பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பாகிஸ்தானில் எந்த பிரதமரும் 5 ஆண்டுகளை முடித்ததில்லை …

பாகிஸ்தானுக்கு ஒரு ராசி என்னவென்றால் எந்த பிரதமரும் 5 ஆண்டுகளை முடித்ததில்லை, முடிக்கும்முன் ஒன்று ராணுவம் விரட்டிவிடும் அல்லது ஏதாவது வழக்கில் சிக்கி அவர்களே சென்றுவிடுவார்கள் இதுதான் கடந்த 70 ஆண்டுகளாக நடக்கும் நிகழ்ச்சி அங்கு, அவர்கள் சாபம் அப்படி இப்பொழுது அந்த சாபம் நவாஸ் ஷெரீப்பிற்கும் வந்துவிட்டது, மனிதருக்கு நமது பன்னீர்செல்வம் ராசி போல, முன்பு இருந்தபொழுது அங்குள்ள தினகரன் முஷாராப்பால் விரட்டபட்டார், பின் முஷாரப் என்னமோ ஆகி இப்பொழுதுதான் வந்திருக்கின்றார் சிக்கல் என்னவென்றால் நாவசும் […]

பாகிஸ்தான் பஞ்சாயத்து

இளம்பெண்ணை கற்பழித்த தண்டனைக்காக குற்றவாளியின் சகோதரியினை பதிலுக்கு கற்பழிக்க உத்தரவிட்டு நிறைவேற்றிய பாகிஸ்தான் பஞ்சாயத்து : செய்தி அந்த நாட்டில் இதெல்லாம் சஜகம், எந்த சட்டமும் நவீன காலமும் அவர்களை ஒன்றும் செய்யாது, உலகிற்கு தண்டித்தோம் என சொல்லும் அரசு, ஆனால் உண்மையில் அவர்கள் அப்பகுதியில் நுழையவே முடியாது இப்படி பல பஞ்சாயத்துக்கள் அங்கு நடந்துகொண்டே இருக்கும் கர்ப்பிணி பெண்ணை எவனாவது தாக்கி கரு கலைந்தால் கூட , “டேய் உன்னால இப்படி ஆகிவிட்டது, நீயே அதற்கு […]

ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்து இன்றோடு 57 வருடம் ஆகின்றது

அதுவரை மானிட குலம் விண்வெளிக்கு பறந்ததில்லை, மனிதன் பறக்க ஆரம்பித்து 60 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் வளிமண்டலத்தை கூட அவனால் எட்டமுடியவில்லை ஹிட்லரின் உத்தரவுபடி ஏவுகனைகளுக்கான‌ இன்சினை வார்ன் பிரவுண் தயாரித்து அதனை சோதித்து கொண்டிருக்குந்த பொழுதே ஹிட்லரின் காலம் முடிந்தது ஹிட்லரின் விஞ்ஞானிகளை பங்குபோட்டு கொண்டனர் அமெரிக்காவும் ரஷ்யாவும், அதாவது பொது எதிரியினை ஒழித்தபின் அமெரிக்காவும் ரஷ்யாவும் எதிரியாயிருந்தன‌ இந்த விஞ்ஞானிகள் எல்லாம் போர்குற்றவாளிகள், சதாமின் கெமிக்கல் அலி தூக்கில் தொங்கியதை போல தொங்கியிருக்கவேண்டியவர்கள், ஆனால் வல்லரசுகள் […]

இஸ்ரேலிய நிலைப்பாடு இப்படி

அல் அக்சா மசூதியினை திறந்துவிட்டு பதற்றத்தை தணித்திருக்கின்றது இஸ்ரேல் ஆனால் கடும் சோதனைக்கு பின்புதான் பாலஸ்தீனியரை அனுமதிப்போம் என பாதுகாப்பு சோதனைகளை மிக வலுவாக்கியிருப்பதால் பாலஸ்தீனர்கள் கொந்தளிக்கின்றார்கள் சமீபத்தில் நடந்த தாக்குதல், ஐஎஸ் மிரட்டல் என பல காரணங்களை சொல்லி பாதுகாப்பினை மிக இறுக்கமாக்குகியிருக்கின்றது மிக சென்சிட்டிவான அந்த பிரச்சினையில் இப்பொழுது இஸ்ரேலிய நிலைப்பாடு இப்படி “மிகுந்த சோதனைக்க்கு ஒத்துழைத்துவிட்டு மசூதிக்குள் சென்று தொழுகை நடத்துங்கள், அல்லது ஓடிவிடுங்கள்..” இஸ்ரேலிய சோதனை எப்படி இருக்கும் என தெரிந்ததால் […]

இஸ்ரேல் ஒரு தந்திரக்கார நாடு

அணுகுண்டை விட ஆபத்தான காரியத்தில் இஸ்ரேல் இறங்கிவிட்டது, மிக மிக உணர்ச்சிகரமான அல் அக்சா விவகாரத்தில் கை வைத்துவிட்டது, உலகம் பொங்கிகொண்டிருக்கின்றது இஸ்லாமிய நாடுகள் எல்லாம் ஓரணியில் திரண்டுகொண்டிருக்கின்றன‌ அதாகபட்டது சாலமோன் கட்டிய அந்த ஆலயம், ஆபிரகாம் அல்லது இப்ராஹிம் நபி தன் மகனை பலிகொடுக்க துணிந்த இடம் எல்லாம் இருக்கும் வளாகம் பைத்துல் முகஸ்துஸ் இந்த வளாகத்தில்தான் டூம் ஆப் ராக் எனப்படும் மசூதி, யூத அழும் சுவர், அல் அக்சா எனப்படும் ஓலை மசூதி […]

இன்று உலக மக்கள் தொகை தினம்

இன்று உலக மக்கள் தொகை தினமாம் அன்றைய பிரிக்கபடாத‌ இந்தியாவின் மக்கள் தொகை லட்சங்களுக்குள் முடிந்திருக்கின்றது, அதனால்தான் மிக குறுகிய எண்ணிக்கையுள்ள வெள்ளையன் ஆளமுடிந்திருக்கின்றது பின்னர் பாரதி “முப்பது கோடி முகமுடையாள் சிந்தனை ஒன்றுடையாள்” என அகண்ட பாரதத்திலிருந்து பாடுகின்றான், அதாவது அகண்ட இந்திய மக்கள் தொகை 30 கோடி, 1920களில் பின் இந்தியா பிரிந்து நாற்பது கோடியாகின்றது, கண்ணதாசன் கூட “நால்வகை மதமும் 40 கோடி மாந்தரும் வருகின்றார்” என பாடல் எழுதுகின்றார் அப்படி இருந்த […]

ஓரளவு உண்மையினை சொல்லும் டிவி அல் ஜசீரா

கத்தாருக்கும் அரபுநாடுகளுக்கும் இடையிலான முறுகல் முற்றுகின்றது, கத்தாரின் பெரும் வருமானமான விமான சேவை பல வழிகள் சுற்றி செல்வதால் பெரும் இழப்பினை சந்திக்கின்றது, சில கோரிக்கைகளை வைக்கின்றது ஆனால் அரபு நாடுகளோ தங்கள் கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றது இறுதி எச்சரிக்கையாக 48 மணிநேர கெடு விதித்திருக்கின்றன, அந்த 13 கோரிக்கைகளில் அல் ஜசீரா டிவியினை மூடவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றன‌ இந்த உலக மீடியாக்களிலே ஓரளவு உண்மையினை சொல்லும் டிவி அதுதான், ஆப்கன் போர், பின்லேடனின் […]

அமெரிக்கா, ரஷ்யாவிற்கான அமைதி உடன்படிக்கை

சிரியாவில் நடக்கும் யுத்ததை முடிவுக்கு கொண்டுவரும் அமெரிக்கா, ரஷ்யாவிற்கான அமைதி உடன்படிக்கை நடப்புக்கு வந்தது கவனியுங்கள், யுத்தம் நடப்பது சிரியா அரசுக்கும் ஆட்சி மாற்றம் வேண்டும் என சொல்லும் குழுக்களுக்கும். ஐஎஸ் என்பது வேறு இப்பொழுது சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திடுது எங்கோ இருக்கும் அமெரிக்காவும், ரஷ்யாவும் இங்கு எங்காவது தீவிரவாதிகளை கலந்தாலோசித்தார்களா என்றால் இல்லை இப்படி ஒரு ஒப்பந்தம்தான் அன்று இந்தியா இலங்கையிடையே நடப்புக்கு வந்தது ஆனால் எங்களை கலந்தாலோசிக்கவில்லை என சொல்லி அதனை ஏற்கமுடியாது , […]

விஞ்ஞான மழை பெய்ய வைக்க மனிதனால் முடியவில்லை

இயற்கையினை மாற்றுவதில் மனிதன் வெற்றி பெற்றுகொண்டிருக்கின்றான். இயற்கை தனக்கு கொடுத்த எல்லைகளை எல்லாம் உடைத்தெறிந்து தன்னால் முடியாது எதுவுமில்லை என்று நிருபித்துகொண்டிருக்கின்றான், பலம் குறைந்த மனிதன் எந்திரங்களினால் ஆயிரம் யானை பலத்தை பெருகின்றான், மிருகங்களை விட அவனால் எந்திரத்தால் வேகமாக ஓட முடிகின்றது மீன்களை விட வேகமாக கடலை கடக்க முடிகின்றது இயற்கையினை பல இடங்களில் வென்றுவிட்டான் சூரியனை போல பெரும் வெப்பத்தை அவனால் அணுவினால் கொடுக்க முடியும், அண்டார்டிக்கா குளிரினை அவனால் அறைக்குள் உருவாக்க முடியும். […]

டிரம்பும் புட்டீனும் ஜெர்மனில் சந்தித்தார்கள்

டிரம்ப் பதவிக்கு வர ரஷ்யா உதவியது என்ற குற்றசாட்டில் டிரம்பினை பாடாய் படுத்தி விசாரிக்கின்றார்கள், அங்கு சட்டம் எல்லோருக்கும் சமம் என்பதால் டிரம்பிடம் கேள்விகள் தொடுக்கபடுகின்றன‌ பதில் சொல்லிவிட்டு வெளியே வந்த டிரம்ப் களைப்பில் சொல்லிவிட்டார், “ரஷ்யா தவிர இன்னும் சில நாடுகளும் எனக்கே தெரியாமல் இதில் விளையாடியிருக்கலாம்” இம்மாதிரி விஷயங்களில் ரஷ்யா தவிர ரிஸ்க் எடுக்கும் நாடுகளில் இஸ்ரேல் போன்ற சில உண்டு, அதனை டிரம்ப் சொல்லியிருக்கலாம் இது நமது மோடி பிரியர்களுக்கு தெரியாதவரை நல்லது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications