபராக இருந்தார்

முன்பு அமெரிக்காவில் கிளிண்டன் என்றொருவர் அதிபராக இருந்தார், கடந்த தேர்தலில் டிரம்பிடம் தோற்ற ஹிலாரியின் மனைவி என அறியபடுவார். அன்னாருக்கும் அவர் அதிபராக இருந்தபொழுது அவருக்கு உதவியாளராக இருந்த மோனிக்கா லெவன்ஸிக்கும் நடந்த “நித்தி சுவாமி” ஸ்டைல் விளையாட்டு அமெரிக்காவினை உலுக்கியது. முதலில் அப்படி எல்லாம் அல்ல, அவள் எதிர்கட்சியின் தூண்டில், சிக்கமாட்டான் இந்த கிளிண்டன், அப்படி ஒன்றுமே கிடையாது, வேண்டுமானால் என் கோட்டை கழற்றி போட்டு தாண்டுகின்றேன் என குதித்தார் கிளிண்டன். ஆனால் அந்த லெவின்ஸ்கி […]

ரொகிங்கியா பிரச்சினைதான் என்ன?

உலகம் முழுக்க ஏராளமான இனங்கள் உண்டு, அவைகள் எல்லாம் சில நேரம் இணைந்தோ, பல நேரம் தனியாகவோ வாழ்த்துகொண்டிருந்தன‌ அப்படி பர்மாவில் இருந்த இனம்தான் ரொகிங்யா, அது பர்மாவில் ஓர் இனம். தமிழக செட்டியார்கள் பர்மாவினை கட்டியாண்ட பொழுது, அவர்கள் ரொக்கைன் மாநிலத்தில் இருந்திருக்கின்றார்கள், அவர்களுக்கும் மொழி இன்னபிற விஷயங்கள் இருந்திருக்கின்றன‌ அதாவது சைமன் பாணியில் சொல்வதானால் அது ஒரு தேசிய இனம். அவர்களுக்கும் ஒரு காலத்தில் அரசன் எல்லாம் இருந்திருக்கின்றான், பர்மியர்களுக்கும் அவர்களுக்கும் அன்றே பொருந்தவில்லை, […]

பெட்ரோப்பிற்கு உலகம் அஞ்சலி செலுத்தி செலுத்திக்கொண்டிருக்கிறது

அந்த பெட்ரோப் அப்பொழுது ரஷ்ய ராடார் முன் அமர்ந்திருந்தார், அது 1983ம் வருடம், செப்டம்பர் 26 திடீரென அவரின் ரேடார் அமெரிக்க ஏவுகனைகள் மொத்தமாக ரஷ்யாவினை நோக்கி வருவதாக காட்டிற்று, அவர் இருந்தது மிக பொறுப்பான பதவி அதாவது அவர் சொல்வது எல்லாமே உறுதிபடுத்தபட்ட தகவலாக இருக்கும் என்பதால் அவர் சொல்லிவிட்டால் ரஷ்யா தன் பதில் நடவடிக்கையினை தொடங்கும். வருவது என்ன ரக ஏவுகனை, அணு ஏவுகனையா? சோதனையா? என அவருக்கு தெரியவில்லை, ஆனால் அவர் சொல்லவேண்டும், […]