பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கலைஞர் இறந்ததை சில ஈன ஈழதமிழர்கள் வரவேற்கின்றார்களாம்

கலைஞர் இறந்ததை சில ஈன ஈழதமிழர்கள் வரவேற்கின்றார்களாம் அட பதர்களா யாழ்பாணம் நாறிகொண்டிருக்கின்றது, நடக்கும் அழிவுகளுக்கும் அசிங்களுக்கும் கட்டுகடங்கா கொள்ளைகளுக்கும் அளவே இல்லை அதை பற்றி கவலைபடுவதை விட்டு, அடுத்த நாட்டில் ஒரு மாநில தலைவன் சாவதையா பார்த்துகொண்டிருப்பீர்கள்? கேட்டால் பிரபாகரன் தாயை கலைஞர் பார்க்கவில்லையாம் ஏண்டா நாதாரிகளா, நீங்கள்தான் லண்டன், பிரான்ஸ், கனடா என இருக்கின்றீர்கள் அல்லவா? அழைத்து வைத்து பார்த்தால் என்ன பன்னாடை கூட்டமே நன்றி கெட்ட ஈன கூட்டமே லட்சகணக்கான ஈழமக்கள் அகதிகளாய் […]

கலைஞர் மெரீனாவில் அடக்கம் செய்ய இடமளிக்கும் சர்ச்சை நீடிக்கின்றது

கலைஞர் மெரீனாவில் அடக்கம் செய்ய இடமளிக்கும் சர்ச்சை இன்னும் நீடிக்கின்றது முன்னாள் முதல்வருக்கு எல்லாம் அடக்கம் செய்ய அனுமதிக்கலாமா? அப்படியானால் மெரீனா சுடுகாடு ஆகிவிடாதா என்றெல்லாம் வரிந்து கட்டுகின்றார்கள் இது எல்லா முதல்வர்களுக்கும் என எப்படி பொருந்தும், நெடுஞ்செழியன், ஜாணகி எல்லாம் அங்கு வந்தார்களா? வரமுடியுமா? அங்கு நடந்த முதல் தவறு ராமசந்திரனை அடக்கம் செய்தது இரண்டாம் தவறு குற்றவாளி ஜெயலலிதாவினை அடக்கம் செய்தது கலைஞர் என்பவர் முதுபெரும் தலைவர், யாருக்கும் இல்லா சிறப்பு தகுதி அவருக்கு […]

திருகுவளை நாயகனே திராவிட தலைமகனே

திருகுவளை நாயகனே திராவிட தலைமகனே காரிருள் நீக்கவந்த கலைவான சூரியனே தமிழளந்த திருகுமரா தமிழர் மருத்துவனே தமிழரை கதற‌வைத்து கண்மூடி விட்டாயோ ஓய்வரியா சூரியனே ஒப்பற்ற பெரும்பிறப்பே காய்ந்திருந்த தமிழருக்கு வான்மழையாய் வந்தவனே வாய்திறந்த போதெல்லாம் தமிழர்நலம் பேசிநின்றாய் நோய்பட்ட தமிழுக்கு வைத்தியமும் கொடுத்திட்டாய் பாயும் இடமெல்லாம் வாழ்வளிக்கும் காவேரிபோல் சாயும் இடமெல்லாம் வாழவைத்த வான்குமாரா ஓயும் போதும் உன்பெருமை காட்டிவிட்டாய் ஓஎன உலகம் கதறுவது கேட்கின்றதா? தமிழ் உன்னால் வளம் பெற்றது தமிழகம் உன்னால் நலம் […]

செத்தபின்னும் வெறுப்பு காட்டுவது உலகில் புதிதல்ல‌

யாசர் அராபத் எனும் போராளியின் விருப்பம் கிழக்கு ஜெருசலேமில் தன்னை அடக்க செய்யவேண்டும் என்பது ஆனால் இஸ்ரேலிய அரசு மறுத்தது என்றேனும் ஒரு நாள் கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீன் வசமாகும் அதுவரை அராபத் ரமலாவில் தூங்கட்டும் என அவரை காங்கரீட் பெட்டியில் வைத்து ரமல்லாவில் தற்காலிக அடக்கம் செய்திருக்கின்றார்கள் நாளை கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீன் வசமாகும்பொழுது அராபத் கல்லறை அங்கு மாற்றபடும் போராளிகள் மீது மேல் வர்க்கம் செத்தபின்னும் வெறுப்பு காட்டுவது உலகில் புதிதல்ல‌

ஜெயாவிற்கு ஒரு நீதி , கலைஞருக்கு ஒரு நீதியா?

பதவியில் இருக்கும் முதல்வர்களுக்கு தான் மெரினா கடற்கரையில் இடம் தர வேண்டும் : ஆடிட்டர் குருமூர்த்தி அண்ணாவோ, ராமசந்திரனோ, ஜெயாவோ செத்தவுடன் அவர்கள் முன்னாள் முதல்வரே அண்ணா அடக்கம் செய்யபடும்பொழுது நெடுஞ்செழியன் தற்காலிக முதலமைச்சர் ஜெயா அடக்கம் செய்யபடும்பொழுது பன்னீர் தற்காலிக முதலமைச்சர் பின் எப்படி ஜெயாவினை அடக்கம் செய்தார்கள்? ஜெயா படுக்கையில் வீழ்ந்து 75 நாட்களாக மக்கள் முன் வரவில்லை, அன்றைய ஆளுநரின் நியமணத்தின் படி பன்னீர்தான் முதல்வர் பின் எப்படி ஜெயா அங்கே புதைக்கபட்டார்? […]

அண்ணா அருகில் இடம் இல்லாவிட்டால் எப்படி?

கொஞ்சமும் அரசியல் அனுபவம் இல்லை என்பதையும், முதல்வராக இருக்க தகுதியற்றவர் என்பதையும் பழனிச்சாமி நிரூபித்துகொண்டிருக்கின்றார் தமிழகம் அதன் அரசியல் தலைமகனை இழந்திருக்கின்றது, ஒரு வித சோகமும் ஆற்றாமையும் வெறுமையும் சூழ்ந்திருக்கும் நேரமிது அந்த மிக உணர்ச்சி கொந்தளிப்பான நேரத்தை பக்குவமாக கையாளாமல் பெரும் வன்முறை வெடிக்கும் அளவிற்கு சிக்கலாக்கி கொண்டிருக்கின்றார் இது சாதாரண விஷயம் அல்ல‌ அண்ணாவினை மெரினாவில் புதைத்தது கலைஞர், ராமசந்திரன் புதைக்கபடும் பொழுது கொஞ்சமும் எதிர்ப்பு காட்டாமல் கண்ணீர் விட்டவர் கலைஞர் அவருக்கே அண்ணா […]

கலைஞர் : பெரும் சகாப்தம் ஒன்று முடிந்துவிட்டது

தமிழக அரசியலில் மட்டும் அல்ல, இந்திய அரசியலிலே பெரும் சகாப்தம் ஒன்று முடிந்துவிட்டது பலநூறு ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய சக்திகளை நொறுக்கி, பாட்டாளிகளின் குரலாக ஒலித்த அந்த குரல் நின்றுவிட்டது அடிதட்டு மக்களை எல்லாம் ஏற்றிவிட்ட ஏணி ஒன்று சரிந்துவிட்டது, ஏராளமானோரை கரை சேர்த்த தோணி உடைந்துவிட்டது அறியாமை நீக்க, மான உணர்வூட்ட, அடிமைதளை களைய, தமிழர் தன் நிலை அறிய நீண்ட பயணம் செய்த கால்கள் இன்று ஒய்வுக்கு சென்றுவிட்டது சிந்தனை கலங்குகின்றது, எழுத்து நடுங்குகின்றது, […]

ஸ்டாலின் அழகிரி மோதல் உச்சத்தில் தெரிகின்றது

கலைஞரின் உடல்நிலை சரியில்லை என்பது பழையவிஷயம், அதைவிட மகா முக்கியமான விஷயம் என்பது கவனிக்கபடுகின்றது அதாவது ஸ்டாலின் அழகிரி மோதல் உச்சத்தில் தெரிகின்றது, இருவரும் அங்குதான் இருக்கின்றார்கள் ஆனால் சேர்ந்து அறிக்கை விட்டதாகவோ, இருவரும் ஒன்றாக கலைஞர் உடல்நிலை பற்றி பேசியதாகவோ படமில்லை படம் என்ன? பேனர் கூட இல்லை ஆக பிரச்சினை வெடித்திருப்பது தெரிகின்றது, இதில் ஆங்காங்கே வெடியினையும் கொழுத்தி போடுகின்றார்கள் அழகிரி அந்த பதவி, இந்த பதவி எல்லாம் கேட்கின்றார் என ஆளாளுக்கு ஆருடங்கள் […]

1950, 60 அரசியலை ஆழ யோசியுங்கள்

காமராஜரை கலைஞர் ஒழித்தார், கலைஞர் காமராஜரை சரித்தார் என்றெல்லாம் புது கதையினை தும்பிகள் சொல்ல தொடங்கிவிட்டன‌ காமராஜர் அப்பழுக்கற்றவர் என்பதில் சந்தேகமில்லை, என்றாவது திமுக அவர் மேல் ஊழல் குற்றசாட்டோ இல்லை மாபெரும் பொய்களை சொன்னதா? இல்லை, கட்சிகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளைத்தான் சொன்னார்களே அன்றி வேறல்ல‌ காமராஜர் வாழ்வென்ன? முதலிலே அவரிடம் முதல்வர் பொறுப்பினை காங்கிரசார் கொடுத்தார்களா? இல்லை. நடந்தது என்ன? காங்கிரசில் அன்றே கோஷ்டிபூசல் அதாவது சுதந்திரத்திற்கு முன்பே தமிழக காங்கிரஸ் கோஷ்டி தகறாறால் […]

கலைஞரின் நகர்வுகள் அறிவார்ந்தவை

ஈழம் பற்றி என்ன சொன்னாலும் யோசிக்காத அல்லது யோசிக்க விரும்பாத சில கோஷ்டிகள், யோசிக்க அறிவில்லாத கோஷ்டிகள் இறுதியில் பிடித்துகொள்வது அவர் ஏன் இரண்டுமணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார்? இருக்காமல் போனால் என்ன? அடேய் பதர்களா, உங்களுக்கு நோக்கமெல்லாம் பிரபாகரனை காப்பாற்ற வேண்டும் என்பது, அது பழனிச்சாமி பிரதமர் ஆவதை போல முடியாத விஷயம் என்பது கலைஞருக்கு தெரியாதா? ஆனால் அவனிடம் சிக்கிய மக்களை காப்பாற்ற முயன்றார், தன்னால் முடிந்தவரை ஒரு அவகாசம் கொடுத்தார் அந்த உண்ணாவிரதத்தின் […]