பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நான் ஒரு இந்தியன், அதன் பின்பே கிறிஸ்தவன்.

டேய் தூத்துகுடியானே அந்தோணியார் படத்தை சுமக்கும் கிறிஸ்தவ இந்தியன் பிஜேபியினை ஆதரிக்க கூடாது என சொல்லி கொடுத்தது உன் ஆலய பாதிரிதானே? அவன் இடுப்பில் இருக்கும் கச்சையினை உருவி அவன் கழுத்தை நெறித்து கேள், “ஒரு இந்தியன் இப்போதைய வலுவான அரசு கொடுக்கும் பாஜகவினை ஆதரிக்காமல் இருக்க முடியுமா?, அவர்களை விட்டால் நிலையான அரசை கொடுப்பது யார்? பாஜகவால் இத்தேசம் இழந்தது என்ன, நீ இழந்தது என்ன? உன் பைபிளை பிடுங்கினானா? உன் திருப்பலியினை தடுத்தானா? ” […]

மேனேஜர், மாதா, பிதா, குரு, தெய்வம்.!

யங்மேன் சண்டே சர்ச் எல்லாம் போகாதே வீட்ல கவனமா இரு, சாப்பாட்டுக்கு எல்லாம் ஸ்டோர் பண்ணிருக்கியா ஆமா சார், சர்ச் எல்லாம் ஆண்லைன்ல தான் சார் வெரிகுட், அப்படித்தான் பொறுப்பா இருக்கணும், நாடும் சட்டமும் மக்கள் நலனும் முக்கியம்பா, கடவுள் எல்லாம் அதுக்கு அப்புறம்தான் ஆமா சார் ஒகே நல்லா நாட்டுக்காக உலகத்துக்காக பிரே பண்ணிக்கப்பா கண்டிப்பா சார், இந்தியாவுல ஒரு பழமொழி உண்டு சார் என்னப்பா? மேனேஜர், மாதா, பிதா, குரு, தெய்வம். அதாவது மேனேஜர் […]

அறை நண்பணிடம் கொஞ்சம் வம்பு

கிரிக்கெட் வெறியில் முழுக்க மூழ்கிவிட்ட அறை நண்பனை கொஞ்சம் வம்பிழுக்க வேண்டும் என தோன்றியது, கிறிஸ் கெயில் நடையினை கட்டிய அந்த சோகமான நொடிதான் அதற்கு சரியான தருணம் அப்பொழுது மெதுவாக சீண்டினோம் “டேய் சென்னையில் குடிநீர் பஞ்சம், உங்க தளபதி போராடாமல் சிங்கப்பூர் போயிட்டாராமே ஏன்?” அவ்வளவுதான் ரோகித் சர்மாவாக பொங்கிவிட்டான் “அண்ணாச்சி என்ன பேசுதியரு? இன்னும் 1 மாசத்துல ஆட்சி கவிழ்ந்து அவர் முதல்வராக போறாரு.. வந்த உடனே தமிழ்நாட்டை அமெரிக்காகவும் சென்னையினை சிங்கப்பூராக […]

அனைவருக்கும் நன்றி

மகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்தும் ஆசியும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி நமது பட்டியலில் எல்லா வயது அன்பர்களும் உண்டு, அதில் வாழ்த்தியோருக்கு நன்றி, ஆசீர்வாதம் வழங்கிய பெரியவர்களுக்கு சிரம் தாழ்ந்த‌ வணக்கம். உங்கள் வாழ்த்துக்களில் அவன் உயரட்டும், தகப்பன் போல அல்லாமல் அவனாவது உருப்படட்டும் அவனது பெயர் “Miguel Shimon” என்பது, “Alphonse Rajan” என்பது தந்தையின் பெயர். நான் அவனை அந்த பெயரில்தான் அழைத்து கொண்டிருக்கின்றேன் மறுபடியும் அனைவருக்கும் நன்றி… அவனுக்கு விவரம் தெரியவரும்பொழுது உங்கள் எல்லோரையும் […]

நாம் தரம் தாழ்ந்துவிட்டோமா?

ஒரு சில பதிவுகளை கடக்க முடிந்தது, அதில் நாம் லைக் என்பதற்காக எழுதுகின்றோம் என்றும் தரம் தாழ்ந்துவிட்டோம் என்றெல்லாம் சொல்லிகொண்டிருக்கின்றார்கள் முகநூல் என்றால் என்னவென்றே அறியாத காலங்களை திரும்பி பார்க்கின்றேன், அன்று நான் மட்டும்தான் இருந்தேன் இத்தனையாயிரம் பேர் வருவார்கள் என்றோ, இவ்வளவு நண்பர்கள் கிடைப்பார்கள் என்றோ எண்ணி கீபோர்டை தட்டவில்லை எமக்கு எது நியாயமோ? எது மனதை பாதித்ததோ? எது நாட்டுக்கான விஷயமோ அதைத்தான் சொன்னோம், எம் போக்கில் எழுதி கொண்டே இருந்தோம் திரும்பி பார்த்தால் […]

தந்தைக்கு கல்லறை

தந்தைக்கு கல்லறைகட்டியாகிவிட்டது, ஆக அவருக்கு மகனாக செய்ய வேண்டிய கடைசி கடமையினையும் முடித்தாயிற்று. பெரும் துயரமே, ஆனால் அந்த விதிக்கு யார் தப்ப முடியும்? ஆனால் அலெக்ஸ்டாண்டர் , செங்கிஸ்கான் போன்ற மாமன்னர்களுக்கு கல்லறையே இல்லா உலகில் என் தந்தைக்கு கல்லறையாவது கிடைத்திருக்கின்றது, அந்த அளவிற்கு அவர் பாக்கியசாலி பிடித்தமானவர்களுக்கு கல்லறை கட்டும்பொழுதுதான் ஷாஜகானின் மனம் புரிகின்றது, அவனுக்கு இருந்த செல்வத்தில் அவனால் அதை செய்யவும் முடிந்திருக்கின்றது என்ன வாழ்வு இது? அவர் பிரிந்துவிட்டார், அவர் மரணித்த […]

எது நியாயம் என மனதிற்கு படுமோ அதை எழுதுவோம்

நாம் ஒரு இந்தியன், ஒரு இந்தியனாக இந்நாடு நன்றாயிருக்க வேண்டும் என்பதே எம் நிலைப்பாடு மற்றபடி கட்சி அபிமானம் ஏதுமில்லை, இங்கு சுத்தமான அரசியல் கட்சி என ஏதுமில்லை அப்படி இருக்கவும் முடியாது பரந்த இந்திய வானமும் கடலும் இருக்கும்பொழுது குறுகிய கட்சி வட்டத்துக்குள் நிற்பது ஒருவித சிறை, ஒருவித கட்டுப்பாடு அது எமக்கு சரிவராது. இங்குள்ள யதார்த்த நிலைக்கு 100% சுத்தமான ஆட்சியினை யாரும் கொடுக்கவும் முடியாது எல்லா கட்சிக்கும் நல்ல பக்கங்களும் உண்டு, மோசமான […]

எம் வோட்டு

விவசாயிகளின் சிக்கல் என்பது வேறு, அதை தாழ்மட்டத்திலிருந்து வந்த, விவசாய போராட்டங்களை முன்னெடுத்த ஒருவராலயே புரிந்துகொள்ளமுடியும் நங்கவரம் விவசாயிகளுக்கான போராட்டமே கலைஞர் கருணாநிதியினை தமிழகம் அடையாளம் கண்டு திரும்பி பார்க்க வைத்த போராட்டம் விவசாயிகளின் வலியினை அவரால் அன்றே உணரமுடிந்தது, அதில் உதித்த உயர்ந்த சிந்தனைதான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உட்பட பல திட்டங்கள் ஆம் அவர்தான் தொடங்கி வைத்தார் இன்று பழனிச்சாமியும் மோடியும் சில ஆயிரங்களை கொடுக்க முன்வந்திருப்பது மேலோட்டமாக நலதிட்ட உதவி என்றாலும் பின்னாளில் […]

இந்து மதத்தின் விரோதியா?

“இந்து மதத்தின் விரோதி என்று என்னைப் பார்த்துச் சொல்வார்கள். அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன் பா.ஜ.கவை எதிர்ப்பது என்பது வேறு, இந்து மதத்தை எதிர்ப்பது என்பது வேறு. இந்திய நாட்டை நாசமாக்கிய நரேந்திர மோடியை எதிர்ப்பது இந்து மதத்தை எதிர்ப்பது ஆகாது. பாரதிய ஜனதா காரர்கள் இந்து மதத்தைக் குத்தகைக்கு எடுத்தவர்கள் அல்ல. நாட்டையும், நாட்டு மக்களையும் பதற்றத்தில் வைத்து, தனது அரசியல் லாபங்களை அடைய நினைக்கும் பா.ஜ.கவைத் தான் நாம் எதிர்த்து கொண்டிருக்கிறோம்” இப்படி மிக சரியாக […]