உலக தாய்மொழி தினம்
இன்று உலக தாய்மொழி தினமாம், அதனால் என்னரும் தாயே தமிழே என பலர் கலைஞர் பாணியிலும், எடுடா கொலை வாளை என பாரதிதாசன் பாணியிலும் பலர் முழங்கிகொண்டிருக்கின்றனர் தாய்மொழி என்பது ஒவ்வொருவருக்கும் தாயினை விட முக்கியமானது, மொழியே ஒருவனுக்கு சகலமும், மொழி வழியே அவன் உலகை அறிகின்றான், புரிகின்றான் தன் நிலை பகிர்கின்றான் தாய்மொழி ஒருவனுக்கு உயிர் சந்தேகமில்லை, ஆனால் மற்ற மொழிகளை படிப்பது ஒன்றும் தவறல்ல. தமிழகத்தில் என்ன நடந்ததென்றால் இந்தி வலுகட்டாயமாக ஆட்சி மொழி […]